பேஸ்புக் விதிகளின் படி செயல்படுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், பேஸ்புக் அளிக்கும் அம்சங்களையே நம் தகவல் தொடர்புக்கான முக்கிய வழியாக கருதி செயல்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. இவ்வாறு செய்வதன் மூலம் பேஸ்புக் விரிக்கும் வலையில் நாம் சிக்கி கொள்வதாக நினைக்கிறேன்.
நண்பர்களை பிளாக் செய்யும் வசதியை இதற்கான உதாரணமாக சொல்லலாம். தீவிர விவாதத்தின் போது பலரும், தங்களுக்கு உடன்பாடில்லாத கருத்து அல்லது எதிர் கருத்து தெரிவித்தவர்களை பிளாக் செய்துவிட்டதாக பெருமையுடன் குறிப்பிடுவதை பலமுறை பார்த்திருக்கிறேன். கருத்து செயல்பாட்டாளர்கள் மட்டும் அல்ல, முன்னணி எழுத்தாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
இப்படி பிளாக் செய்வதை தங்கள் நிலைப்பாட்டின் பிரகடனமாக அல்லது கொள்கை உறுதியாக நினைத்துக்கொள்வதில் உள்ள சிக்கல் பற்றி தனியே எழுதுகிறேன். இந்த பதிவில், கட்டுரை இணைப்புகளை சுட்டிக்காட்டுவது எனில், அதை பதிவுடன் இணைக்காமல், முதல் கமெண்டில் இணைக்கும் பழக்கம் பற்றி பேசலாம் என நினைக்கிறேன்.
இப்படி இணைப்புகளை கமெண்டில் சுட்டிக்காட்டப்படுவதை பல முறை கவனித்திருக்கிறேன் என்றாலும், இதற்கான காரணத்தை அறிந்ததில்லை. அண்மையில் நண்பர் ஒருவரின் நிலைத்தகவல் விவாத சரட்டில், கமெண்டில் இணைப்பு அளிக்கப்படுவதன் தாக்கம் பற்றி கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. கமெண்டில் இணைப்புகளை சுட்டிக்காட்டினால் தான் அந்த பதிவு கவனத்தை பெறும் என்பது போல தெரிவிக்கப்பட்டிருந்ததை படித்ததும் வியப்பாகவும் இருந்தது.
இப்படி எல்லாம் உத்திகள் இருகிறதா? எனும் யோசனையோடு, இது தொடர்பான தகவல்களை தேடிப்பார்த்தேன். ஒரு கூகுள் தேடலில் ஒரு சில கட்டுரைகளை படித்ததுமே, இது உத்தி அல்ல வெறும் தவறான நம்பிக்கை என்று தெரிந்துவிட்டது.
ஆம், பேஸ்புக் பதிவில் இணைப்புகளை பகிராமல், கமெண்டில் பகிர்வதால் எந்த வேறுபாடும் உண்டாவதில்லை என்பதே உண்மை.
பேஸ்புக், நம்முடைய பதிவுகள் எத்தனை பேருக்கு தெரிய வேண்டும் என்பதை அல்கோரிதம் மூலம் தீர்மானித்தாலும், அந்த அல்கோரிதம் எப்படி செயல்படிகிறது என்பது கணிக்க முடியாததாகவே இருக்கிறது. எனவே, இணைப்புகளை கொண்ட பதிவுகளை பேஸ்புக் கீழே தள்ளிவிடுகிறது என்பது தவறான நம்பிக்கை தான். இதனால் பெரிதான எதுவும் ஆகிவிடுவதில்லை.
சமூக ஊடக மார்க்கெட்டிங்கில் ஈடுபடுபவர்கள், பதிவுகளில் பலவிதமான விளம்பர இணைப்புகளை வெளியிடுவதை பேஸ்புக் அல்கோரிதம் பொருட்படுத்துவதில்லை. எனவே, இதை எதிர்கொள்வதற்காக மார்க்கெட்டிங் நிறுவனங்கள், பதிவுகளில் இணைப்பை வெளியிடாமல், கமெண்டில் இணைப்புகளை வெளியிடும் உத்தியை பின்பற்றி வருகின்றனர்.
பேஸ்புக்கை பொறுத்தவரை இதுவே ஒரு உளுத்துப்போன உத்தி என்றாகிவிட்டாலும், நல்ல உள்ளடக்கத்தை பகிர்பவர்கள் கூட, தங்கள் பதிவின் வீச்சு குறையக்கூடாது எனும் அச்சத்தில், இணைப்பை பதிவுடன் அளிக்காமல் கமெண்டில் அளிக்கின்றனர். இது அவசியமற்றது என்பது மட்டும் அல்ல, பல நேரங்களில் இணைப்புகள் கமெண்டில் மூழ்கி காணமால போகலாம் என்பதோடு, பதிவு பகிரப்படும் போது இணைப்பில்லாமல் பகிரப்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே, லைக்குகள் பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல், நல்ல உள்ளட்டகத்தை பகிருங்கள். இணைப்பு பயனுள்ளது எனில் பதிவுடன் இணையுங்கள்.
இது தொடர்பான விளக்கம் அளிக்கும் கட்டுரை இணைப்பு, கமெண்டில் இல்லை,இங்கேயே: https://anspachmedia.com/stop-saying-see-link-in-comments/