இணைய வரலாற்றை திரும்பி பார்க்கும் போது ஹாட்மெயிலும், அதை உருவாக்கிய சபீர் பாட்டியாவும் மறக்க முடியாத பெயர்களாக மின்னிக்கொண்டிருப்பதை உணர்லாம். அதிலும் குறிப்பாக 1990 களின் பின் பகுதியில் இணையத்தை அறிமுகம் செய்து கொண்டவர்களுக்கு ஹாட்மெயிலும், சபீர் பாட்டியாவும், மறக்க முடியாத பெயர்கள்.
ஹாட்மெயில் அறிமுகமான காலத்தில், அதில் கணக்கு வைத்திருப்பது எத்தனை பெருமையான விஷயமாக இருந்தது என்பதை இப்போது நினைத்து பார்த்தால் வியப்பாக இருக்கும். ஹாட்மெயில் முகவரி பெருமைக்குறியதாக இருந்தது மட்டும் அல்ல, இணையவாசிகளை உற்சாகத்தில் ஆழ்த்துவதாகவும் அமைந்தது.
1996 ல் அறிமுகமான ஹாட்மெயில், அடுத்த ஆண்டே மைக்ரோசாப்ட்டால் விலைக்கு வாங்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஹாட்மெயில் இணையத்தில் ஏற்படுத்திய அதிர்வு அலைகள் அசாத்தியமானது. அது மட்டும் அல்ல, ஹாட்மெயில் சேவையை விற்பதற்கு முன், சபீர் பாட்டியா மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் கெத்து காட்டிய விதம், இளம் தொழிலதிபர்கள் கனவிலும் நினைக்க முடியாதது. அந்த அளவுக்கு ஹாட்மெயிலின் வெற்றி அசத்தலாக இருந்தது.
இத்தனைக்கும், ஹாட்மெயில், இமெயிலை கண்டுபிடித்த நிறுவனம் கிடையாது. ஹாட்மெயில் அறிமுகம் ஆவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே இணையத்தில் இமெயில் அறிமுகம் ஆகிவிட்டது. அதோடு, 1990 களின் துவக்கத்தில் இணையத்தில் பலரும் இமெயில் சேவையை பயன்படுத்திக்கொண்டிருந்தனர்.
இருப்பினும், ஹாட்மெயிலின் அறிமுகம் இணையவாசிகள் கொண்டாடக்கூடியதாக அமைந்தது என்றால் அதற்கு காரணம், அது இமெயிலை சொந்த கம்ப்யூட்டரில் இருந்து விடுவித்தது தான். அதாவது, எந்த நேரத்தில் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் இமெயிலை அணுகும் வசதியை சாத்தியமாக்கியது. இத்தகைய வசதியை அளித்த முதல் நிறுவனம் ஹாட்மெயில் தான்.
இணைய பாதையில், இந்த அம்சத்தை முக்கிய மைல்கல் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், அதற்கு முன், இமெயில் இருந்தாலும் அது பெரும்பாலும், இணைய சேவை வழங்கும் ஐ.எஸ்.பி நிறுவனங்களால் வழங்கப்படுவதாக இருந்தது. மேலும், அது இணையத்தின் மூலம் வழங்கப்பட்டு வந்தது. இதன் பொருள் என்னவெனில், இமெயிலை அணுக இணைய வசதி வேண்டும் என்பது மட்டும் அல்ல, சொந்த கம்ப்யூட்டரில் இருந்து மட்டுமே அதை அணுக முடியும்.
இப்போது கொஞ்சம் இணைய பிளேஷ்பேக் அவசியம். அந்த காலத்தில் இணைய வசதியை நிறுவ வேண்டும் என்றால், ஒரு சி.டியை வாங்கி நிறுவிக்கொள்ள வேண்டும். இணைய வசதிக்கான மென்பொருளில் இருந்து, மோடம் வாயிலாக டயல் அப் சேவை மூலம் இணையத்தை அணுக வேண்டும். புதிதாக இமெயில் வந்திருந்தால், உங்களுக்கு இமெயில் வந்திருக்கு எனும் தகவல் தெரிவிக்கப்படும். அந்த காலத்தில் கோலோச்சிய இணைய சேவை நிறுவனமான, ஏ.ஒ.எல் நிறுவனத்தின் அடையாளங்களில் ஒன்றாக இந்த ’யூ ஹாவ் காட் மெயில்’ வாசகம் கருதப்படுகிறது.
இமெயில் வந்த பிறகு அதை கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்து, இணைய இணைப்பை துண்டித்துவிட்டு பின்னர் ஆப்லைனில் வாசித்துக்கொள்ளலாம். இப்போது போல, அந்த காலத்தில் ஆல்வேஸ் ஆன் வசதி எல்லாம் கிடையாது. இணைய வசதிக்கான கட்டணம் அதிகம் என்பதால், பலரும் இமெயிலை டைப் செய்து முடித்துவிட்டு, அதை அனுப்பும் போது இணைய வசதியை ஏற்படுத்திக்கொள்ளும் சிக்கனத்தை கடைப்பிடித்திருக்கின்றனர்.
அப்படியா இருந்தது என இப்போது அதிசயமாக கேட்கலாம். அது மட்டும் அல்ல, இணைய இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டரில் இருந்து மட்டுமே இமெயிலை அணுக முடியும். அலுவலக கம்ப்யூட்டருக்கு வந்த மெயிலை எல்லாம் வீட்டில் வந்து பார்க்க முடியாது. அதே போல, வீட்டு கம்ப்யூட்டரில் வந்த தனிப்பட்ட மெயிலை அலுவலகத்தில் பார்க்க முடியாது.
இந்த நிலையில் தான் ஹாட்மெயில், வெப்மெயிலாக அறிமுகமானது. அதாவது, வலையில் செயல்படும் இணையதளத்தின் வாயிலாக இமெயிலை அணுகும் வசதியுடன் ஹாட்மெயில் அறிமுகமானது. எனவே, ஹாட்மெயிலில் கணக்கு துவங்கினால், ஒருவர் தனக்கான மெயிலை, எந்த கம்ப்யூட்டரில் இருந்து எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் எனும் சுதந்திரம் கிடைத்தது.
இந்த சுதந்திரம் தான் ஹாட்மெயில் சேவையை தெறிக்க விட்டது. இதை உருவாக்கிய இந்திய அமெரிக்கரான சபீர் பாட்டியாவும் இப்படி ஒரு வரவேற்பை எதிர்பார்த்திருந்தார். அதனால் தான், தன்னுடைய அமெரிக்க சகா முதன் முதலில், வலை மூலமான இமெயில் சேவையை உருவாக்கலாம் எனும் யோசனை தெரிவித்த போது, பாட்டியா உடனே பதற்றமாகி, இந்த யோசனை பற்றி மேல்கொண்டு ஒரு வார்த்தை கூட போனில் பேச வேண்டாம், நேரில் வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என கூறினார். அதன் பிறகு நண்பர்கள் இருவரும் இந்த யோசனை பற்றி விரிவாக விவாதித்து அலைந்து திரிந்து நிதி திரட்டி ஹாட்மெயில் சேவையை அறிமுகம் செய்தனர்.
அறிமுகமான வேகத்தில் ஹாட்மெயிலுக்கு ஜாக்பாட் அடித்தது. இலவச சேவையான ஹாட்மெயிலில் கணக்கு பெற்றவர்கள் அதன் எளிமை மற்றும் எங்கிருந்தும் பயன்படுத்தும் தன்மையால் ஈர்க்கப்பட்டு, தங்கள் நண்பர்களுக்கு அந்த சேவையை பரிந்துரைத்தனர். அதற்கேற்ப ஹாட்மெயிலில் கீழ்ப்பக்கத்தில், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வசதியும் இருந்தது. விளைவு ஹாட்மெயில் பரிந்துரையை பெற்றவர்கள் எல்லாம், அதை தங்கள் நண்பர்களுக்கு பரிந்துரைத்தனர். அவர்கள் தங்கள் பங்கிற்கு பரிந்துரைத்தனர். இப்படியாக முதல் சில நாட்களிலேயே ஹாட்மெயில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றது.
ஆக, இமெயில் சேவையான ஹாட்மெயில் இமெயில் வாயிலாகவே இணையத்தில் வைரலாக பரவி புகழ் பெற்றது. அநேகமாக இணையத்தின் முதல் வைரல் நிகழ்வுகளில் ஒன்றாக ஹாட்மெயிலும் இருக்கலாம்.
ஹாட்மெயிலின் வெற்றியை தொடர்ந்து, ராக்கெட் மெயில் எனும் நிறுவனம் இதே போன்ற இலவச சேவையை வழங்கியது. இந்த சேவையை யாஹூ நிறுவனம் விலைக்கு வாங்கியது,. அதன் பிறகு, இணைடதளம் மூலம் இமெயில் வழங்கும் வசதி மிகவும் பிரபலமாகி, பரவலானது. இதை துவக்கி வைத்தது ஹாட்மெயில் தான்.
ஹாட்மெயிலின் அபார வெற்றி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்தது. அதன் விளைவாக, மைக்ரோசாப்ட், ஹாட்மெயிலை விலைக்கு வாங்கி தனது அவுட்லுக் இமெயில் சேவையுடன் இணைத்துக்கொண்டது என்றாலும், ஹாட்மெயிலை விற்கும் போது, அதன் நிறுவனர் சபீர் பாட்டியா உறுதியாக பேரம் பேசியது சிலிக்கான் வேலி காணாத வெற்றிக்கதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மைக்ரோசாப்ட் கேட்ட விலையை அலட்சியம் செய்து, தான் சொன்ன விலையில் விடாப்படியாக இருந்த பாட்டியா, ஒரு கட்டத்தில் மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்சே நேரில் வந்து பேசிய போதும், தனது விலையில் உறுதியாக நின்று வெற்றி பெற்றார்.
சபீர் பாட்டியா அதன் பிறகு பல இணைய நிறுவனங்கள் துவக்கினார். எந்த நிறுவனமும் ஹாட்மெயில் அளவுக்கு வெற்றிபெறவில்லை என்றாலும், இமெயிலை எல்லோருக்கும் கொண்டு சேர்த்ததில் ஹாட்மெயிலின் பங்கு மகத்தானது. அதற்காகவே ஹாட்மெயிலுடன் சபீர் பாட்டியாவும் கொண்டாடப்பட வேண்டியவராகிறார்.
—
தமிழ் இந்துவில் எழுதும் வலை 3.0 தொடரில் இடம் பெற்ற பகுதியின் சுருக்கப்படாத வடிவம்