கார் இஞ்சின் எப்படி வேலை செய்கிறது?
செல்போன்கள் எப்படி வேலை செய்கின்றன?
டீசல் இஞ்சின் எப்படி வேலை செய்கிறது?
சிடிக்கள் எப்படி வேலை செய்கின்றன?
பிரிட்ஜ் எப்படி வேலை செய்கிறது?
இதே போல, எப்படி எனும் கேள்வி அடிப்படையிலான விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கிறது எனில், உங்களைப்போன்றவர்களின் கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ’ஹவ் ஸ்டப் ஒர்க்ஸ்.காம்’ இணையதளம்.
இந்த தளத்தை ’எப்படி’ எனும் கேள்விக்களுக்கான கலைக்களஞ்சியம் எனலாம்.
எப்படி? எனும் கேள்வி எல்லோருக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏற்படுவது தான். இது போன்ற கேள்விகளுக்கு விரிவாக பதில் அளிக்கும் கட்டுரைகளும் நாளிதழ்களிலும், பத்திரிகைகளிலும் அவ்வப்போது எழுதப்படுவதும் வழக்கம். உதாரணமாக தங்கத்தின் தூய்மையை அறிவது எப்படி? எனும் கட்டுரையோ அல்லது சுற்றுலாவுக்கு திட்டமிடுவது எப்படி? என்றோ தலையில் கட்டுரைகள் வெளியாகலாம். அறிவியலில் ஆர்வம் கொண்டவர்களுக்கு, குறிப்பாக பொறியியலில் ஆர்வம் கொண்டவர்களுக்கு, ஒரு இயந்திரம் அல்லது உபகரணம் எப்படி வேலை செய்கிறது என அறிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்படலாம்.
இது போன்ற கேள்விகளுக்கு பதில் தேடுவது கொஞ்சம் கடினமானது. ஒரு சில புத்தகங்களில் இந்த கேள்விகளுக்கான பதில் ஒளிந்திருக்கலாம். ஒரு சில தலைப்புகளில் இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க கையேடு அல்லது புத்தகம் இருக்கலாம். எப்படி இருந்தாலும் இவற்றை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.
இதற்கு மாறாக ஒரே இடத்தில், இது போன்ற கேள்விகளுக்கு எளிதாக பதில் தெரிந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு தளமாக உருவானது தான் ஹவ் ஸ்டப் ஒர்க்ஸ்.காம்.
1998 துவக்கத்தில் அறிமுகமான போது, இந்த தளம் இணையத்தில் ஏற்படுத்திய எதிர்பார்ப்பும், உற்சாகமும் அசாத்தியமானது. தகவல் சுரங்கமாக இணையத்தின் பயன்பாட்டை உணர்த்திய ஆரம்ப கால மைல்கல் தளங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது. இணையம் எனும் அற்புதத்தை எப்படி வர்ணிப்பது, இணையத்தின் எல்லையில்லா பயன்பாட்டுத்தன்மையை எப்படி உணர்த்துவது? என்பது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதிலாக அமைந்த முன்னோடி தளங்களில் ஒன்றாகவும் இது அமைந்தது.
அதோடு இணையத்தில் என்ன செய்யலாம் அல்லது என்ன பெறலாம் என்பதற்கான அருமையான உதாரணமாகவும் இந்த தளம் அமைந்தது. தகவல் தொடர்பு, அரட்டை வசதி, செய்தி அறியல் இவற்றை எல்லாம் தாண்டி, இணையத்தில் இன்னும் இருக்கின்றன என்பதை உணர்த்தும் தளங்களில் ஒன்றாகவும் இது அமைந்தது.
உலகில் உங்களைச்சுற்றியுள்ள பொருட்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை அறிவதற்கான அற்புதமான இடம் என தன்னை வரணித்துக்கொண்ட இந்த தளம், அதை நிருபித்துக்காட்டுவது போல, இந்த தளம், மின்சார் மோட்டார்கள் எப்படி வேலை செய்கின்றன? ராக்கெட் இஞ்சின் எப்படி செயல்படுகிறது? எனும் தலைப்பில் அவற்றுக்கான விளக்கத்தை எளிமையான முறையில் அளித்தது.
இந்த விளக்க கட்டுரைகள் எவருக்கும் ஆர்வம் அளிக்கும் முறையில் அமைந்திருந்ததோடு, தேவையான வரைபடங்களுடன், தெளிவாக புரியும் வகையில் எளிமையாகவும் அமைந்திருந்தன. அறிவியல், பொறியியல் சங்கதிகள் தான் என்றாலும், வழக்கமான பாடப்புத்தக வடிவில் அசர வைக்காமல், சுவாரஸ்யமாக படித்து முடிக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தன. எனவே கட்டுரையை படித்ததும் ஒரு திருப்தி உண்டாவையை உணரலாம். இந்த மனநிறைவு, தளத்தை மற்றவர்களுக்கு பரிந்துரைக்கவும் வைத்தது. இப்படி தான் இந்த தளம் பிரபலமாகவும் செய்தது.
அறிமுகமான அடுத்த ஆண்டே இந்த தளம் கூல் சைட் ஆப் த இயர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. 2002 ல் டைம் இதழ் சிறந்த 50 தளங்களில் ஒன்றாக பட்டியலிட்டு அறிமுகம் செய்தது. இணையத்தில் தவறாமல் பார்க்க வேண்டிய தளமாக பலரும் இதை புக்மார்க் செய்து கொண்டனர்.
இந்த தளத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், அறிந்து கொள்ளும் ஆர்வத்திற்கு பதிலாக அமைந்த இந்த இணையதளம், மார்ஷல் பிரைன் ( ) எனும் தனிமனிதரால் துவக்கப்பட்டது என்பது தான். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த பிரைன் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக இந்த இணையதளத்தை துவக்கினார். ஏற்கனவே தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் கொண்டிருந்த பிரைன், ஏற்கனவே பல புத்தகங்களை எழுதிய நிலையில், புதிதாக ஒரு புத்தகம் எழுத விரும்பாமல், வலையில் சுவாரஸ்யமாக எதையாவது செய்யத்துவங்கினார்.
பொருட்கள் அல்லது கருவிகள் செயல்படும் விதம் பற்றி அறியும் ஆர்வம் பலருக்கு இருக்கலாம் எனும் எண்ணத்தில் அவர் ஹவ் ஸ்டப் ஒர்க்ஸ் தளத்தை துவக்கி அதில் கட்டுரைகளை வெளியிட்டார். துவக்கத்தில் வாரம் ஒரு எப்படி எனும் விளக்க கட்டுரையை வெளியிட்டு வந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே இந்த தளம் இணையவாசிகள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றது.
தளத்தின் வரவேற்பு அதிகரித்த நிலையில், கட்டுரைகள் எழுத கூடுதலாக சிலரை நியமித்துக்கொண்டார். சில ஆண்டுகள் கழித்து, பிரைன் இந்த தளத்தை வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். அதன் பிறகு இந்த தளம் வேறு சில நிறுவனங்கள் கைமாறினாலும், அதன் ஆதார தன்மைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த தளத்தில் வேறு பல சுவாரஸ்யமான அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இன்று எப்படி? எனும் ஆதார கேள்விக்கான மாபெரும் கலைக்களஞ்சியமாக இந்த தளம் வளர்ச்சி பெற்றுள்ளது. அதன் வடிவமைப்பிலும் இந்த பரிணாம வளர்ச்சியை உணரலாம்.
பிரைன், ஹவ் ஸ்டவ் ஒர்க்ஸ் தளத்தின் செயல்பாடுகளில் இருந்து விலகி கொண்டாலும் அவரது உலகம் சுவாரஸ்யமாக இருக்கிறது. அவரது தனிப்பட்ட இணையதளத்தில் அவரைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.
* https://www.howstuffworks.com/