‘ஐ.எம்.டி.பி’, இணையத்தின் செல்வாக்கு இணையதளங்களில் ஒன்று மட்டும் அல்ல, இணையத்தின் ஆரம்ப கால தளங்களிலும் ஒன்று. உண்மையில் அது ஆதிகாலத்து இணையதளம். அதாவது வலை உருவாவதற்கு முன்பே அந்த அந்த தளம் வேறு வடிவில் உருவாக்கப்பட்டுவிட்டது.
ஆனால், திரைப்பட ரசிகர்களைப்பொருத்தவரை, ஐ.எம்.டி.பி தளத்திற்கு அறிமுகமும் தேவையில்லை, அதை கொண்டாட அடைமொழிகளும் தேவையில்லை: ஏனெனில் அது அவர்களின் அபிமான இணையதளம்.
ஐஎம்டிபி ரசிகர்களுக்கான இணையதளம் மட்டும் அல்ல, ஒருவிதத்தில் ரசிகர்களின் பங்களிப்பாலும் வளர்ந்த இணையதளமும் கூட. விக்கிபீடியா மற்றும் இணைய பங்களிப்பை கொண்டாடத்துவங்கிய வெப் 2.0 இயக்கம் தோன்றுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, அந்த தளம் ரசிகர்கள் பங்களிப்பை ஊக்குவித்து அவர்களால் வளர்ந்தது.
இந்த ரசிகர்கள் ராஜ்ஜியத்தை துவக்கியவரும் ஒரு அதிதீவிர திரைப்பட ரசிகர் தான். அவர் கர்னல் நீதம் ( Col Needham).
பிரட்டனைச்சேர்ந்த நீதம், கம்ப்யூட்டர்களோடு, திரைப்படங்களோடும் வளர்ந்தவர். 1979 ல், 12 வயதிலேயே கம்ப்யூட்டரை பயன்படுத்த துவங்கிவிட்டார். அடுத்த சில ஆண்டுகளில், 1985 ல் அவர் சொந்தமாக இமெயில் முகவரியும் பெற்றிருந்தார்.
ஒரு பக்கம் கம்ப்யூட்டர் புரட்சி, இன்னொரு பக்கம் திரைப்புட புரட்சி, இரண்டுடனும் வளர்ந்தேன் என்று பேட்டி ஒன்றில் நீதம் உற்சாகமாக கூறியிருக்கிறார். கம்ப்யூட்டர் புரட்சி என்று அவர் சொல்வது பி.சி எனப்படும் தனிப்பட்ட கம்ப்யூட்டர்களை எழுச்சியை என்றால், திரைப்பட புரட்சி என அவர் குறிப்பிடுவது வி.எச்.எஸ் டேப்பில் படம் பார்க்கும் வசதியை.
திரையரங்கிற்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடியே படம் பார்க்கும் வாய்ப்பை இந்த டேப் உண்டாக்கி தந்ததை ரசித்து மகிழ்ந்தபடி நீதமின் இளமை பருவம் கழிந்தது. தீவிர திரைப்பட ரசிகராக இருந்தவர், விரும்பிய படங்களை எல்லாம் பார்த்து ரசித்ததோடு, தான் பார்த்த படங்கள் தொடர்பான விவரங்களையும் குறித்து வைக்கும் வழக்கம் கொண்டிருந்தார். எந்த நடிகருடைய படம், அதில் நடித்துள்ளவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் போன்ற விவரங்களை அவர் ஒரு டைரியில் குறித்தி வைக்கத்துவங்கினார்.
கம்ப்யூட்டர் பிரியர் அல்லவா, சில வாரங்களில் எல்லாம், காகித டைரியில் இருந்த விவரங்களை கம்ப்யூட்டரில் ஒரு கோப்பை உருவாக்கி அதில் டைப் செய்து வைக்கத்துவங்கினார். இணையம், இமெயிலில் பரிட்சயம் இருந்ததால், தனது திரைப்பட விவரங்களை இமெயில் குழுவிலும் பகிர்ந்து கொள்ளத்துவங்கினார். சக திரைப்பட ரசிகர்கள் மத்தியில் அவரது பட்டியலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அவற்றை ரசித்ததோடு, அவர்களில் சிலர் தங்களுக்கு தெரிந்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர். 1980 களின் இறுதியில் இப்படி மாதம் ஒரு திரைப்பட மெயிலை அனுப்பிக்கொண்டிருந்தார்.
இந்த இமெயில் விவாதம் அதன் உறுப்பினர்கள் மத்தியில் பிரபலமான நிலையில், ஒரு கட்டத்தில் உறுப்பினர் ஒருவர், இந்த தகவல்களை தேடும் வசதி இருந்தால் எப்படி இருக்கும் என கேட்டிருந்தார். நீதமிற்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. அவருக்கு புரோகிராமிங்கும் தெரியும் என்பதால், இமெயிலில் இடம்பெறும் திரைப்பட தகவல்களை ஒரு பட்டியலாக்கி, அதில் தேடும் வசதியை ஏற்படுத்தி, மொத்தமாக ஒரு மென்பொருள் தொகுப்பாக உருவாக்கினார். இந்த மென்பொருளை இணையத்தின் மூலம் பகிர்ந்து கொண்டார். உறுப்பினர்கள் அதை தங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோடு செய்து பயன்படுத்தலாம்.
சக ரசிகர்கள் பங்களிப்போடு, இந்த மென்பொருள் வளர்ச்சி அடைந்தது. “rec.arts.movies movie database”,எனும் யூஸ்நெட் செய்தி குழு முகவரியில் இந்த மென்பொருள் செயல்பட்டு வந்தது. 1993 ல் வலை அறிமுகமான போது, நண்பர்கள் உதவியோடு, இந்த மென்பொருளில் இருந்த தகவல்களை அப்படியே வலைக்கு மாற்றினார். அப்போது, கார்டிப் மூவி டேட்டாபேஸ் எனும் பெயரில் இந்த தளம் செயல்பட்டு வந்தது. இணையத்தின் முதல் 100 தளங்களில் ஒன்றாக இது அமைந்தது. ராப் ஹார்டில் என்பவர் இதற்கான இடைமுகத்தை உருவாக்கியிருந்தார்.
வலைக்கு மாறியதை அடுத்து உறுப்பினர்கள் தகவல்களை இமெயிலில் சமர்பிக்க வேண்டும் எனும் நிலை மாறி, தளத்திலேயே இடம்பெற வைக்கும் வசதி உண்டானது. ரசிகர்களின் பங்களிப்பு அதிகரித்த நிலையில், தகவல்கள் சரி பார்க்கப்பட்டு பதிவேற்றப்பட்டன. தகவல்கள் குவிந்த நிலையில் புதிய பிரிவுகளும் உருவாக்கப்பட்டன.
1996 ம் ஆண்டு, இந்த தளம், இண்டெர்நெட் மூவி டேட்டாபேஸ் என பெயர் மாற்றப்பட்டு, இணையத்தில் ஐஎம்டிபியாக அறிமுகமானது. ஐஎம்டிபி எனும் பெயரில் நிறுவனமும் அமைக்கப்பட்டது. 1995 ல் இணையம் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாகத்துவங்கிய நிலையில், தங்கள் தளத்திற்கு வருகை தரும் ரசிகர்களின் எண்ணிக்கை வார்ந்தோறும் அதிகரித்து வந்த நிலையில், அந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவுக்கு முன்னர் ஐஎம்டிபி அறிமுகமானது.
அதன் பிறகு, இணையத்தை நோக்கி வந்த திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானது. திரைப்படங்கள் வெளியான ஆண்டு, அதில் நடித்தவர்கள், கதைச்சுருக்கம், இன்னும் பிற தகவல்கள் என இருந்த ஐஎம்டிபி திரைப்பட ரசிகர்களின் அபிமான தளமாக மாறியது. ரசிகர்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை சேர்க்க முடிந்ததும் இந்த தளத்தை மேலும் வளர்த்தெடுத்தது. ரசிகர்கள் திரைப்படம் சார்ந்த உரையாடலையும் மேற்கொள்ள முடிந்ததால் அவர்களுக்கான இணைய சமூகமாகவும் இந்த தளம் உருவானது.
திரைப்படம் தொடர்பான சந்தேகமா,. ஐஎம்டிபியை பாருங்கள் என சொல்லும் அளவுக்கு தளம் வளர்ந்தது. திரைப்படங்கள் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான தளமாகவும் அமைந்தது. ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள், நட்சத்திரங்கள் எல்லாம் இணையத்தின் ஆற்றலை புரிந்து கொள்வதற்கு முன்பே, நீதம் இணையத்தில் தனது திரைப்பட ஆர்வத்தை பகிர்ந்து கொண்டு, அதில் சக ரகசிகர்ளையும் இணைத்துக்கொண்டு, ரசிகர்கள் ராஜ்ஜியத்தை உருவாக்கிவிட்டார்.
1998 ம் ஆண்டு அமேசான் நிறுவனம், ஐஎம்டிபி தளத்தை விலைக்கு வாங்கியது. தளத்தை விற்றுவிட்டாலும், அதை தொடர்ந்து பரமாரிக்கும் பொறுப்பை தக்க வைத்துக்கொண்டு அதை ரசிகர்கள் ராஜ்ஜியமாக கட்டிக்காத்து வருகிறார் நீதம்.
இன்று உலகலாவிய திரைப்பட களஞ்சியமாக இந்த தளம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்திய திரைப்படங்களின் தகவல்கள் தேவை என்றாலும் ஐஎம்டிபியில் தேடலாம். திரைப்பட ரசிகர்களை திணறடிக்கும் வகையில் எண்ணற்ற தகவல்களோடு விருந்து படைக்கிறது. ஐஎம்டிபி விமர்சனங்கள், மற்றும் ஐஎம்டிபி ரேட்டிங்கும் ரசிகர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதன் 100 சிறந்த படங்கள் போன்ற பட்டியல்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இன்று ஸ்டீரிமிங் சேவை தொடர்பான தகவல்களை அளிக்கும் அளவுக்கும் வளர்ந்திருக்கிறது.
ஐஎம்டிபி இணையதளம்: https://www.imdb.com/