கியூரியோ (Curio ) செயலியை, செய்திகளை கேட்பதற்கான புதுமையான செயலி என அறிமுகம் செய்தால், செய்திகளை கேட்பதற்கான செயலிகள் தான் ஏற்கனவே இருக்கின்றனவே, இதில் என்ன புதுமை என்று கேட்கத்தோன்றலாம். .புதுமை இல்லாமல் இல்லை.
கியூரொயோ, அச்சில் வெளியாகும் செய்திகளை ஒலி வடிவில் கேட்க வழி செய்கிறது. அதாவது நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளை வாசிக்காமலே கேட்டு தெரிந்து கொள்ள வழி செய்கிறது.
நாளிதழ்களை புரட்டிப்பார்க்க கூட நேரம் இல்லை, ஆனால் உலக நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள், இந்த செயலியை இயக்கி, வானொலி கேட்பது போல செய்திகளை கேட்கலாம்.
சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்கும் தி கார்டியன், எக்கனாமிஸ்ட், புளூம்பர்க், தி வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட நாளிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் இருந்து செய்தி கட்டுரைகளை தேர்வு செய்து வாசிக்கிறது இந்த செயலி.
காரில் சென்ற படி பாட்டு கேட்பது போல, ஆடியோ புத்தகம் கேட்பது போல இந்த செயலி மூலம் செய்திக்கட்டுரைகளை கேட்கலாம்.
உறுப்பினர்களின் ரசனை, விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்த செய்திகளை முன்வைப்பதாக இந்த செயலி தெரிவிக்கிறது. தேர்வு செய்த செய்திக்கட்டுரைகளை குறித்து வைத்து பின்னர் கேட்பது உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.
நீங்கள் விரும்பிய செய்திகளை தேடி கண்டறியும் வசதியும் இருக்கிறது.
இது கட்டண செயலி. ஆனால் அடிப்படை சேவை இலவசமானது. கூடுதல் அம்சங்கள் தேவை எனில் மாதச்சந்தா அல்லது ஆண்டு சந்தா செலுத்த வேண்டும்.
இப்போதைக்கு, இதில் இடம்பெற்றுள்ள தேர்வுகள் குறைவு என்றாலும், ஊடகத்துறையின் எதிர்கால போக்கின் அடையாளமாக இந்த செயலியை கருதலாம்.
செய்தியை வாசிப்பது அல்லது கேட்பது, பார்ப்பது மட்டுமே என்ற நிலை மாறு, ஊடக வடிவங்கள் ஒன்று கலப்பதன் விளைவின் ஒரு அடையாளமாக இந்த செயலி விளங்குகிறது. நாளிதழ் செய்திகளை படிப்பதற்கு பதில் காதால் கேட்கும் வானொலி சாத்தியத்தை இது அளிக்கிறது. அச்சு ஊட்டகத்தின் ஆடியோ வடிவமாக இதை கொள்ளலாம்.
அதே போல, செய்திகளை எல்லாம் திரட்டித்தரும் டெய்லிஹண்ட் போன்ற அக்ரிகேட்டர்கள் மாதிரியை கடந்து, செய்திகளை தேர்வு செய்து வேறு வடிவில் அளிக்கும் செயலியாகவும் இது விளங்குகிறது.
ஊடகங்கள், வாசகர்கள் இரு தரப்பினருக்குமே புதிய வாய்ப்பு இந்த செயலி. வரும் காலத்தில் இது போன்ற செயலிகள் மேலும் பல வடிவங்களில் உருவாக வாய்ப்பிருக்கிறது.
பி.கு: இப்போதே கூட, யுவர்ஸ்டோரி போன்ற தளங்களில், செய்திகளை வாசிப்பதோடு, காதால் கேட்கும் வாய்ப்பும் அளிக்கப்படுவதை பார்க்கலாம். செய்திக்கட்டுரைகள் இடையே கொடுக்கப்பட்டுள்ள, ஆடியோ வாய்ப்பை கிளிக் செய்தால், கட்டுரைகளை ஒலி வடிவில் கேட்கலாம். :
- கியூரியோ செயலி, இந்த ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு செயலிகளில் ஒன்றாக கூகுள் நிறுவனத்தால் பட்டியலிடப்பட்டுள்ளது.
கியூரியோ செயலி பற்றி அறிய: https://www.curio.io/