டிஜிட்டல் குறிப்புகள்- உங்களுக்கு டிஜிட்டல் சொந்த வீடு இருக்கிறதா?

hஇணையத்தில் இப்போது நாமெல்லாம் வீடில்லாதவராக இருக்கிறோம் என்று சொன்னால் கொஞ்சம் திகைப்பாக தான் இருக்கும் அல்லவா! . இதையே கொஞ்சம் மாற்றி, இணையத்தில் நமக்கென ஒரு சொந்த வீடு இருந்தாக வேண்டும் என்று சொன்னால் கேட்பதற்கு இதமாக இருக்கும்.

புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் ’ஹவும்’ (Houm ) இணைய நிறுவனம் இப்படி தான் நம்ப வைக்க முயற்சிக்கிறது. உங்களுக்கு சொந்தமாக டிஜிட்டல் வீடு இல்லை, அதை உருவாக்கி கொள்ளுங்கள் என இந்நிறுவனம் அழைப்பு விடுக்கிறது.

இது ஒரு விற்பனை உத்தி தான் என்றாலும், இதில் உண்மை இல்லாமல் இல்லை என்பதால் ஹோவும் வழங்கும் சேவையை கொஞ்சம் உன்னிப்பாக கவனிக்கலாம்.

அடிப்படையில் ஹவும் அளிப்பது என்னவென்றால், உங்கள் டிஜிட்டல் தரவுகளை எல்லாம் சேமித்து வைப்பதற்காக இணையத்தில் ஓரிடம். உங்களுக்கான ஓரிடம். இந்த இடம் உங்களுக்கான டிஜிட்டல் இல்லம் என்கிறது ஹவும். இந்த இல்லத்தில், உங்கள் டிஜிட்டல் புகைப்படங்கள், டிஜிட்டல் கோப்புகள், வீடியோக்கள் போன்றவற்றை சேமித்து வைக்கலாம். அவற்றை உங்கள் கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்திருக்கலாம்.

இந்த டிஜிட்டல் வீட்டிற்கு, உங்களுக்கு என ஒரு இணைய முகவரி இருக்கும் என்பதால் இந்த இடம் உங்களுக்கு மட்டுமே சொந்தனமானது. அதாவது நிலத்தை பட்டா போட்டு உங்கள் பெயருக்கு மாற்றித்தருவது போல, ஹோவும் உங்களுக்கான டிஜிட்டல் வீட்டை வழங்குகிறது.

100 ஜிபி கொண்ட டிஜிட்டல் வீடு என்கிறது ஹோவும். ஆக, அந்த அளவுக்கு நீங்கள் தரவுகளை சேமித்து வைக்கலாம். இதில் தரவுகள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் சொல்கிறது.

அட, இதை தானே, டிராப்பாக்ஸ் அல்லது கூகுள் டிரைவ் போன்றவற்றில் செய்து கொண்டிருக்கிறோம், இதற்கென தனி இடம் தேவையா என நீங்கள் கேட்கலாம்.

அது தான் விஷயம். டிராப்பாக்ஸ் மற்றும் இன்னும் பிற டிஜிட்டல் சேவைகளில் உங்கள் தரவுகளை நீங்கள் இலவசமாகவே சேமித்து வைக்கலாம். ஆனால், அவற்றுக்கு உரிமையாளர் நீங்கள் இல்லை என்பதே விஷயம். அந்த தரவுகளை கையாளும் பொறுப்பை டிராப்பாக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களே ஏற்கின்றன. அவற்றின் விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை ஏற்க வேண்டியிருக்கும் என்பதால் இந்த தரவுகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்ல முடியாது.

மேலும் இந்த தரவுகளுக்கு சொந்தக்காரர் நீங்கள் என்றாலும், பிரைவசி என சொல்லப்படும் அவற்றின் பாதுகாப்பு நிச்சயம் உங்கள் வசம் கிடையாது. உங்கள் தரவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எப்படி வேண்டுமானால் பயன்படுத்தலாம்.

இவற்றை தரவுகளாக மட்டும் பார்க்காமல், நீங்கள் உருவாக்கும் டிஜிட்டல் சொத்துகள் என பார்த்தால் இதில் உள்ள பிரச்சனை புரியும். தனிப்பட்ட புகைப்படங்கள் போன்ற டிஜிட்டல் சொத்துகளை தனியார் நிறுவன கிளவுட் சேவையில் சேமித்து வைப்பது எந்த அளவு பாதுகாப்பானது என்பது டிஜிட்டல் யுகத்தின் முக்கிய கேள்வி.

இதற்கு தீர்வாக தான், ஹோவும் சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம், பயனாளிகள் தங்கள் டிஜிட்டல் தரவுகளை சேமித்து வைப்பதற்கான டிஜிட்டல் வீட்டை உருவாக்கித்தருவதாக கூறுகிறது. இதை மற்றவர்கள் அணுக முடியாத வகையில் பிரைவசி பாதுகாப்புடன் கையாள முடியும் என்றும் சொல்கிறது.

இது கிட்டத்தட்ட உங்களுக்கான ஹார்ட் டிரைவை பராமரிப்பது போன்றது தான். இதை இணையத்தில் செய்கிறோம். டிஜிட்டல் தகவல்களை ஹார்ட் டிரைவில் பாதுகாப்பாக எடுத்து வைப்பது அவசியம் என வலியுறுத்தப்படுவதால், டிஜிட்டல் தகவல்களை இணையத்தில் தனி வீடு வாங்கி சேமித்து வைப்பதும் தேவையானது தான். அந்த வகையில் ஹோவும் சேவையை புதுயுக தேவை எனலாம்.

ஆனால், ஒன்று ஹோவுமில் நீங்கள் வாங்கும் வீட்டிற்கு மாத வாடகை செலுத்த வேண்டும். 200- 300 ரூபாயாக இந்த கட்டணம் இருக்கிறது. நிச்சயம் உங்கள் டிஜிட்டல் பாதுகாப்பிற்காக இது போன்ற கட்டணங்களை நீங்கள் வருங்காலத்தில் செலுத்த வேண்டியிருக்கும்.

ஹோவும் சேவை, இரண்டு இந்தியர்களால் சிங்கப்பூரைச்சேர்ந்த நிறுவனமாக துவக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் முன்னோட்ட சேவையாக அறிமுகம் ஆகியிருக்கிறது.

தரவுகள் பாதுகாப்பு, இணையத்தில் உங்களுக்கான சொந்த இடம் என்றெல்லாம் ஹோவும் சொல்வது நன்றாக தான் இருக்கிறது. தரவுகளுக்கான பிரைவசி என்பதும் ஈர்க்கலாம். ஏற்புடையதாகவும் இருக்கலாம். ஆனால் இது நீங்கள் உருவாக்கி கொள்ளும் டிஜிட்டல் புகைப்படங்கள், கோப்புகள் போன்றவற்றுக்கு மட்டும்  பொருந்தும். மற்றபடி, இணையத்தை பயன்படுத்தும் போது உங்களைப்பற்றி சேகரிக்கப்படும் தரவுகள் அல்லது நீங்கள் உருவாக்கும் தரவுகளுக்கு ஹோவும் பாதுகாப்பு அளிக்கவில்லை. அதற்கு நீங்கள் வேறு வழியை தான் நாட வேண்டும்.

இணையதள முகவரி: https://www.houm.me/landing

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *