சின்ன சின்னதாக எழுதுங்கள்- ஊக்கம் அளிக்கும் இணையதளம்

d2ca88f1-2e71-4d35-8520-23f9ef27b84b2020 புத்தாண்டில், நல்லதொரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள விருப்பம் எனில், டைனிதாட்ஸ்.மீ (https://tinythoughts.me/ ) இணையதளம் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும். உங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை குறும் எண்ணங்களாக பதிவு செய்ய உதவுகிறது இந்த தளம்.

அடிப்படையில் டைனிதாட்ஸ், வாழ்க்கை பதிவு இணையதள வகையைச்சேர்ந்தது. அதாவது, ஒருவர் தினமும் தன் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை, அவை தொடர்பான எண்ணங்களை டிஜிட்டல் வடிவில் குறித்து வைக்க உதவும் இணையதளம்.

டைரி எழுதுவது போல, தினசரி வாழ்க்கையை இப்படி குறித்து வைப்பதை ஆங்கிலத்தின் ஜர்னலிங் என்கின்றனர். ஜர்னல் என்றால் சஞ்சிகை என்று புரிந்து கொள்ளலாம். ஆக, நம் வாழ்க்கையை சஞ்சிகையாக பதிவு செய்வதை தான் இந்த வகை இணையதளங்கள் ஊக்குவிக்கின்றன.

சிகிச்சை நோக்கிலானது என்பது முதல் செயல்திறன் மேம்பட வழி செய்வது வரை பலவித நன்மைகள் வாழ்க்கை பதிவு செய்யும் வழக்கத்தால் வரும் என்கின்றனர். எனவே தான் இது வெற்றிக்கு தேவையான பழக்கமாக வலியுறுத்தப்படுகிறது.

இப்படி வாழ்க்கை எண்ணங்களை பதிவு செய்வது என்பது முற்றிலும் தனிப்பட்டது. உங்களுக்கான அக பயணம் போன்றது. பேஸ்புக்கில் நிலைத்தகவல் வெளியிடுவதில் இருந்தும் டிவிட்டரில் குறும்பதிவுகளை பகிர்ந்து கொள்வதில் இருந்தும் வேறுபட்டது. இங்கு உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை நீங்கள் உங்களுக்காக மட்டும் பதிவு செய்து கொள்கிறீர்கள்.

ஆக, வாழ்க்கை பதிவுகளை எழுதுவது மிக நல்ல பழக்கம் என்றாலும், இது அத்தனை எளிதானது அல்ல. தினமும், எண்ணங்களை எழுதுவது என்பது விடாமுயற்சியையும், மன உறுதியையும் கோரும் சவாலான விஷயம் தான். உற்சாகமான துவங்கியவர்களில் பலரும் இதை தொடர முடியாமல் பாதியில் விட்டு விடுவதும் உண்டு.

இந்த தடைக்கல்லுக்கான தீர்வாக தான் டைனிதாட்ஸ் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தினமும் எழுத வேண்டும் என நினைக்கும் போது நீளமாக எழுத வேண்டியிருப்பது தானே சிக்கலாக அமைகிறது. இதற்கு மாற்று மருந்தாக, சின்ன சின்னதாக உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் என்கிறது டைனிதாட்ஸ்.

அதாவது குறும் எண்ணங்களை இதில் பகிர்ந்து கொள்ளலாம். இதன் முகப்பு பக்கத்தில் நீளமாக உள்ள கட்டிடத்தில் தினமும் குறும் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். டிவிட்டரில் உள்ளது போல 280 எழுத்துகளில் முடித்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும் ஒரு எண்ணத்தை எப்படியாவது எழுதி விடலாம் என்பதால், இந்த இணைய டயரியை விடாமல் பராமரிக்கவும் செய்யலாம். நீங்களும் முயன்று பாருங்கள்.

வாழ்க்கை பதிவுகள் எழுதும் பழக்கத்தை உண்டாக்கும் நோக்கில் மிக எளிதாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், கூடுதலாக பல சின்ன சின்ன அம்சங்களும் இருக்கின்றன.

mood_graph.943f5dc4முதல் விஷயம், தினமும் எழுத எந்த நேரத்தில் நினைவூட்ட வேண்டும் என்று இந்த தளத்திலேயே குறிப்பிட்டு, நினைவூட்டல் குறிப்பை பெறும் வசதி இருக்கிறது.

நீங்கள் பதிவு செய்யும் எண்ணம் தொடர்பான புகைப்படத்தை சேர்க்கலாம். பதிவுகளை வகைப்படுத்த தொடர்புடைய வார்த்தைகளை டேக் செய்யலாம்.

பதிவுகளில் எழுதப்படும் எண்ணங்களின் மனநிலைக்கு ஏற்ப பின்னணி வண்ணத்தை அமைக்கலாம். மனநிலை வண்ணங்களை இந்த தளமே பரிந்துரைக்கிறது. ஆனால் பதிவுகள் தனிப்பட்டதாகவே இருக்கும். அதில் இடம்பெறும் வாசகங்கள் எதையும் படிப்பதில்லை என தளம் உறுதி அளிக்கிறது. எல்லா எண்ணங்களுமே பிறர் படிக்க முடியாத வகையில் என்கிரிப்ட் செய்யப்படுகிறது.

எழுத அமர்ந்த பிறகு எதை எழுதுவது எனும் குழப்பம் இருந்தால், அதை போக்கும் வகையில், எழுதுவதற்கான குறிப்புகளையும் இந்த தளமே எடுத்துக்கொடுக்கிறது. எழுதியவற்றை தனியே சேமித்து வைக்கும் வசதியும் உள்ளது.

அடிப்படை சேவை இலவசமானது. கட்டண சேவையும் இருக்கிறது. அதைவிட முக்கியமான ஸ்மார்ட்போன்களுக்கான செயலி வடிவிலும் அணுகலாம்.

இணையதள முகவரி: https://tinythoughts.me/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *