இந்திய விவசாயம் ஒரு பக்கம் பல்வேறு பிரச்சனைகளையும், சவால்களையும் சந்தித்து வரும் நிலையில், அவற்றை எதிர்கொள்ளும் வகையில் இன்னொரு பக்கம் வேகமாக நவீனமயமாகி கொண்டிருக்கிறது. நவீனமயமாதல் என்றால், நாற்று நடுதல், களை பறித்தல் போன்ற விவசாய பணிகளுக்கு இயந்திரங்களை பயன்படுத்துவது மட்டும் அல்ல. சென்சார்கள் மூலம் பயிர் கண்காணிப்பு, இணையத்தில் இணைக்கப்பட்ட பொருட்கள் மூலம் தகவல் சேகரிப்பு, அல்கோரிதம் மூலம் பருவநிலை கணிப்பு, இலக்கு சார்ந்த பூச்சிக்கொள்ளி தெளிப்பு என மொத்த விவசாய செயல்பாடுகளும் ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதும், எல்லா துறைகளிலும் இந்த நுட்பம் தாக்கம் செலுத்தி வருவதும் நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த நவீன மாற்றத்திற்கு விவசாயமும் விதிவிலக்கல்ல. மண்ணையும், மழையையும் நம்பிக்கொண்டிருந்த விவசாயம், காலத்திற்கு ஏற்ப மாற செயற்கை நுண்ணறிவுடன் ஸ்மார்ட்டாகி கொண்டிருக்கிறது.
அலுவலகங்களிலும், ஆலைகளிலும் ஏ.ஐ ஆதிக்கம் செலுத்துவதை புரிந்து கொள்ளலாம், ஆனால், வயல்வெளிக்கு எப்படி சரி பட்டு வரும் எனும் சந்தேகம் இருந்தால், இத்துறையில் செயல்பட்டு வரும் விவசாய நுட்ப நிறுவனங்கள் பற்றி தெரிந்து கொண்டால் வியப்பாக இருக்கும். அதோடு, விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்நிறுவனங்கள் உருவாக்கி வரும் நவீன தீர்வுகளை தெரிந்து கொண்டால், வியப்புடன் நம்பிக்கையும் ஏற்படும்.
ஸ்டார்ட் அப் எனப்படும் புது யுக நிறுவனங்கள் இத்துறையில் தீவிரமாக செயல்பட்டு வருவதோடு, விவசாயம் எதிர்கொள்ளும் நவீன சவால்களை எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு போன்ற நுட்பங்களை நாடுவதே வழி என்று அரசும் கருதுகிறது. நிட்டி ஆயோக் அமைப்பு, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கான தேசிய திட்டத்தை வகுத்துக்கொடுத்துள்ளது. “விவசாயத்துறையில் ஏ.ஐ மற்றும் பிக்டேட்டா பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வர இருக்கிறது, 2020 ல் அரசு இது போன்ற 80 சதவீத தரவுகளை திரட்ட திட்டமிட்டுள்ளது” என்று விவசாயத்துறை செயலாளர் சஞ்சய் அகர்வால் கூறியுள்ளார்.
இன்று டேட்டா எனப்படும் தரவுகள் தான் எல்லாமுமாக இருக்கிறது. டேட்டாவை தான் புதிய வளம் என்கின்றனர். செயற்கை நுண்ணறிவு, தரவுகளை பலத்தையும், பயன்பாட்டையும், விவசாயத்திற்கும் கொண்டு வருகிறது. பருவநிலை, மண் வளம், காற்று வேகம், பயிர் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பான தரவுகள் சார்ந்த தீர்வுகளை விவசாயிகள் பெற செயற்கை நுண்ணறிவு வழி செய்கிறது. கடந்த கால தகவல்களும் இதில் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
செயற்கை நுண்ணறிவு பயிர் உற்பத்தி, அறுவடை மற்றும் விற்பனை என மூன்று கட்டங்களிலும் மேம்பட்ட செயல்திறனை விவசாயிகளுக்கு சாத்தியமாக்குகிறது. விளைச்சலை அதிகமாக்க வழி காட்டுவதோடு, பூச்சிகளை கட்டுப்படுத்தவும், தண்ணீர் உள்ளிட்ட வளங்களை திறம்பட பயன்படுத்தவும் ஏ.ஐ தீர்வுகள் உதவுகின்றன.
வெற்றிகரமாக பயிர் செய்ய மண் வளமும், பயிர் வளமும் மிகவும் முக்கியம். இந்த இரண்டையும் கண்காணித்து பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. வயல் வெளியில் பொருத்தப்படும் சென்சார்கள் மூலம் மண்ணின் தரம், அதன் ஈரப்பத அளவு ஆகியவை கண்காணிக்கப்பட்டு, அவற்றுக்கு பொருத்தமான பயிர் ரகங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. சென்சார்கள் மூலமான தகவல் சேகரிப்பு தொடர்ந்து மண் வளத்தை அறியவும், பயிர்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உரத்தை தீர்மானிக்கவும் உதவுகிறது.
ஒட்டுமொத்தமாக நீர் பாய்ச்சும் போது அதில் கணிசமான பகுதி வீணாகலாம். ஆனால் சென்சார்கள் வழிகாடுவதலோடு பயிர்களுக்கு எப்போது தேவையோ அப்போது தண்ணீர் பாய்ச்சுவது சாத்தியமாகிறது. இதே போலவே, பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் தீர்மானிக்க முடிகிறது. பூச்சிக்கொல்லிகளை அழிக்கவும் மொத்தமாக மருந்து தெளிக்க வேண்டிய அவசியம் இல்லாமல், பூச்சிகள் உள்ள இடங்களை மட்டும் குறி பார்த்து மருந்து பயன்படுத்த முடிகிறது.
பிராக்சிமல் சாயில்சென்ஸ் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் உருவாக்கியுள்ள சாயில்சென்ஸ் நுட்பம் இது போன்ற தீர்வுகளை வழங்கி வருகிறது. மண்ணின் ஈரப்பதம், வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் உள்ளிட்ட தகவல்களை இதன் சென்சார்கள் கண்காணிக்கின்றன. பாசனத்திற்கு தேவையான நீரை மிச்சமாக்குவதோடு, மின்சக்தி பயன்பாட்டையும் இது குறைக்கிறது.
இதே போல மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம், இக்ரிசாட் ஆய்வு அமைப்புடன் இணைந்து, புதுமையான விதை ஆலோசனை செயலியை உருவாக்கியுள்ளது. பயிரிடுதல் வரலாறு, தற்போதைய வானிலை, மண் வளம் ஆகிய அம்சங்கள் அடிப்படையில், எப்போது, எந்த பயிரை விதைக்கலாம் என இந்த செயலி மொபைல் மூலம் விவசாயிகளுக்கு ஆலோசனை சொல்கிறது.
மண்ணில் புதைக்கப்பட்ட சென்சார்கள் மட்டும், அல்ல, விண்ணில் இருந்து செயற்கைகோள் மூலம் எடுக்கப்படும் படங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் எடுக்கப்படும் படங்கள் கொண்டும், ஏ.ஐ நுட்பம் பயிர்களின் நிலையை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்கிறது. படங்களில் பயிர்களின் தோற்றம், இலைகளின் நிலையை ஆய்வு செய்து, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு பற்றி துல்லியமாக தீர்மானிக்க முடிகிறது. சாட்சுயர் (SatSure ) எனும் நிறுவனம் இத்தகைய தீர்வுகளை வழங்கி வருகிறது. பெங்களூர்வைச்சேர்ந்த இண்டலோ லேப்ஸ் (Intello Labs ) நிறுவனமும் இது போன்ற சேவையை வழங்குகிறது.
பசல் (Fasal’ ) எனும் நிறுவனம் வானிலை கணிப்பை மேற்கொண்டு, விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுகிறது. சென்னை ஐஐடியில் உருவாக்கப்பட்டு ஏஇ4பார்த் (https://www.ai4bharat.org/articles/paddy) அமைப்பு, நெல் பயிரிடுதலில், பயிர் கண்காணிப்பு, பூச்சிக்கொல்லி பயன்பாடு ஆகியவற்றில் வழிகாட்டுவதற்கான தீர்வை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நெல் பயிர்களை தாக்கும் நோய்களை எதிர்கொள்ளும் வழிகளையும் இந்த தீர்வு உள்ளடக்கியிருக்கும்.
பெங்களூருவைச்சேர்ந்த கிராப் இன் (Cropin ) நிறுவன, விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஏ.ஐ சார்ந்த ஸ்மார்ட் பார்ம் எனும் சேவையை உருவாக்கியுள்ளது. பயிர் சுழற்சி கண்காணிப்பு, அறுவடை சார்ந்த தீர்வாக இது அமைகிறது. வங்கி கடன், விற்பனை ஆகியவற்றில் உதவும் ஸ்மார்ட் ரிஸ்க் எனும் சேவையையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பயிர் தேர்வு, பயிர் வளர்ச்சியில் வழிகாட்டுவது போலவே அறுவடையான விளைச்சலை சரியான சந்தையில், சரியான விலைக்கு விற்கவும் ஏ.ஐ வழிகாட்டுகிறது. கோபாஸ்கோ (gobasco.com/) போன்ற நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ள சந்தைகளின் விலை நிலவரம், தானியங்களுக்கான தேவை ஆகிய தகவல்களின் அடிப்படையில் விற்பனைக்கு வழிகாட்டுகிறது.