வெறும் பட்டன் என்றா நினைத்தாய் – 6

ஒரு பட்டன் எப்படி இருக்க வேண்டும்?

1_ijyG0W_MczuEx4CfJob74Qஒரு இணைய பட்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மீறப்பட முடியாத சில விதிகள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது பட்டன், பட்டனாக இருக்க வேண்டும் என்பது. அநேகமாக மற்ற எல்லா அம்சங்களும் இதை நிறைவேற்றுவதாக தான் இருக்கும். மேலும் ஒரு பட்டன் தனித்து தெரிய வேண்டும். அதாவது பட்டனை வேறு ஒன்றாக நினைத்துவிடும் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது.

பெரும்பாலான இணைய பட்டன்களில் ஒருவித பொதுத்தன்மை இருப்பதற்கான காரணம், அவை தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக தான்.

இதன்படியே, பெரும்பாலான பட்டன்கள் செவ்வக வடிவில், அதன் கட்டங்கள் சற்று வளைந்த நிலையில், முழுவதும் வண்ணம் பூசப்பட்டு, அதன் நடுவே பட்டனுக்கான நோக்கம் எழுத்து வடிவில் குறிப்பிடப்பட்டிருப்பதை பார்க்கலாம். அதோடு, இந்த பட்டனின் அமைப்பும், சற்று மேலெழுந்த தன்மையோடு மிதக்கும் வடிவில் இருப்பதையும் உணரலாம்.

இப்படி இருந்தால் தான் அது பட்டன் என்பது பார்த்தவுடன் இணையவாசிகளுக்கு புரியும். இந்த வடிவமைப்பில், வண்ணத்தை நீக்கிவிட்டு வெறும் கோடுகளுக்கு நடுவே எழுத்துக்களுடன் அல்லது, ஒரு பக்க கோட்டிற்கு கீழ் எழுத்துக்களுடன் அல்லது வெறும் எழுத்துகளுடன் பட்டனை கற்பனை செய்து பாருங்கள். அவை பட்டன் தானா? எனும் குழப்பம் உங்களுக்கே ஏற்படும். இணையவாசிகளுக்கு இத்தகைய குழப்பம் ஏற்படாத வகையில், பட்டன்கள் அவற்றுக்கான சாமூந்திரிகா லட்சணத்துடன் அமைந்திருப்பது அவசியம்.

வடிவமைப்பில் புதுமை முக்கியம் என்றாலும், கூட பட்டன் வடிவமைப்பில் புதுமையை புகுத்த நினைத்து, பட்டனை முக்கோண வடிவிலோ அல்லது வட்ட வடிவிலோ உருவாக்குவது புத்திசாலித்தனம் அல்ல. இத்தகைய பட்டன்கள் இணையவாசிகளை குழப்பிவிடும். எனவே தான், பட்டன் என்றதும் நினைவுக்கு வரும் செவ்வக வடிவிலேயே பட்டன்கள் உருவாக்கப்படுகின்றன.

பட்டனை இஷ்டப்படி உருவாக்கலாம் தான். ஆனால், இணைய வடிவமைப்பை பொருத்தவரை, பயனாளிகள் தான் உண்மையான எஜமானர்கள். எனவே அவர்கள் சட்டென்று புரிந்து கொள்ள முடியாத வடிவில் பட்டன்களை உருவாக்குவதை நல்ல வடிவமைப்பாளர்கள் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள்.

விதிவிலக்கான சூழலில் தேவை எனில், பட்டனை வேறு வடிவில் உருவாக்கலாம் என்றாலும், அது இணைய பக்கத்தின் மொத்த வடிவமைப்புக்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பது முக்கியம். அதைவிட முக்கியமான விஷயம், பட்டன் பட்டனாக இருப்பது.

https://thenextweb.com/syndication/2019/12/23/how-to-design-better-buttons/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *