இந்தியர்கள் கூகுளுக்கும், பேஸ்புக்கிற்கும் அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டவர்கள் போல மாற்று தேடியந்திரங்களையோ அல்லது மாற்று சமூக வலைப்பின்னல் சேவைகளையோ கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியிருக்கிறது என தெரிவிப்பதில் எந்த பயனும் இல்லை.
ஆனால் தமிழர்கள் காட்டக்கூடிய அலட்சியத்தை மீறி, ஒன்சர்ச் தேடியந்திரம் பற்றி அறிமுகம் செய்வது அவசியம் என்றே நினைக்கிறேன். ஏனெனில், வழக்கமாக புதிய தேடியந்திரங்கள் வர்ணிக்கப்படுவது போல, கூகுளுடன் ஒப்பிடப்படாமல் டக்டக்கோவுடன் இணைத்து ஒன்சர்ச் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
தேடியந்திர உலகில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் அடையாளமாக இந்த ஒப்பீடு அமைகிறது. அதாவது கூகுளில் இருந்து விலகி தேடியந்திர உலகு புதிய திசையில் பயணிக்கத்துவங்கியுள்ளது. அதற்காக கூகுள் பின்னுக்கத்தள்ளப்பட்டதாக பொருள் இல்லை. தேடியந்திர உலகில் கூகுள் தான் இன்னமும் முதலிடத்தில் உள்ளது. அதன் செல்வாக்கு பற்றியோ, இணைய உலகில் அது செலுத்தும் ஆதிக்கம் பற்றியோ எந்த சந்தேகமும் இல்லை.
இணைய தேடல் என்றால் கூகுள் என்றே இன்னமும் பெரும்பாலானோர் கருதுவது தொடரும் நிலையில், வெரிசான் நிறுவனம் புதிதாக ஒன்சர்ச் தேடியந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஒரு காலத்து கூகுளாக இருந்தா யாஹுவை நினைவில் இருக்கிறதா? இணைய வரலாற்றில் மறக்கப்பட்டுவிட்ட யாஹுவை விலைக்கு வாங்கிய வெரிசான் நிறுவனம் தான் இப்போது ஒன்சர்ச்சை அறிமுகம் செய்துள்ளது. ஆக, யாஹுவின் மறு அவதாரம் என்றோ, கூகுளுடன் மல்லு கட்டும் வெரிசானின் முயற்சி என்றோ இதை சொல்லலாம்.
ஆனால், ஒன்சர்ச், கூகுளுக்கு போட்டி என்று வர்ணிக்கப்படாமல், டக்டக்கோவுக்கான நேரடி போட்டி என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. காரணம், டக்டக்கோ போல, ஒன்சர்ச்சும் பயனாளிகளின் தனியுரிமையை (பிரைவசி) பாதுகாக்கும் நோக்கத்துடன் அறிமுகம் ஆகியிருப்பது தான்.
இணைய உலகில் இப்போது பிரைவசி என்பது முக்கிய விஷயமாகி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட இணைய நிறுவனங்கள், பயனாளிகளின் ஒவ்வொரு அடியையும் கண்காணித்து தகவல் சேகரித்து, விளம்பர வலை விரித்து வருவாய் குவிக்கும் உத்தியை பின்பற்றி வரும் சூழலில், இணையவாசிகளின் பிரைவசி எண்ணற்ற வழிகளில் மீறப்படுவது பற்றி தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
இந்த பிரைவசி மீறலில் இருந்து இணையவாசிகளை பாதுகாக்கும் நோக்கிலான சேவைகளும் அறிமுகம் ஆகிக்கொண்டிருக்கின்றன. தேடியந்திர உலகில், இந்த வகையில் முக்கியமான மாற்றுத்தேடியந்திரமாக இருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான டக்டக்கோ, கூகுளைப்போல பயனாளிகள் தகவல்களை சேகரிப்பதில்லை எனும் கருத்தை முன் வைத்து பிரைவசி கவலை கொண்டவர்கள் விரும்பி நாடும் தேடியந்திரமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.
ஸ்டார்ட்பேஜ், குவாண்ட் உள்ளிட்ட வேறுபட பிரைவசி காக்கும் தேடியந்திரங்களும் இல்லை. இந்த வரிசையில் தான் இப்போது ஒன்சர்ச் அறிமுகம் ஆகியுள்ளது.
ஒன்சர்ச், இணையவாசிகள் பற்றிய தகவல்களை சேகரிக்க குக்கி மென்பொருளை பயன்படுத்துவதில்லை, இணையவாசிகள் மூலம் விளம்பர வருவாய் கறக்க அவர்களைப்பற்றி தகவல் சித்திரத்தை உருவாக்குவதில்லை என்றெல்லாம் உறுதி அளிப்பதோடு, வடிகட்டாத தேடல் முடிவுகளை அளிப்பதாகவும் சொல்கிறது. உங்கள் தேடல் வரலாற்றை பாதுகாத்துக்கொள்ளாம் என்றும், தேடல் குறிப்புகள் என்கிரிப்ட் செயப்படுவதாகவும் சொல்கிறது. மேலும் தேடல் இணைப்புகளை பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ளலாம் என்றும் சொல்கிறது.
இவை எதுவுமே கூகுளால் சொல்ல முடியாதது. அது பயனாளிகளுக்கு ஓரளவு பிரைவசி கட்டுப்பாடு வசதிகளை அளித்தாலும், பயனாளிகள் பற்றிய தகவல்களை சேகரிப்பதே அதன் அடிப்படையாக இருக்கிறது. எனவே அதனால் பிரைவசி உறுதி எல்லாம் அளிக்க முடியாது.
டக்டக்கோவுக்கு இது சாத்தியமாகிறது. பயனாளிகளை பின் தொடராமலே, அவர்களை கண்காணித்து விளம்பர வலை விரிக்காமலே தேடல் சேவை அளித்து வருவாய் ஈட்ட முடியும் என அது உணர்த்தியுள்ளது. அதனால் தான் இப்போது, டக்டகோவுடன் ஒன்சர்ச் ஒப்பிடப்படுகிறது.
டக்டக்கோ இருக்க, ஒன்சர்ச் தேவையா என்பது சுவாரஸ்யமான கேள்வி. ஆனால், கூகுள் இருக்க இன்னொரு தேடியந்திரம் தேவையா என்று கேட்டு வந்த சூழலில், டக்டக்கோவுடன் ஒரு புதிய தேடியந்திரம் ஒப்பிடப்படுவது மாற்றம் தானே. இணைய உலகம் பிரைவசி பாதுகாப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை உணர்த்தும் மாற்றம்.
இதை கூகுளும், பேஸ்புக்கும் உணர்ந்துள்ளன. அதன் விளைவாக தான் அரைமனதோடு ஓரளவு பிரைவசி பாதுகாப்பு அம்சங்களை வழங்கத்துவங்கியுள்ளன. ஆனால், இணையவாசிகளாக நாம் இதை உணர்ந்திருக்கிறோமா என்பது கேள்வி.
பிரைவசி கவலை உங்களுக்கும் உண்டென்றால், ஒன்சர்ச் பக்கம் எட்டிப்பார்ங்கள். https://www.onesearch.com/
டக்டக்கோவையும் பயன்படுத்திப்பார்ப்பது அதைவிட நல்லது.
இன்னொரு முக்கியமான விஷயம். என்ன தான் பிரைவசி கொடி பிடித்தாலும், ஒன்சர்ச் மூல தேடியந்திரம் அல்ல. அது மைக்ரோசாப்டின் பிங் தேடியந்திர முடிவுகளையே பயன்படுத்துகிறது. யாஹு தேடல் அம்சங்களையும் பயன்படுத்துகிறது. இதன் காரணமாக அதன் பிரைவசி உறுதி மொழி அப்படியே ஏற்க கூடியதல்ல என்று கிம் கமேண்டோ தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்காக ஒன்சர்ச்சை அலட்சியம் செய்ய வேண்டாம். பயன்படுத்திப்பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள். ஆனால் ஒன்று, இணைய உலகம் மாற்றுத்தேடியந்திரங்கள் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என அறிக!