இணையத்தில் மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சுருக்கமாக எப்.ஒய்.ஐ (FYI ) அமைகிறது. இதன் விரிவாக்கம், பார் யுவர் இன்பர்மேஷன் (“For Your Information”.). அதாவது உங்கள் தகவலுக்காக என்று பொருள்.
இமெயிலில் தகவல் அனுப்பும் போது அல்லது உடனடி சேவையான இன்ஸ்டண்ட் மெசேஜிங் சேவையில் உரையாடும் போது, குறிப்பிட்ட தகவலை சுட்டிக்காட்ட இந்த எப்.ஐ.ஓ பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், இணைய பயன்பாடு தொடர்பாக அறியப்பட வேண்டிய முக்கிய சுருக்கெழுத்து வடிவங்களில் இதுவும் ஒன்று.
வகுப்பில் பாடம் நடத்தும் ஆசிரியர், ‘நான் சொல்லப்போவதை நன்றாக கவனியுங்கள், என மாணவர்களை கைத்தட்டி அழைத்து முக்கிய தகவலை சொல்வது போல, இணைய தகவல் பரிமாற்றத்தில் இந்த எப்.ஐ.ஓ பயன்படுகிறது.
பெரும்பாலும், சுட்டிக்காட்டப்படும் தகவலுக்கு முன்பாக இந்த சுருக்கம் இடம்பெறுகிறது.
இணையத்தில் வீண் உரையாடல்களும், வெட்டி வம்புகளும் அதிகரித்திருப்பதால், இமெயில் பரிவர்த்தனைகளின் போது, உங்கள் தகவலுக்காக எனும் கணிவான அறிவிப்புடன் தகவலை சொல்ல வேண்டியிருக்கிறது.
ஆங்கில மொழியில், இந்த எப்.ஐ.ஓ ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்தாலும், இணைய பரிவர்த்தனையில் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு, இணைய யுகத்திற்கான பிரத்யேக பயன்பாடுகளில் ஒன்றாகி இருக்கிறது.
எல்லாம் சரி, தமிழில் இமெயில்களில் அல்லது பேஸ்புக், வாட்ஸ் அப் உரையாடல்களில் இந்த ‘உங்கள் தகவலுக்காக’ சுருக்கத்தை யாரேனும் பயன்படுத்துகின்றனரா? இமோஜி, ஸ்டிக்கர் எல்லாம் பயன்படுத்துகிறோம், எப்.ஐ.ஓ ஏன் பயன்படுத்துவதில்லை. ஓ.எம்.ஜி தமிழில் ஏன் எப்.ஐ.ஓ பயன்படுத்தப்படுவதில்லை.
–
டெக் டிக்ஷனரி- 26 டிஜிட்டல் டீடாக்ஸ் (Digital Detox) – டிஜிட்டல் விலக்கு