காதல் கால்குலேட்டர் இணையதளத்தை இப்போது யாரேனும் பொருட்படுத்துவார்களா? எனத்தெரியவில்லை. ஆனால், அறிமுகமான காலத்தில், அப்போது, அதாவது இணைய வரலாற்றின் ஆதிகாலத்தில் ( 1996), இந்த தளம் கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருந்தது. அந்த கால கட்டத்தில், இந்த தளத்தில் காதல் கணக்கு போட்டு பார்க்காதவர்களே இல்லை என்று கூட சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு இந்த தளம் ஈர்ப்புடையதாக இருந்தது. இதன் காரணமாக, இந்த தளம், சிறந்த இணையதளத்திற்கான ( கூல் சைட் ) விருதை பல முறை இருந்து வென்றிருக்கிறது.
இந்த தளத்தில் அப்படி என்ன இருக்கிறது? பெரிதாக வேறு ஒன்றும் இல்லை, காதலர்கள் அல்லது காதலிக்க விரும்புகிறவர்கள், இதில் தங்களுக்கு காதல் பொருத்தம் இருக்கிறதா என பார்க்கலாம். அதாவது தங்கள் காதல் வெற்றி பெறுமா என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.
ஜாதக பொருத்தம், ராசி பொருத்தம் போல இந்த தளம் காதலர்களின் பெயர் பொருத்தத்தை வைத்து அவர்களின் காதல் வெற்றி பெறுமா?என்று கணித்து சொல்கிறது. பெயர்கள் போகிற போக்கில் வைக்கப்படுவதில்லை, அவை அர்த்தம் பொதிந்தவை என்று சொல்லும் இந்த தளம் , பெயர் பொருத்ததை வைத்து காதல் கால்குலேட்டரை காதல் டாக்டர் உருவாக்கியிருப்பதாக சொல்கிறது. பெயர்களை அவறுக்குறிய கட்டங்களில் சமைபித்தால், காதல் வாழ்க்கை எப்படி இருக்கும், இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பு எத்தனை சதவீதம் என்றெல்லாம் சொல்லி விடுகிறது இந்த தளம்.
காதல் டாக்டரின் மகத்தான கண்டுபிடிப்புக்கு வாருங்கள் என்று முகப்பு பக்கத்தில் தோன்றும் அழைப்பும் இந்த தளத்தை சுவாரஸ்யமாக்குகிறது.
இந்த தளம் யாரால், உருவாக்கப்பட்டது என்பதற்கான விளக்கம் இருக்கிறதே தவிர, இதில் உள்ள காதல் கால்குலேட்டரின் லாஜின் என்ன எனும் தகவல் இல்லை. இணையத்திற்காக விளையாட்டாக உருவாக்கப்பட்ட விஷயமாகவும் இருக்கலாம்.
1996 ல் அமைக்கப்பட்ட இந்த தளம் 2020 லும் தொடர்வது அதிசயத்திலும் அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்ப கால உள்ளடக்கத்தில் அதிக மாற்றம் இல்லை என்றாலும், பெயர்களை சமர்பித்தவுடன் வரும் காதல் கணிப்பை, வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
http://www.lovecalculator.com/
- பிகு: என் முதல் புத்தகமான இணையத்தால் இணைவோம் –ல், இந்த இணையதளம் பற்றிய சிறு அறிமுகம் இடம்பெற்றுள்ளது. அதன் அப்டேட்டான வடிவம் இது.