வலை 3.0: இந்திய ரெயில்வேயில் நிகழ்ந்த அற்புதம்!

cover_AmitabhPandey_13_3_19ஆன்லைனில் ரெயில் டிக்கெட்கள் முன்பதிவு செய்வது இன்று சர்வ சாதாரணமாகி இருக்கலாம். டிக்கெட் முன்பதிவு செய்வது மட்டும் அல்ல, ரெயிலில் பயணம் செய்யும் போது தேவையன உணவை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்ய உதவும் செயலிகள் இருக்கின்றன. ரெயிலின் வருகை, தற்போதைய நிலை போன்றவற்றை அறிந்து கொள்ள உதவும் செயலிகளும் இருக்கின்றன.

ரெயில் பயணிகளைப்பொருத்தவரை, எல்லாமே விரல்நுனியில் சாத்தியமாகிறது. இந்த சேவைகளில் எதிர்கொள்ளக்கூடிய சின்ன சின்ன குறைகள் கூட பெரும் அதிருப்தியை உண்டாக்கிவிடுகிறது. அந்த அளவுக்கு மேம்பட்ட சேவையை பயணிகள் எதிர்பார்ப்பதாகவும் கொள்ளலாம்.

இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமையும் ரெயில் டிக்கெட் முன்பதிவு சேவையை இந்தியாவில் நிகழ்ந்த அற்புதம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் பலரும் இது போன்ற ஒரு சேவை சாத்தியம் என எதிர்பார்த்திராத காலத்தில், இந்திய ரெயில்வே அதன் துணை அமைப்பான ஐசிஆர்டிசி மூலம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதியை அறிமுகம் செய்தது. அறிமுகமான காலத்தில் கூட, இந்த சேவை சரியாக செயல்படுமா? எனும் சந்தேகம் பரவலாக இருந்தது. அவற்றை எல்லாம் ஐசிஆர்டிசி வென்று காட்டியது.

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதியை ஒரு அற்புதம் என சொல்வது இப்போது பொருத்தமற்றதாக தோன்றினாலும், இந்த வசதி அறிமுகமான காலத்தில் நிச்சயம் ஒருவித நம்ப முடியாத தன்மை கொண்டிருந்ததை மறந்துவிடக்கூடாது. அதிலும், குறிப்பாக இந்திய சூழலில் இது ஒரு அற்புதமாக பார்க்கப்பட வேறு காரணங்களும் இருந்தன.

இந்தியாவில் ஆரம்ப காலத்தில் கம்ப்யூட்டர்கள் ஒருவித சந்தேகத்துடன் பார்க்கப்பட்டன. கம்ப்யூட்டர்கள் வேலைவாய்ப்பை பறிக்கலாம் எனும் அச்சம் இருந்தது. அதோடு, கம்ப்யூட்டர்களின் விலையும் கைக்கு எட்டாததாக இருந்ததால், அவற்றின் பயன்பாடு என்பது பரவலாகாமல், வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் நிலை இருந்தது. இது கம்ப்யூட்டர் தொடர்பான புரிதலை ஏற்படுத்த எந்த விதத்திலும் உதவவில்லை.

பின்னர், இணைய பயன்பாட்டிலும் இதே நிலை தான் இருந்தது. இணைய வசதி எல்லாம் ஏதே நகர்புற மேட்டுக்குடியினருக்கு மட்டுமே சாத்தியம் எனும் கருத்து நிலவியது. இணையத்தில் பொருட்களை வாங்கும் இ-காமர்ஸ் வசதி எல்லாம் இந்தியாவிற்கு சரிபட்டு வருமா? எனும் கேள்வியே பலரால் கேட்கப்பட்டது.

இந்த பின்னணியில் தான், 2002 ல், ஐசிஆர்டிசி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதியை அறிமுகம் செய்தது. இணைய வரலாற்றின் படி பார்த்தால், இந்த அறிமுகம் தாமதமானது தான். 1995 ல் அமேசான் அறிமுகமாகி, புத்தாயிரமாண்டில் இ-காமர்ஸ் கருத்தாக்கம் பிரபலமாகி, இணையம் மூலம் பொருட்களை வாங்குவது இயல்பாகி கொண்டிருந்தது. அமேசான் அறிமுகமான காலத்திலேயே, இணையம் மூலம் பயண டிக்கெட் முன்பதிவு செய்யும் டிரவாலோசிட்டி இணையதளம் அறிமுகமாகியிருந்தது. அதன் பிறகு மைக்ரோசாப்ட் ஆதரவுடன் உருவான எக்ஸ்பீடியா, பயண ஏற்பாட்டு தளம் எனும் கருத்தாக்கத்தை நிலை நிறுத்தியிருந்தது.

இந்தியாவிலும் கூட, புத்தாயிரமாண்டு வாக்கில், பயண ஏற்பாட்டிற்கான மேக்மைடிரிப் தளம் உருவாகியிருந்தது. இருப்பினும், ரெயில் டிக்கெட்டை ஆன்லைனில் வாங்கும் வசதி நினைத்து பார்க்க முடியாததாக இருந்தது. அப்போது மக்கள், தொலைதூர பயணங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய, நீண்ட வரிசையில் கால் கடுக்க காத்திருந்தனர். இத்தனைக்கும் ரெயில்வே செயல்பாடுகள் 1980 களிலேயே கம்ப்யூட்டர் மயமாகி இருந்தது. ஆனால் 1990 களில் டிக்கெட் முன்பதிவு மனித கைகளால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

” நீங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டும் என்றாலும், அந்த டிக்கெட்டை வழங்கும் ஊழியர் அதற்கு கம்ப்யூட்டரை பயன்படுத்திக்கொண்டிருந்தார்’ என்று இந்த நிலையை அழகாக அமிதாப் பாண்டே விவரித்திருக்கிறார். பாண்டே வேறு யாருமல்ல, இந்தியாவுக்கு ரெயில் டிக்கெட் முன்பதிவு வசதியை கொண்டு வந்தவர்.

இதே தலைப்பில் வெளியான மிண்ட் இதழ் கட்டுரையில், அவர் ரெயில்வேயில் இருந்த கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட பொது முன்பதிவு அமைப்பை, இணையத்தில் இணைத்தது பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

பாண்டே, 1983 ல் தான் பார்த்து வந்த ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு, ரெயில்வேயில் பணிக்கு சேர்ந்தார். வடக்கு மற்றும் கிழக்கு மண்டங்களில் பல ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், 2002 ல் ஐஆர்சிடிசியின் ஐடி சேவைகள் பிரிவு பொதுமேலாளராக பதவியேற்றுக்கொண்டார்.

பாண்டே புதிய எண்ணங்கள் கொண்டவராகவும், அவரது மேலதிகாரி அத்தகைய எண்ணங்களை வரவேற்க கூடியதாகவும் இருந்தது இந்தியாவின் அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும். ஐஆர்சிடிசி நிர்வாக இயக்குனரான, எம்.என்.சோப்ரா, பாண்டேவிடம் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என கேட்டிருக்கிறார். ஐஆர்சிடிசி அடிப்படையில் கேட்டரிங் நிறுவனம் என்பதை மீறி, கேட்டரிங்கில் எனக்கு ஆர்வம் இல்லை, டிக்கெட் சேவையில் கவனம் செலுத்தலாம் என பாண்டே பதில் அளித்திருக்கிறார்.

இணைய பயன்பாடு பரவலாகத்துவங்கியிருந்த நிலையில் டிக்கெட் முன்பதிவு வசதியை இணையத்தின் மூலம் சாத்தியமாக்க வேண்டும் என அவர் நினைத்தார். உலக அளவில் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தாலும், இந்தியாவுக்கு புதிய யோசனையாகவே இருந்தது. அதிர்ஷ்டவசமாக, இணையவழி டிக்கெட் முன்பதிவு யோசனையை, ரெயில்வே வாரியமும் அங்கீகரித்தது. ஆனாலும், இந்த முறை சரியாக செயல்படவில்லை என்றால் என்னாகும் எனும் கவலையும் இருந்தது.

இணையத்தில் விற்கப்படும் டிக்கெட்களுக்கான கட்டணத்தை ஐஆர்சிடிசி முன் கூட்டியே செலுத்திவிடும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து ரெயில்வே வாரியம் பச்சைக்கொடி காட்டியது. இந்த திட்டம் உடனடியாக வருவாயை அள்ளித்தருகிறதோ இல்லையோ ரெயில்வே மீது நல்லெண்ணத்தை உண்டாக்கும் என உயரதிகார்கள் பலரும் கருதினர். எனவே ஒரு வார காலத்தில், மாதிரி திட்டமாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் பிறகு, ரெயில்வே டிக்கெட் தரவுகள் பட்டியல் அமைப்பை, இணையத்தில் இணைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. 2002 ஜனவரியில், இணைய டிக்கெட் முன்பதிவு வசதி அறிமுகமானது.

இணையம் வழியே டிக்கெட் பதிவு செய்வது அருமையானது தான். ஆனால் டிக்கெட்டிற்கு பணம் செலுத்துவது எப்படி எனும் கேள்வி எழுந்தது. ஆன்லைன் பண பரிவர்த்தனை இந்தியாவில் பிள்ளை பருவத்தில் இருந்த காலம் அது. ஆனால், பாண்டே முரட்டுத்துணிவுடன் டிக்கெட் முன்பதிவுக்கு ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி தேவை என வாதாடி அந்த வசதியை இணைத்திருந்தார். ஆனால் ஆன்லைனில் பணம் செலுத்த பலரும் தயங்குவார்கள் என்றே பலரும் விமர்சனம் செய்தனர்.

ஆன்லைனில் பணம் செலுத்த மக்களுக்கு இருக்க கூடிய தயக்கத்தை போக்கும் வகையில், ஏதேனும் பிரச்சனை என்றால் பணம் திரும்பி அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. டிக்கெட்கள் அச்சிடப்பட்டு கூரியரில் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் பயனாக மக்கள் துணிந்து ஆன்லைன் பதிவு செய்தனர். இந்த வசதி சரியாக செயல்பட்டதை பார்த்து மற்றவர்களுக்கும் பரிந்துரைத்தனர். பரிவர்த்தனை தோல்வி அடைந்தால், பணம் திரும்பி வந்தது மக்களுக்கு நம்பிக்கையை அளித்தது. அட, இந்த முறை செயல்படுகிறதே என பலரும் வியந்தனர்.

மெல்ல, ரெயில் டிக்கெட் முன்பதிவு வசதி பிரபலமானது. மணிக்கணக்கில் கால் கடுக்க டிக்கெட் வரிசையில் காத்திருந்த நிலை மாறி, நொடிகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிந்தது.

இந்தியாவில் கம்ப்யூட்டர் பயன்பாட்டை மக்கள் ஏற்றுக்கொள்ள வைத்ததில் ரெயில்வேக்கு முக்கிய பங்குண்டு என சொல்லப்படுகிறது. ரெயில் டிக்கெட் முன்பதிவு வசதி மூலம், இணையம் வழி ஷாப்பிங் சேவையைக்கும் இதே உதவியை ரெயில்வே செய்தது.

( அமிதாப் பாண்டே, இணையவழி ரெயில் டிக்கெட் முன்பதிவு வசதி சேவை தொடர்பான அனுபவத்தை வென் இட் கிளிக்ஸ் எனும் புத்தகத்தில் விவரித்திருக்கிறார்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *