டிஜிட்டல் காக்டெய்ல்- இது இளந்தளிர் இமயங்களின் சந்திப்பு

_111029635_malalaஅந்த இரண்டு இளந்தளிர்களின் சந்திப்பு, அண்மையில் இணைய உலகம் கொண்டாடும் நிகழ்வாக அமைந்தது. பருவநிலை மாற்றத்திற்காக போராடி வரும் 17 வயதான கிரேட்டா துன்பர்கும், மனிதர் உரிமைகளுக்காக போராடி வரும் 22 வயதான மலாலாவுக்கும் இடையிலான சந்திப்பு தான் டிவிட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஸ்வீடனைச்சேர்ந்த துன்பர்க், புவி வெப்பமதலால் ஏற்படும் பிரச்சனை குறித்து உலகத்தலைவர்கள் பெரிதாக எதையும் செய்யாமல் இருக்கின்றனர் என்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த பாடுபட்டு வருகிறார். இதற்காக வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகு போகாமல் ஸ்டிரைக் செய்வது அவரது பாணி.

இந்த வெள்ளிக்கிழமை ஸ்டிரைக் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அண்மையில் பிரிட்டனின் பிரிஸ்டல் நகரில் இத்தகைய போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக துன்பர்க் சென்றிருந்தார். அப்படியே அருகாமையில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்குச்சென்று அங்கே படித்து வரும் மலாலாவை சந்தித்து பேசினார்.

இருவரும் ஒன்றாக போஸ் கொடுத்த படத்தை, மலாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (https://www.instagram.com/p/B8_o71enY3s/) பகிர்ந்து கொண்டு, இவர் ஒருவருக்காக மட்டுமே தான் பள்ளிக்கு லீவு போடுவேன் என்று கூறியிருந்தார். துன்பர்கும் தன் இண்டாம்கிராம்  பக்கத்தில் இந்த படத்தை வெளியிட்டு, தனது முன்மாதிரிகளில் ஒருவரை சந்தித்தாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த இரண்டு படங்களும், ஆயிரக்கணக்கான முறை லைக் செய்யப்பட்ட பகிரப்பட்டதோடு, ஆக்ஸ்போர்டு பல்கலை பிரிவு ஒன்றின் முதல்வர் ஆலன் ரஸ்பிரிட்ஜரும், மாணவர்களுடன், மலாலா, துன்பர்க் இருக்கும் படத்தை ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டிருந்தார். பல்கலை பேராசிரியர்கள் பலரும், இந்த இளந்தளிர் இமயங்களின் சந்திப்பை கொண்டாடும் விதமாக கருத்துகளை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தனர்.

3- டி சிலை வைக்கும் இளம் பெண்

அமெரிக்க இளம் பெண் அமன்டாவை (Amanda Phingbodhipakkiya ) பன்முகம் கொண்ட டிஜிட்டல் கலைஞர் என வர்ணிக்கலாம். நரம்பியல் விஞ்ஞானம் படித்த அமன்டா, டிஜிட்டல் கலை உருவாக்கம் மற்றும் ஸ்டெமிற்காக வாதிடுவது என தீவிரமாக இயங்கி வருகிறார். ஸ்டெம் மீதான ஆர்வத்தால் இப்போது அவர் அறிவியலில் முன்னோடி பெண்களுக்கு 3-டி சிலை எடுத்திருக்கிறார்.

ஸ்டெம் என்பது ஆங்கித்தில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை குறிக்கும் சுருக்கம் (STEM). இந்த துறைகளில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. பெண்கள் இந்த துறை பாடங்களை தேர்வு செய்ய ஊக்குவிக்கும் வகையில், அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் சாதித்த பெண் முன்னோடிகள் பற்றிய செய்திகளும் பதிவு செய்யப்படுவதும், பேசப்படுவதும் அவசியம் என்று கருதுகின்றனர்.

இந்த கருத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட அமண்டா, அமெரிக்காவில் உள்ள பொது இடங்களில் உள்ள ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகளில், பெண்களின் சிலை 400 மட்டுமே என்பதை தெரிந்து கொண்டு நொந்து போய்விட்டார். இந்த குறையை சரி செய்யும் வகையில், ஸ்டெம் துறையில் சாதித்த முன்னோடி பெண்களுக்கு சிலை வைத்து கவுரவிக்க தீர்மானித்தார்.

அதன் படி, உலகின் முதல் புரோகிராமர் என போற்றப்படும் அடா லவ்லேஸ் (Ada Lovelace, ) உள்ளிட்ட 20 சாதனை பெண்களுக்கு சிலை வடித்திருக்கிறார். இந்த பெண்களுக்கு நவீன அங்கீகாரமாக இருக்கட்டும் என 3டி பிரிண்டிங் முறையில் சிலைகளை தயார் செய்துள்ளார்.

அறிவியல் மீது இளம் பெண்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் நடத்தி வரும் கண்காட்சியில் இந்த சிலைகளை அவர் பார்வைக்கு வைத்திருக்கிறார்.

அமன்டா பற்றி அறிய: https://www.alonglastname.com/bio

உலகை (தனியே) சுற்றும் வாலிபிகள்!

ஊர் சுற்றிப்பார்க்கும் ஆர்வம் உள்ளவர்கள், குறிப்பாக பெண்கள், கிலேரி பற்றி தெரிந்து கொள்வது ஊக்கம் அளிக்கும். கிலேரி, உலகை வலம் வந்து கொண்டிருப்பவர். சரியாக சொல்வது என்றால் உலகைச்சுற்றி பார்ப்பது தான் அவரது பொழுதுபோக்கு. அது தான் அவரது வேலையும் கூட.

ஆம், கிலேரி, ஒரு நவீன நாடோடி- டிஜிட்டல் நாடோடி. வீடு வாசல் என்று குறிப்பிட்ட இடத்தில் வாசம் செய்யாமல், உலகையே தனது வீடாக கொண்டு விதவிதமான இடங்களில் வசித்து வருகிறார். புதிய நாடுகளுக்கு செல்லும் தனது பயண அனுபவங்களை அவர் சுவாரஸ்யமாக தனது இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

தொழில்நுட்ப கில்லாடி என்பதால், லேப்டாப்பில் இருந்தே வேலை செய்து தனக்கு தேவையான தொகையை ஆன்லைனில் சம்பாதித்துக்கொள்கிறார். கிலாரி பயணங்களில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் அவர் ஒரு தனிப்பறவை என்பது. தயக்கமோ,அச்சமோ இல்லாமல் அவர் தன்னந்தனியாக உலகை வலம் வந்து கொண்டிருக்கிறார். தன்னைப்போலவே தனியே பயணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டும் வகையில் தனது அனுபவஙக்ளை பகிர்ந்து கொண்டு வருகிறார்.- http://clairesitchyfeet.com/

கிலேரி கதை வியப்பளிக்கிறதா? இத்தகைய தனிப்பறவை பயணிகள் இன்னும் பலர் இருக்கின்றனர். இவர்கள் சோலோ டிராவலர்கள் என குறிப்பிடப்படுகின்றனர்.

உலகை வலம் வரும் தனிப்பயணிகளின் பட்டியல் இதோ: https://www.claimcompass.eu/blog/solo-female-travel/

இந்திய கலாச்சாரம் சொல்லும் செயலி

தில்லியில் படிக்கும் மாணவியான அவந்திகா கண்ணா, இந்தியா ஸ்டோரி எனும் பெயரில் செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இந்த செயலி, இந்தியாவில் உள்ள நினைவுச்சின்னங்கள் மற்றும் கலாச்சார பொக்கிஷங்கள் பற்றிய தகவல்களை தருகிறது. நினைவுச்சின்னங்கள் வரலாற்றை தெரிந்து கொள்வதோடு, ஆடியோ உரை முலம் வழிகாட்டவும் செய்கிறது இந்த செயலி.

ஒருமுறை வெளிநாட்டில் உள்ள எடின்பர்க் கோட்டையைச்சுற்றி பார்த்த போது, அந்த நினைவுச்சின்னம் சிறப்பாக பரமாரிக்பட்டு வரும் விதத்தை பார்த்து ஈர்க்கப்பட்டு, அதே போலவே நம் நாட்டில் உள்ள வரலாற்று சின்னங்களும் முறையாக பரிமாரிக்கப்பட வேண்டும் எனும் விருப்பம் கொண்டிருக்கிறார். அதன் பயனாக அவர் உருவாக்கியது தான் இந்தியா ஸ்டோரி செயலி. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் இந்த செயலியை தரவிறக்ககலாம்.: https://www.indiastory.me/

குமுதம் இதழில் எழுதும் ‘டிஜிட்டல் காக்டெய்ல்’ தொடரிலிருந்து…

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *