சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கூகுள் தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ள டூடுல், சுழலும் வடிவில் முப்பரிமான அனிமேஷன் சித்திரமாக, பெண்களின் வரலாற்றை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.
கூகுள் நிறுவனம், வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய தினங்களை கொண்டாடும் வகையில் டூடுல் சித்திரத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இதற்காக கூகுள் தனது, முகப்பு பக்கத்தில் இடம்பெறும் லோகோவை, டூடுல் சித்திரமாக மாற்றி அமைக்கும்.
சர்வதேச மகளிர் தினத்தன்றும் பெண்கள் வரலாற்றை போற்றும் வகையில் கூகுள் டூடுல் வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு, மகளிர் தினத்தை முன்னிட்டு, கூகுள், இதுவரை இல்லாத அளவு மிகவும் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்ட டூடுலை வெளியிட்டு மகளிர் தினத்தை கொண்டாடியுள்ளது.
அனிமேஷன் மற்றும் வீடியோ டூடுல்களையும் கூகுள் அவ்வப்போது உருவாக்கியுள்ளது என்றாலும், 2020 சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடும் கூகுள், முற்றிலும் புதிதாக, அனிமேஷன் மற்றும் வீடியோ இணைந்த கலைப்படைப்பாக அமைந்துள்ளது.
மேலும், இந்த டூடுல் சித்திரம், காகிதம் கொண்டு முப்பரிமான தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளதோடு, மண்டலா கலை பானியில், சுழலும் தோற்றமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மூன்று அடுக்குகளை கொண்ட இந்த சித்திரத்தில், முதல் அடுக்கு கருப்பு வெள்ளையில் அமைந்துள்ளது. இந்த அடுக்கில் உள்ள அனிமேஷன் வடிவங்கள், 1800 முதல் 1930 வரை உலக பெண்களின் நிலையை உணர்த்துகிறது.
இரண்டாம் அடுக்கு, பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் நிலையில் ஏற்பட்ட வேகமான மாற்றங்களை உணர்த்தும் வகையில், 1950 முதல் 1980 வரை பெண்களின் நிலையை உணர்த்துகிறது. மூன்றாம் அடுக்கு, 1990 கள்ளுக்கு பிறகு பெண்கள் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை உணர்த்துகிறது.
ஒவ்வொரு கட்டமாக தோன்றும், இந்த டூடுல், பெண்கள் வரலாறு தொடர்பான சிந்தனையத்தூண்டுவதோடு, அனிமேஷன் சித்திரமாக கவர்ந்திழுக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு அனிமேஷன் வடிவமையும் உற்று நோக்கும் போது, பெண்கள் வரலாறு தொடர்பான தனித்துவமான செய்தியை உணர்த்துவதை புரிந்து கொள்ளலாம்.
காகிதத்தால் உருவாக்கப்பட்ட 35 அனிமேஷன் பாத்திரங்களை இந்த டூடுல் கொண்டுள்ளது.
” ” கடந்த தலைமுறைகளில் போராடிய மற்றும் தியாகங்கள் செய்த பெண்களின் தோள்களில் இன்றை பெண்கள் நின்றிருக்கும் நிலையில், இந்த இயக்கத்தின் பாரம்பரியத்தை அவர்கள் முன்னோக்கி எடுத்துச்செல்கின்றனர்” என கூகுள் இந்த டூடுல் தொடர்பான விளக்க பதிவில் குறிப்பிட்டுள்ளது.
லண்டன் மற்றும் நியூயார்க்கைச்சேர்ந்த ஜூலி வில்கின்சன், ஜானே ஹோர்ஸ்கிராப்ட் (Julie Wilkinson and Joyanne Horscroft) ஆகிய அனிமேஷன் கலைஞர்கள், ஜூரிச்சைச்சேர்ந்த மரியோன் வில்லியம், டாபனே (Marion Willam & Daphne Abderhalde) ஆகியோருடன் இணைந்து இந்த டூடுலை உருவாக்கியுள்ளனர்.
இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினம், சமத்துவ தலைமுறை: பெண்கள் உரிமையை உணர்வது எனும் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு அமைந்துள்ளது: https://www.internationalwomensday.com/
கூகுள் டூடுல் தொடர்பான விவரங்களுக்கு: https://www.google.com/doodles/international-womens-day-2020