தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைக்கு சேர விரும்பினால், குறிப்பிட்ட நிறுவனங்களின் நேர்க்காணல் முறையையும் அறிந்திருப்பது அவசியம். ஏனெனில், ஒவ்வொரு நிறுவனமும், ஒரு நேர்க்காணல் முறையை கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, நேர்க்காணலின் போது, புரோகிராமிங் தெரியுமா என கேட்கப்படுவதோடு, அதை சோதித்து பார்க்கும் வகையிலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
இன்னும் சில நிறுவனங்கள், ஓபன் சோர்ஸ் மென்பொருள் தொடர்பான ஆர்வத்தை பரிசீலிக்கலாம். ஓபன் சோர்ஸ் ஆர்வம் இருப்பதாக தெரிவித்தால், இவர் நம்மவர் என நினைக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. ஓபன் சோர்ஸ் ஆர்வம் ஒரு பொருட்டல்ல என நினைக்கும் நிறுவனங்களும் இருக்கின்றன.
எனவே, வேலை தேடுபவர்கள், நிறுவனங்களில் என்ன வகையான கேள்விகள் கேட்கப்படலாம் என அறிந்து வைத்திருப்பது நல்லது. வேலைவாய்ப்பு தேடலுக்கான முன் தயாரிப்பு அம்சங்களில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.
எல்லாம் சரி தான், ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் பின்பற்றும் நேர்க்காணல் முறையை அறிவது எப்படி என நீங்கள் கேட்கலாம்.
இணையத்தில் தேடிப்பார்ப்பது, கேள்வி பதில் தளமான குவோராவில் கேட்பது, ஏற்கனவே வேலையில் இருப்பவர்களிடம் விசாரிப்பது என பலவிதங்களில் முயற்சித்தாக வேண்டும்.
இந்த நீண்ட தேடலை எளிதாக்க, ’நோடம்ப்இண்டரிவியூஸ்’ எனும் இணையதளமும் இருக்கிறது.
நேர்க்காணலுக்கு அல்ல, வேலைக்கு தயாராகுங்கள் எனும் வாசகத்தோடு வரவேற்கும் இந்த தளம் மூலம், தொழில்நுட்ப நிறுவனங்களில் பின்பற்றப்படும் நேர்க்காணல் முறையை பட்டியல் போட்டு புரிய வைக்கிறந்து இந்த தளம். பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களின் நேர்க்காணல் முறையை அறிந்து கொள்ளலாம்.
அலோரிதம் கேள்விகள் உண்டா, உங்கள் இடத்தில் இருந்து பணி புரிய அனுமதி உண்டா? போன்ற தகவல்களுடன், நிறுவனம் பொதுவாக விண்ணப்பங்களுக்கு பதில் அளிக்க எடுத்துக்கொள்ளும் அவகாசம் தொடர்பான தகவலும் இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட நிறுவனத்தை கிளிக் செய்தால், நேர்க்காணல் தொடர்பான மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் சோதனை உண்டா என்பது போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
எல்லாமே, ஒரு டெம்பிளட் வடிவில் அமைந்துள்ள தகவல்கள் என்றாலும், நிறுவன அதிகாரிகளிடம் எந்த வகையான கேள்விகளை எதிர்பார்க்கலாம் என்பதை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.
தகவல்களை தெரிந்து கொள்வதோடு, நேர்க்காணலுக்கு சென்றவர்கள், தங்களுக்கு தெரிந்து தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான விண்ணப்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. நேர்க்காணல் அனுபவத்தின் அடிப்படையில் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம்.
நேர்க்காணல் தகவல்கள் தொடர்பான உங்கள் கருத்தை, வாக்குகளாக அளிக்கும் வசதியும் இருக்கிறது.
புதிதாக துவங்கப்பட்டிருக்கும் தளம். இதன் அடிப்படை கருத்தாக்கம், வேலைவாய்ப்பை தேடுபவர்களுக்கு, நேர்க்காணல் முறை தொடர்பான அதிக தகவல்களை தெரிந்து கொள்ள வைப்பதாக இருக்கிறது. வேலை தேடுபவர்களின் பங்கேற்பு அதிகம் இருந்தால், இந்த தளத்தின் பயன்பாடும் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
இணையதள முகவரி: https://nodumbinterviews.com/
–