கொரோனா பரவலை தடுக்க, சமூக தொலைவின் அவசியம் தொடர்பாக, நாமும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் அல்லவா? எளிய முறையில் இதை செய்ய சோஷியல்டிஸ்டன்சிங்.ஒர்க்ஸ் (https://socialdistancing.works/ ) இணையதளம் வழி செய்கிறது.
சமூக ஊடகங்களில், முகமுடி அணிந்த புகைப்படத்தை அறிமுக சித்திரமாக (புரபைல் பிக்சர்) வைத்துக்கொள்வதன் மூலம் இதை செய்ய இந்த தளம் ஊக்குவுக்கிறது.
முகமுடி மாட்டிக்கொண்டிருக்கும் படத்தை சமூக ஊடக பக்கங்களில் பார்க்கும் போது, மற்றவர்களுக்கும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படும் அல்லவா? அதை தான் இந்த தளம் செய்கிறது.
சுய தனிமைப்படுத்தலை நாம் மேற்கொண்டாலும், அதை மற்றவர்கள் பார்க்க முடியாதே. எனவே தான், சமூக ஊடகம் வாயிலாக அதை மற்றவர்கள் பார்க்கச்செய்யுங்கள் என்கிறது இந்த தளம். பலரும் கணிசமான நேரத்தை இணையத்தில் செலவிடும் நிலையில், நம்முடைய சமூக ஊடக அறிமுக சித்திரமாக முகமுடி அணிந்த படத்தை அமைப்பதன் மூலம், தனிமைப்படுத்தலின் அவசியத்தை அனைவருக்கும் உணர்த்தலாம் என்கிறது இந்த தளம்.
அதற்காக எல்லோரும், முகமுடி மாட்டிக்கொண்டு படம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஏற்கனவே முகமுடிகளுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் இதுவும் தவிர்க்க வேண்டியது தான். நிஜ முகமுடி அணிவதற்கு பதிலாக, இந்த தளம் நம்முடைய முகத்தின் மீது டிஜிட்டல் முகமுடி அணிந்து அதை சமூக ஊடகங்களில் பகிர வழி செய்கிறது.
கொரோனா வைரசின் தாக்கத்தை குறைக்க, முடிந்தவரை வீட்டிலேயே இருப்பது நல்லது. தவிர்க்க இயலாமல் வெளியே வந்தால் மற்றவர்களிடம் இருந்து விலகி நிற்பது நல்லது. இதை தான் சமூக தொலைவை கடைப்பிடிப்பது என்கின்றனர். இந்த விலகல் மூலம், வைரஸ் பரவும் சங்கிலியை உடைத்து, பாதிப்பு மோசமாவதை தவிர்க்கலாம்.
இந்த கருத்தை இன்னும் பரவலாக வலியுறுத்த நாமும் பங்களிப்பு செய்ய இந்த தளம் உதவுகிறது.
இணையதள முகவரி: https://socialdistancing.works/