ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில், மருத்துவமனைகளும், மருத்துவர்களும் கொரோனா தடுப்பு, சிகிச்சையிலேயே கவனம் செலுத்தி வரும் நிலையில், கொரோனா அல்லாத மற்ற நோய்களுக்காக ஆலோசனை தேவைப்படுபவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிக்கலுக்கு தீர்வாக கொரோனா அல்லாத நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை அளிப்பதற்காக இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
லாக்டவுன்கிளினிக் (https://lockdownclinic.com/ ) எனும் அந்த இணையதளத்தை, சென்னையைச்சேர்ந்த மருத்துவர்கள் பலர் இணைந்து துவக்கியுள்ளனர்.
நோயாளிகள், இந்த தளம் மூலம், இலவசமாக இணைய வழி ஆலோசனை பெறலாம்.
மருத்துவர்களால் துவங்கப்பட்டுள்ள இந்த தளம் அவர்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது. எனவே, தொலைபேசி வழியே அழைக்காமல், வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்து, தங்களுக்கான நேரம் வரும் வரை காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காலத்தில், மற்ற நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆலோசனையை வழங்கும் நோக்கத்தில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விளையாட்டு அறிவியல் மையத்தின் நோயாளிகளுக்கு, கொரோனா பாதிப்புக்கு நடுவே, இணையம் வழியே வீடியோ ஆலோசனை அளித்து வந்ததகாவும், இதற்கு நோயாளிகளிடம் நல்ல வரவேற்பு இருந்ததை அடுத்து, இதே போன்ற சேவையை பொது நோயாளிகளுக்கு அளிக்க சக மருத்துவர்களுடன் இணைந்து இந்த தளத்தை அமைத்ததாக, சென்னை மருத்துவர் பிரகாஷ் அய்யாதுறை பிஸ்னஸ் லைன் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காலத்தில் தேவைப்படும் இணைய முயற்சிகளில் ஒன்றாக இது அமைகிறது.