உங்கள் இணைய முன் தயாரிப்பு எப்படி?

videoஇணையம் இப்போது சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையை இணையம் எப்படி எதிர்கொள்கிறது என்பது நம்முடைய நலனுக்கு முக்கியமானது. அதனால் தான், இணையம் தாக்குப்பிடிக்குமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது.

ஒரு விதத்தில் இதை இணையத்திற்கு வைக்கப்பட்டுள்ள சோதனை என்று தான் சொல்ல வேண்டும். அதைவிட நம்முடைய இணைய தயாரிப்புக்கும், இணைய முன்னெச்சரிக்கைக்குமான சோதனை என்று கருதலாம்.

கொரோனா அச்சம், நம்மை தற்காப்பு நிலைக்கு கொண்டு வந்து, பல்வேறு மாற்றங்களை செய்ய நிர்பந்தித்துள்ளது. வீட்டில் இருந்தே பணியாற்றுவதும், சமூக தொலைவை கடைப்பிடிப்பதும் இவற்றில் முக்கியமாக அமைகிறது.

வீட்டில் இருந்தே பணியாற்றும், ரிமோட் வொர்க் என்பது கொஞ்சம் பழைய கருத்தாக்கம் தான். வேலை செய்ய லேப்டாப்பும், தொடர்பு கொள்ள இணைய வழியும் இருப்பதால், அலுவலகம் வராமல் வீட்டில் இருந்தே வேலை செய்யும் சாத்தியமே, ரிமோட் வொர்க் எனும் தொலைதூர பணி கருத்தாக்கத்திற்கு வித்திட்டது.

நிறுவனங்கள், ஊழியர்கள் என இரு தரப்பினர் மத்தியிலுமே, தொலைதூர பணிக்கான சாத்தியம் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், இது முழுவீச்சில் நடைமுறைப்படுத்தப்படும் நிலை இன்னும் வந்துவிடவில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் தான், கொரோனா தாக்கம், தொலைதூர பணி கருத்தாக்கத்தின் மீது கவனத்தை குவித்துள்ளது.

கொரோனா புதிய வகை வைரஸ் என்பதால், அதை பரவாமல் தடுப்பதே கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழியாக கருதப்படுகிறது. வைரஸ் பராமல் தடுக்க வேண்டும் என்றால், அதற்கான பாதைகளை எல்லாம் அடைத்தாக வேண்டும். மனிதர்கள் மூலமே இது வேகமாக பரவுவதால், முடிந்தவரை மனிதர்களுக்கு இடையிலான தொடர்புகளை குறைத்துக்கொள்வது அவசியம்.

இந்த நோக்கில் தான், பொது இடங்களில் திரள்வதை தவிர்க்கவும் என்கின்றனர். எனவே தான், தொழில்நுட்ப மாநாடுகளும், நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன. பலரும் பயணங்களை தவிர்த்து வருகின்றனர். பொதுமக்களும் பரஸ்பரம் முடிந்தவரை விலகி நிற்பது நல்லது என்கின்றனர். இதுவே சமூக தொலைவை கடைப்பிடிப்பதாகிறது.

இந்த பின்னணியில் தான், ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுவதை தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊக்குவிக்கின்றன. இந்த இடத்தில், நீங்கள் ’ஜூம்’களையும், ‘ஸ்லேக்’களையும் அறிமுகம் செய்து கொள்வது பொருத்தமாக இருக்கும். இவை எல்லாமே, தொலைதூர பணிக்கு கைகொடுக்கும் புதுயுக இணைய சேவைகள்.

ஜூம் (https://www.zoom.us/ ), இணைய வீடியோ சந்திப்பு மேடையாக அமைகிறது. அதாவது, வீடியோ கான்பிரன்சிங் என சொல்லப்படும் வீடியோ வழி சந்திப்புகளை மேற்கொள்வதற்கான இணைய மேடையாக விளங்குகிறது. ஏற்கனவே, ’ஸ்கைப்’ வழி உரையாடலுக்கு பழகியவர்களுக்கு ஜூம் போன்ற சேவையின் அருமை எளிதாக விளங்கும். தொலைவில் உள்ளவர்களோடு வீடியோவில் உரையாடுவதோடு, குழுவாக குறிப்பெடுப்பது, ஆலோசனை செய்வது என பலவித வசதிகளை இது அளிக்கிறது.

தொலைதூர பணிக்கான முக்கிய கருவியாக இருப்பதோடு, விமான பயணங்களை தவிர்க்க வேண்டிய சூழலில், நேர் சந்திப்புகளுக்கான மாற்றாக வீடியோ உரையாடல்கள் அமைகின்றன.

இதே போல, ஸ்லேக் (https://slack.com/intl/en-in/ ), தொழில்முறை மேசேஜிங் சேவையாக அமைகிறது. அலுவலக பயன்பாட்டிற்கான வாட்ஸ் அப் போன்றது என வைத்துக்கொள்ளலாம். அலுவலக சூழலில், ஊழியர்கள் உரையாடலை மேற்கொள்ளவும், கருத்துக்களை பரிமாறவும் ஸ்லேக் வழி செய்கிறது. நவீன அலுவலகங்கள் ஸ்லேக் சேனல்கள் என்பது மிகவும் பிரபலம். ஸ்லேக் பரிமாற்றத்திற்கு பழகியவர்கள் இமெயிலை பழைய சங்கதியாக கருதுவதாகவும் பேசப்படுகிறது.

இந்த வகையில் இன்னும் பல இணைய சேவைகள் இருக்கின்றன. இணைய கண்டறிதல் சேவை வழங்கும் பிராடக்ட் ஹண்ட் இணையதளம் இதற்கான பட்டியலை அளிக்கிறதுL https://www.producthunt.com/e/tools-for-remote-teams). பெரும்பாலும், டிஜிட்டல் நாடோடிகளால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த சேவைகளை, அனைத்து தரப்பினருமே அறிந்து கொள்ள வேண்டிய தேவை கொரோனாவால் ஏற்பட்டுள்ளது.

இது தவிர, வீட்டிலேயே முடங்கி கிடப்பதால், நெட்பிளிக்சில் படம் பார்ப்பதும், வீடியோகேம் ஆடுவது போன்றவையும் அதிகரிக்கலாம். இவை எல்லாம், கூடுதல் இணைய பயன்பாட்டை நோக்கி கைகாண்பிப்பதால் தான், இணையத்தின் ஆற்றல் தொடர்பான கேள்வி எழுகிறது. அதாவது, உலகம் முழுவதும் மக்கள் அதிக எண்ணிக்கையில் வீடியோ சந்திப்புகளையும், இணையம் வழி உரையாடல்களையும் நாடும் போது, அதிகரிக்கும் சுமைக்கு இணையத்தால் ஈடு கொடுக்க முடியுமா? எனும் கவலை உண்டாகிறது.

இந்த கேள்விக்கான பதிலை பார்ப்பதற்கு முன், டவுன்டிடெக்ட்டர் (https://downdetector.in/ ) எனும் இணைய சேவை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். இணையம் சுமை தாங்காமல் திண்டாடுகிறதா? என்பதை கண்டறிவதற்கான சேவை இது. பேஸ்புக், டிவிட்டர், கூகுள் உள்ளிட்ட இன்னும் பிற இணைய சேவைகள் இயல்பாக செயல்பட்டு வருகின்றனவா அல்லது, அவற்றை அணுகுவதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்பதை இந்த தளம் அடையாளம் காட்டுகிறது.

இணைய பயன்பாடு தொடர்பாக பயனாளிகள் சமர்பிக்கும் தகவல்கள் அடிப்படையில் இந்த தளம் செயல்படுகிறது. மேலும் பலர் தொலைதூர பணியில் இணையும் சூழலில், நீங்கள் பயன்படுத்தும் இணைய சேவையின் நிலை அறிய டவுன்டிடெக்ட்டர் உதவியாக இருக்கும். அதோடு, எப்படியும் இணையத்திற்கு இத்தகைய கண்காணிப்பு தளம் தேவை தான் இல்லையா!

இனி விஷயத்திற்கு வருவோம். கொரோனாவால் அதிகரித்திருக்கும் இணைய பயன்பாட்டிற்கு, இணையம் எந்த அளவு ஈடு கொடுக்கும்? இணைய சேவைகளை அணுகுவது மந்தமாகலாமேத்தவிர, பெரிய அளவில் எந்த பிரச்சனையும் வராது என்பதே இந்த கேள்விக்கான பதிலாக அமைகிறது. மேலும், அடிப்படையில் இணையம் எனும் வலைப்பின்னலே, அணு ஆயுத தாக்குதலுக்கும் தாக்குப்பிடித்து நிற்க வேண்டிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதால் அதன் உள்கட்டமைப்பு இது போன்ற சோதனைகளுக்கு எல்லாம் ஈடு கொடுக்கும் என்றே கருதப்படுகிறது.

இருப்பினும், ஒரே நேரத்தில் பயன்பாடு அதிகரிப்பது சில சிக்கல்களை ஏற்படுத்தலாம். உதாரணத்திற்கு, நிறுவன கம்ப்யூட்டர்களை அல்லது பாதுகாப்பான பரிமாற்றத்திற்கான வி.பி.என் அமைப்பை பலரும் ஒரே நேரத்தில் அணுகினால், அதன் செயல்பாடு பாதிக்கப்படலாம். இது போன்ற தேவையை எதிர்பார்த்து முன் கூட்டியே வலைப்பின்னல் ஆற்றலை அதிகமாக்கியிருந்தால் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை. இதை தான் இணைய முன் தயாரிப்பு என்கின்றனர்.

ஆக, கொரோனா போன்ற வைரஸ்களுக்கான முன் தயாரிப்பு சமூகத்திற்கு அவசியம் என்பதைப்போலவே, தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இணைய முன் தயாரிப்பு அவசியம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *