உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பினால், அதற்கான வழிகளுக்கு பஞ்சமேயில்லை. எப்போதும் போல கூகுளில் தேடினாலே, கொரோனா தொடர்பான நம்பகமான தகவல்களை அளிக்கும் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வரிசையாக பட்டியலிடப்படுகின்றன. இவைத்தவிர, கொரோனா அப்டேட்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. இன்னொரு பக்கம் ஆய்வுகளில் கொரோனா தொடர்பான புதிய தகவல்களும் வெளியாகி கொண்டே இருக்கின்றன.
இந்த தகவல் பேரலைக்கு மத்தியில், கொரோனா தொடர்பான அடிப்படை தகவல்களை மட்டும் வடிகட்டி எடுக்க வேண்டும் என்பது பெரும் சவாலானது தான். கொரோனா தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலான விளக்க கட்டுரைகளை நாடுவது கொஞ்சம் ஆசுவாசம் அளிக்கலாம். ஆனால் இந்த வகை விளக்க வழிகாட்டிகள் கூட அநேகம் இருக்கின்றன.
இந்த பின்னணியில், கொரோனா தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய மிக அடிப்படையான தகவல்கள் மட்டும் தேவை எனில், வோல்பிராம் ஆல்பாவில் தேடிப்பார்க்கலாம்.
வோல்பிராம் ஆல்பா, தனித்துவமான தேடியந்திரம். ( உண்மையில் அது தேடியந்திரம் அல்லாது தேடியந்திரம்). கூகுள் போல இணையத்தில் உலாவி தகவல்களை பட்டியலிடுவதற்கு பதில், ஆய்வுலகம் சார்ந்த சொந்த தரவுகள் பட்டியலில் இருந்து பொருத்தமான தகவல்களை வரைபட வடிவில் அளிக்கும் புதுமையான தேடியந்திரம் இது.
கோவிட்-19 பற்றிய தேடலுக்கும் வோல்பிராம் ஆல்பா தனது பாணியில் தகவல்களை அளிக்கிறது. இதற்கான தகவல் பக்கள், மிக எளிமையாக, ஆனால் ஆதார தகவல்களுடன் அருமையாக இருக்கிறது. – https://www.wolframalpha.com/input/?i=covid-19
கோவிட் -19 வைரஸ் நோய்க்கான விளக்கம், அதன் மருத்துவ வகை, அறிகுறிகள், பரவும் விதம், சிகிச்சை முறை உள்ளிட்ட தகவல்கள் மட்டுமே சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா தகவல் அலையால் மிரண்டு போயிருப்பவர்கள், வோல்பிராம் ஆல்பாவின் கொரோனா பக்கத்தை பார்த்தால், அதிக குழப்பங்கள் இல்லாமல் இந்த நோய் பற்றிய அடிப்படையான சித்திரத்தை தெரிந்து கொள்ளலாம். அப்படியே, வோல்பிராம் ஆல்பா எனும் அருமையான தேடியந்திரத்தையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.
–
வோல்பிராம் ஆல்பா தொடர்பான அறிமுகம்: https://www.hindutamil.in/news/blogs/202262-25.html