உங்களுக்கு நீல் பட்டேலை தெரியுமா?
இணைய மார்க்கெட்டிங் அறிந்தவர்கள், இந்த கேள்வியால் அதிருப்தியோ, ஆவேசமோ கொள்ளலாம். ஏனெனில், நீல் பட்டேல் (neilpatel) இணைய மார்க்கெட்டிங் துறையிலும், அதன் காரணமாக இணைய உலகில் நன்கறியப்பட்டவர். அப்படியிருக்க, அவரை தெரியுமா என கேட்பது என்ன நியாயம்? என நினைக்கலாம். ஆனால், தமிழ் சூழலில் நீல் பட்டேலை தெரியுமா? என்று கேட்டு அறிமுகம் செய்யும் நிலையே இருக்கிறது.
எப்படி இருப்பினும், நாம் அறிமுகம் செய்து கொள்ள வேண்டியவர் தான் நீல் பட்டேல். அவர் வல்லுனராக கருதப்படும் இணைய மார்க்கெட்டிங்கில் உங்களுக்கு பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும் கூட, நீல் பட்டேலை அறிந்து கொள்வது நல்லது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்று சொல்லப்படும் இணைய மார்க்கெட்டிங் தான் பட்டேலின் கோட்டை. நிறுவனங்களும், தனிநபர்களும் இணையத்தில் தங்கள் உள்ளடக்கத்தை கவனிக்கப்பட வைப்பது எப்படி என வழிகாட்டும் கலையில் அவர் வல்லவராக இருக்கிறார். இதற்காக உலகலாவிய டிஜிட்டல் ஏஜென்சியை நடத்தி வருகிறார்.
இன்று, சமூக ஊடகத்திற்கான விளம்பர முயற்சிகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங் எனும் பெயரில் பரவலாக முன்வைக்கப்படுகிறது. இந்த கலையின் முன்னோடிகளில் பட்டேலும் ஒருவர்.
பட்டேலின் தனித்தன்மைகளில் ஒன்று, தேடியந்திய மார்க்கெட்டிங் நுணுக்கங்களை கற்றுத்தருவது. அதவாது கூகுள் உள்ளிட்ட தேடியந்திரங்களில், உள்ளட்டகத்தை முன்னணியில் வர வைப்பது என்பது.
தேடியந்திர மார்க்கெட்டிங் பற்றி இணையத்தில் ஆயிரக்கணக்கில் கட்டுரைகள் இருக்கின்றன. ஆனால் இப்பிரிவில் தேடிப்பார்த்தால் அநேகமாக, பட்டேலின் இணையதளமான நீல்பட்டேல் தவிர்க்க இயலாமல் முன்னணியில் இருப்பதை பார்க்கலாம்.
ஆக, பட்டேல் தான் கற்றுத்தருவதை செய்து காட்டி வருகிறார். கூகுளில் எப்படி முதலிடம் பிடிப்பது எனும் ரகசியத்தை அவர் நன்கறிந்திருக்கிறார். அவர் எழுதிய பல கட்டுரைகளை நீங்கள் கூகுள் தேடல் பட்டியலின் முதல் பக்கத்தில் பார்க்கலாம் என்பதே இதற்கு சான்று.
இப்போது கூட பாருங்கள், கொரோனா தொடர்பான தேடலிலும் கூட, நீல் பட்டேலின் கட்டுரை முன்னணியில் இடம்பிடித்திருக்கிறது. மார்க்கெட்டிங் துறையினர் கொரோனா உணர்த்துவது என்ன எனும் பொருள்படும் அந்தக்கட்ட்ரை கூகுள் தேடலில் முதல் பக்கத்தில் அடையாளம் காட்டப்படுகிறது.
இந்த சூழலிலும் நீல் பட்டேல் மார்க்கெட்டிங் பற்றி பேசுகிறாரா? எனும் கேள்வியோடு கட்டுரையை கிளிக் செய்து படித்துப்பார்த்தால், மனிதர் உணர்வு பூர்வமாகவே எழுதியிருக்கிறார். இந்த கட்டுரையை படித்தால், பட்டேல் ஏன் கூகுளில் எப்போதும் முதலிடம் பிடிக்கிறார் என்பதற்கான குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
கொரோனாவால் எழுந்துள்ள நிச்சயமற்ற சூழலில், மார்க்கெட்டிங் செய்வது எப்படி என விளக்கும் இந்தக்கட்டுரையில், தற்போதைய சுழலில் மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் செய்ய வேண்டியதை விளக்குவதற்கு முதலில் அவர்கள் செய்யக்கூடாதவை எது என முதலில் சுட்டிக்காட்டுகிறார்.
கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி ஆதாயம் தேடும் செயலில் ஈடுபடக்கூடாது என்று அவர் குறிப்பிடுகிறார். இது தொழில்முனைவும் அல்ல, மார்க்கெட்டிங்கும் அல்ல என்பவர், இதனால் அதிக பலனும் ஏற்படாது என்கிறார்.
கொரோனாவால் கொஞ்சம் காலம், வர்த்தகங்கள் தடுமாறும் நிலை இருக்கும் என்பவர், இணைய வருகை ( டிராபிக்) குறையும், அவர்கள் மூலமான வர்த்தகமும் குறையும் என்கிறார். ஆனால், இந்த சூழலிலும் மிரண்டு விடாமல், வளர்ச்சி வாய்ப்பை தேட வேண்டும், வாய்ப்பிருந்தால் போட்டி நிறுவனங்களை வாங்கி வளர்ச்சியை வலுவாக்கி கொள்ள வேண்டும் என்கிறார்.
கொரோனா ஏற்படுத்தியுள்ள போட்டி குறைந்த சூழலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்.
ஒரு மார்க்கெட்டிங் வல்லுனராக, அவர் சொல்லக்கூடிய விவேகமான அறிவுரை இது.
இந்த நெருக்கடியான சூழலில், வர்த்தக வளர்ச்சி, லாபம் பற்றி எல்லாம் பேச முடியாது தான். ஆனால், கொரோனாவுடன் உலகம் போராடும் நிலையில், கொரோனாவுக்கு பிந்தைய எதிர்காலத்திற்கும் நாம் தயாராக வேண்டும் அல்லவா? அதற்கான வழியை தான் பட்டேல் பேசுகிறார்.
வெறும் வர்த்தக நோக்கை மட்டும் கொண்டிருக்காமல், எதிர்கால நம்பிக்கையுடன் தற்போதைய சூழலில் மார்க்கெட்டிங் துறையினர் என்ன செய்ய வேண்டும் என அவர் சரியாகவே அடையாளம் காட்டுகிறார். நீல் பட்டேல் மார்க்கெட்டிங்கில் புலியாக இருப்பதற்கு இந்த புரிதலும், உணர்வு பூர்வமான அணுகுமுறையும் ஒரு காரணம்.
நீல் பட்டேல் கட்டுரையை வாசிக்க: https://neilpatel.com/blog/coronavirus/
–