உங்கள் கொரோனா கால எண்ணங்களை எழுத அழைக்கும் இந்த புதுமையான இணையதளம் பற்றி பார்ப்பதற்கு முன் முதலில், ஜர்னலிங் எனப்படும் சஞ்சிகை செய்வது பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
ஜர்னலிங் என்பது இணையத்தில் மேற்கொள்ளக்கூடிய நிகழ்வுகளில் பிரபலமானதாக இருக்கிறது. ஜர்னலிங் செய்ய ஊக்குவித்து வழிகாட்டும் இணைய சேவைகளும் அநேகம் இருக்கின்றன.
இணைய டைரி குறிப்பு என்றும் இதை புரிந்து கொள்ளலாம். அதாவது நாட்குறிப்பு எழுதுவது போல மனதில் உள்ள உணர்வுகளை அல்லது எண்ணத்தில் தோன்றுவதை இணையத்தில் எழுதி வைப்பது.
இணைய டைரி குறிப்பு என்பது வலைப்பதிவையும் குறிக்கலாம். ஆனால் வலைப்பதிவு என்பதை பொதுவாக வாசகர்களை மனதில் கொண்டு எழுதுவது என புரிந்து கொள்ளலாம். ஆனால், டைரி எழுதுவது என்பது தனிப்பட்ட அனுபவம். யாருக்காகவும் எழுதாமல் நமக்காக மட்டுமே எழுதிக்கொள்வது.
இப்படி, நமக்காக எழுதிக்கொள்ளும் வாய்ப்பை அளிப்பதாகவே ஜர்னலிங் சேவைகள் அமைகின்றன. ஜர்னல் என்பது சஞ்சிகையை குறிக்கும் சொல் என்பதால், இணையத்தில் நமக்கான குறிப்புகளை எழுதுவதை சஞ்சிகை செய்வது என வைத்துக்கொள்ளலாம்.
சஞ்சிகை எழுதுவதற்கு பலவிதமான காரணங்களும், பலவிதமான பயன்களும் முன்வைக்கப்படுகின்றன. மனதில் உள்ளதை எல்லாம் எழுத்து வடிவில் கொட்டுவதற்கான வழியாக இது பார்க்கப்படுகிறது. நம் சிந்தனைகளை ஒழுங்குபடித்து கவனத்தை அதிகமாக்குவதற்கான வழியாகவும் சொல்லப்படுகிறது. ஒரு சுய உரையாடல் போல இதை மேற்கொள்ளலாம். சஞ்சிகை எழுதுவது என்பது, சிகிச்சை உணர்வை தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேல், தொடர்ந்து நம் உணர்வுகளையும், எண்ணங்களையும் பதிவு செய்வதற்கான ஒழுக்கைத்தை அளிக்க கூடிய ஒரு வழியாக சஞ்சிகை செய்வது அமைகிறது.
–
ஜர்னலிங் பற்றி இன்னும் நிறைய எழுதலாம் என்றாலும், இப்போதைக்கு இந்த சுருக்கமான அறிமுகத்துடன், கொரோனா கால சஞ்சிகை எழுத ஊக்குவிக்கும், ஜர்னலிங் ஐடியாஸ் (perspectiva.app/covid ) தளத்திற்கு செல்லலாம்.
சஞ்சிகை செய்வது சிகிச்சை நோக்கிலான பலன் அளிக்க கூடியது என்று பார்த்தோம் அல்லவா? அதன் அடிப்படையில் கொரோனா காலத்து உணர்வுகளை பதிவு செய்வதன் மூலம், இந்த பெருந்தொற்றால் ஏற்பட்டிருக்கும் மன நெருக்கடியில் இருந்து நம்மை மீட்டுக்கொள்ளலாம் என்கிறது இந்த இணைதளம்.
இந்த நெருக்கடியான், குழப்பமான நேரத்தில், உள்ளத்தில் உள்ளதை எழுதுவது என்பது முக்கிய கூட்டாளியாக இருக்கும். உணர்வுகள், மன அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளவும் இது உதவும் என்கிறது இந்த தளம்.
சரி தான். ஆனால் எதை எழுதுவது? எப்படி எழுதுவது?
உங்கள் மனதில் எழும் இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் ஐடியாக்களை இந்த தளம் முன்வைக்கிறது. அதாவது, நீங்கள் எழுதுவதற்கான விஷயங்களை இந்த தளம் எடுத்து தருகிறது.
ஆம், கொரோனா கால பாதிப்புகள் பற்றி நீங்கள் எதை எல்லாம் எழுதலாம் என இந்த தளம் வரிசையாக யோசனை சொல்கிறது. அவற்றில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து எழுதலாம்.
பேப்லோ பெர்னாண்டஸ் என்பவர் இந்த தளத்தை அமைத்திருக்கிறார். உளவியல் வல்லுனரான இவரது மனைவி, கொரோனா சூழலில் நாம் எதிர்கொள்ளும் உணர்வுகளை பதிவு செய்ய பட்டியலிட்ட யோசனைகளை அடிப்படையாக கொண்டு, இந்த தளத்தை உருவாக்கி இருக்கிறார்.
கொரோனா உங்களை எப்படி எல்லாம் பாதித்திருக்கிறது என்பதை பகிர்ந்து கொள்ள தூண்டும் வகையிலான கேள்விகளாக இந்த யோசனைகள் அமைந்துள்ளன. நீங்களும் முயன்று பாருங்கள்!
–
https://perspectiva.app/covid?ref=producthunt