பென் பெர்மன் என்பவர் ஐந்து நிமிட குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டிருக்கிறார். இந்த குறும்படத்தை அவர் முற்றிலும் புதுமையான முறையில் உருவாக்கியிருக்கிறார் என்பது தான் விஷயம். அதாவது அவர் தனிமையில் இந்த படத்தை இயக்கி முடித்திருக்கிறார். கொரோனா காரணமாக உலகமெங்கும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்வாசியான பெர்மனும், வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார். எதுவும் செய்யாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது, ஒரு படைப்பாளி என்ற முறையில் அவருக்கு மிகவும் கடினமாக இருந்ததால், சின்னதாக ஒரு குறும்படம் இயக்க தீர்மானித்தார். ஆனால் சக கலைஞர்கள் இல்லாமல் எப்படி படம் எடுக்க முடியும்? இந்த இடத்தில் தான் கேமியோ (https://www.cameo.com/ ) எனும் புதுமையான செயலியை அழகாக பயன்படுத்திக்கொண்டார். இந்த செயலியில் என்ன சிறப்பு என்றால், இதன் மூலம் கட்டணம் செலுத்தி பிரபலங்களிடம் இருந்து நாம் விரும்பும் வீடியோ செய்தியை தருவித்துக்கொள்ளலாம். கேமியோ செயலியின் இந்த வசதியை பயன்படுத்தி, பாடகி லின்சே லோகன் உள்ளிட்ட பிரபலங்களின் வீடியோ செய்தியை பெற்று, அந்த காட்சிகளை கோண்டே பாலோ அப் எனும் குறும்படத்தை உருவாக்கினார். கொரோனா காலத்தி அச்சம், தடுமாற்றம், தகவல்கள் தொடர்பான குழப்பம் ஆகியவற்றை விவரிக்கும் வகையில் இந்த படம் அமைந்திருக்கிறது. திரை ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் விமியோ வீடியோ பகிர்வு தளத்தில் இந்த படத்தை பார்க்கலாம்: https://vimeo.com/399324266