கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் இருக்க அதன் பக்கவிளைவாக, பல நிறுவனங்கள் ஆட்குறைப்பும் செய்து வருகின்றன. ஆக, எல்லோருக்கும் இது சோதனையான காலம் தான். இதன் நடுவே பணியிழப்பு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் அர்ஜுன் லால் என்பவர் ஒரு இணையதளத்தை உருவாக்கியிருக்கிறார். பாரசூட்லிஸ்ட் எனும் அந்த தளம், கொரோனா சூழலில் வேலை இழந்தவர்களை எல்லாம் பட்டியலிடுகிறது.
இவ்வாறு வேலையிழந்தவர்களை பட்டியலிடுவதன் நோக்கம், இன்னமும் வேலைக்கு ஆள் எடுக்கும் வலுவான நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான ஊழியர்களை இந்த பட்டியலில் இருந்து தேர்வு செய்து கொள்ள ஊக்குவிப்பது தான்.
இந்த பட்டியலை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் தங்கள் தேவைக்கேற்ற திறமையான நபர்களை எளிதாக தேடிக்கொள்ளும் வகையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. பட்டியலில் ஊழியர்கள் பெயர், பணி புரிந்த நிறுவனம் மற்றும் அவர்களை தொடர்பு கொள்வதற்கான வழி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த தளத்தை உருவாக்கியுள்ள அர்ஜுன் லால், செயற்கை நுண்ணறிவு துணையோடு நிறுவனங்களுக்கு ஊழியர்களை நியமிக்க உதவும் ராக்கெட் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது கொரோனா பாதிப்பு சூழலில், திறமையான பலர் வேலையிழந்து தவிக்கும் நிலையில் அவர்கள் மீண்டும் வேலை வாய்ப்பு பெற உதவும் வகையில் இந்த தளத்தை உருவாக்கியதாக கூறுகிறார்.
ஆட்குறைப்பு செய்த நிறுவனங்களின் ஊழியர்கள் அளித்த தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இந்த தளத்தில் இடம்பெறும் பட்டியலுக்கான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் விரும்பினாலும், இதில் தங்கள் தகவலை சமர்பிக்கலாம். இந்த பட்டியலில் இடம்பெற விரும்பாதவர்கள் தங்கள் பெயரை நீக்கி கொள்ளவும் வழி செய்யப்பட்டுள்ளது.
நெருக்கடியான சூழலில் பணியை இழந்தவர்கள், புதிதாக வேலை தேடுவது எப்படி என திகைத்து நிற்கும் நிலையில், அவர்களுக்கு ஆறுதலும், ஆசுவாசமும் அளிக்க கூடிய முயற்சியாக இந்த தளம் அமைகிறது.
இணையதள முகவரி: https://parachutelist.com/
–