கோவிட்.ஷாப்பிங் (https://covid.shopping/ ) தளத்தை அடிப்படையில் ஒரு நல்லெண்ண இணையதளம் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த தளம், கொரோனா பாதிப்பு சூழலில் வீட்டு தேவைக்கு என்ன பொருட்கள் எல்லாம் வாங்க வேண்டும் என பட்டியல் போட்டுக்கொள்ள உதவுகிறது.
கொரோனா பரவலை தடுக்க, உலகின் பல நாடுகளில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி குவிக்க முற்படுகின்றனர். எங்கே பொருட்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், தங்களுக்கு தேவைப்படக்கூடியதை விட அதிக அளவிலான பொருட்களை வாங்குகின்றனர். மற்றவர்களின் நிலை பற்றி அதிகம் யோசிப்பதில்லை.
இப்படி பொருட்களை வாங்கு குவிப்பதன் விளைவாக சூப்பர் மார்க்கெட்களில் பெரும்பாலான அலமாரிகள் காலியாக இருக்கும் நிலை. அமெரிக்கா போன்ற நாடுகளில், கழிவறைகளில் பயன்படுத்தும் டாய்லெட் பேப்பர்களுக்கு பெரும் தட்டுப்பாடு என்கின்றனர். மற்ற பொருட்களுக்கும் இதே நிலை தான்.
அச்சம் காரணமாக உண்டாகும் இந்த மனநிலையை புரிந்து கொள்ளலாம் என்றாலும், கொஞ்சம் கட்டுப்பாடும் அவசியம் என்று உணர்வது அவசியம்.
அதனால் தான், சூப்பர் மார்கெட்டுக்கு செல்லும் போது, பயத்தின் காரணமாக அல்லாமல் தேவையின் காரணமாக எந்த பொருட்களை எல்லாம் வாங்குவது என வழிகாட்டுவதற்காக இந்த கோவிட்.ஷாப்பிங் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில், குடும்பத்திற்கு தேவையான பொருட்களின் பட்டியலை உருவாக்கி கொள்ளலாம். முக்கிய பொருட்களை மறக்காமல் இருக்க இது உதவும். குடும்ப உறுப்பினர்கள், தேவைப்படும் நாட்களுக்கு ஏற்ப பட்டியலை அமைத்துக்கொள்ளலாம்.
இப்படி தயார் செய்யும் ஷாப்பிங் பட்டியலை குடும்ப உறுப்பினர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
மேலை நாடுகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட தளம் என்பது பட்டியலில் உள்ள பொருட்களை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். ஆனால், அதிகம் வாங்கி குவிப்பதும், பதுக்குவதும் எல்லோருக்கும் பொதுவானது தானே. அதை செய்யாமல், சூழ்நிலையை புரிந்து கொண்டு பொறுப்புடன் செயல்பட வழிகாட்டுவது இந்த தளத்தின் நோக்கம் என கொள்ளலாம்.
இணையதள முகவரி: https://covid.shopping/