கொரோனா நெருக்கடியில் கவலைப்பட பல விஷயங்கள் இருக்கின்றன. இவற்றில் நிச்சயம் பிட்காயின் ஒன்றல்ல என்று நினைக்கலாம். ஆனால், பிட்காயின் பற்றி பரிசீலிக்க இது சரியான நேரமே. அதாவது பிட்காயினால் என்ன பயன் என்று கேட்டுக்கொள்வதற்கான நேரம் இது.
கொரோனா சூழலில் பிட்காயினை சீர் தூக்கி பார்க்க வேண்டிய அவசியத்தை பார்ப்பதற்கு முன், முதலில் பிட்காயினின் அடிப்படை அம்சங்கள் சிலவற்றை நினைவில் கொள்வோம். பிட்காயின் ஒரு கிரிப்டோ நாணயம். இணையம் மூலம் பயனாளிகளை அதை நேரடியாக பரிமாறிக்கொள்ளலாம் என்பதால் அதை எந்த ஒரு நாடோ அல்லது மைய வங்கியோ வெளியிட வேண்டியதில்லை. பிட்காயின் பரிவர்த்தனைக்கும் எந்த மூன்றாவது அமைப்பின் அங்கீகாரமும், நம்பிக்கை சான்றிதழும் தேவையில்லை.
பிட்காயினின் அடிப்படை அம்சங்கள் பற்றி இன்னும் நிறைய சொல்லலாம் என்றாலும், வழக்கமான நிதி பரிவர்த்தனை அமைப்புக்கு மாற்றாக அறிமுகமானது என்பதே பிட்காயினின் பிரதான அம்சமாக சொல்லப்படுகிறது. இதன் பொருள், பொருளாதார உலகை ஆட்டிப்படைக்கும் நிதி அமைப்பின் உள்ளார்ந்த பலவீனங்கள் பிட்காயினில் இல்லை என்பதாகும். மற்ற நாணயங்கள் போல, சந்தை சக்திகள் பிட்காயினை ஏற்றி இறக்கி எல்லாம் விளையாட முடியாது என்கின்றனர் கிரிப்டோ அபிமானிகள்.
பொருளாதார நெருக்கடி ஏற்படும் நேரங்களில் மற்ற நாணயங்கள் போல, பிட்காயின் சரிவுக்கு உள்ளாகாமல் நிலைத்து நிற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2008 சர்வதேச பொருளாதார நெருக்கடியின் விளைவாக பிட்காயின் உருவானதாக சொல்லப்படுவதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த பின்னணியில் பார்த்தால், தற்போது கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடி போன்ற சூழல்களுக்கு என்று உருவாக்கப்பட்டது பிட்காயின். எனில், கோரோனா நெருக்கடியில் பிட்காயின் மதிப்பு எப்படி இருக்கிறது எனும் கேள்வி எழுவது இயல்பானது தானே.
கொரோனாவால் பெட்ரோலியம் நுகர்வு குறைந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை எதிர்மறையாக சரிந்த அதிசயம் அல்லது அபத்தத்தையும் அண்மையில் பார்த்தோம் அல்லவா? இது போன்ற சந்தை அபத்தங்களை தவிர்க்கலாம் எனும் நம்பிக்கையில் தான், மாற்று நாணயமாக பிட்காயின் முன்வைக்கப்படுகிறது.
ஆனால் கொரோனா நெருக்கடியில் பிட்காயினும் சரியவே செய்திருக்கிறது. இது பிட்காயின் ஆதாரவாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. டாலர் சரிகிறது, பவுண்ட் சரிகிறது. பிட்காயினும் சரிந்தால் எப்படி?
பிட்காயின் ஏன் சரிவுக்கு உள்ளானதற்கு பல காரணங்கள் இருந்தாலும், கொரோனா நெருக்கடியில் அதன் மதிப்பு நிலையாக இல்லாமல் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது, அதன் ஆதார பலத்தில் விழுந்த அடியாக கருதலாம். ஆக, தங்கம் போல பிட்காயின் பாதுகாப்பான சொர்கம் அல்ல என்பதும் உறுதியாக இருப்பதாக கருதப்படுகிறது.
எம்.ஐடி. டெக்னாலஜி ரிவ்யூவில் இது தொடர்பாக நல்ல கட்டுரை வெளியாகியுள்ளது. துவக்கத்தில் பிட்காயின் மாற்று நிதி அமைப்பாக கருதப்பட்டு வந்த நிலையில், அது பிரபலமான பிறகு பலரும் அதை எதிர்கால சொத்தாக கருதி முதலீடு செய்ததால், தற்போது அது ஒரு ரிஸ்கான முதலீடாக மாறிவிட்டதாக இந்த கட்டுரை விளக்குகிறது.
இதனிடையே, அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டெக் இணையதளம், பிட்காயின் சரிவை சுட்டிக்காட்டி கொரோனா சோதனையில் பிட்காயின் தோற்றுவிட்டது என கூறியுள்ளது. நாஸ்டெக் இப்படி தான் கூறும். ஆனால், கொரோனா போன்ற நெருக்கடிகளில் பிட்காயின் போன்ற கிரிடோ நாணயங்களின் உண்மையான பயன் என்ன?
–