யூடியூப்பில் நீங்கள் கட்டாயம் நோவா கலினாவின் (Noah Kalina ) வீடியோவை பார்க்க வேண்டும். அந்த வீடியோ உங்களை வியக்க வைக்கும். வாழ்க்கைப்பற்றி சிந்திக்க வைக்கும். அதன் பின்னே உள்ள உழைப்பு மற்றும் விடாமுயற்சி பற்றியும் நினைக்க வைக்கும். அந்த வீடியோ சுவாரஸ்யமாகவும் இருக்கும். கொஞ்சம் அனுமதித்தீர்கள் என்றால் தத்துவ விசாரத்தையும் உண்டாக்கும். வாழ்க்கை பற்றிய கேள்விகளை எழுப்பச்செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது இல்லை தான். ஆனால் அந்த வீடியோ உங்களுக்கு தூங்கி கொண்டிருக்கும் தத்துவவாதியை தட்டி எழுப்பும். இது அதன் நோக்கம் இல்லை என்றாலும் கூட! அமெரிக்காவின் ப்ருக்லினைச்சேர்ந்த புகைப்பட கலைஞரான கலினா, எந்தவித திட்டமிடல் மற்றும் இலக்குகள் இல்லாமல் உருவாக்கிய வீடியோ அது. இல்லை அது ஒரு புகைப்பட தொகுப்பு. தினம் தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு- அது தான் அதன் சிறப்பு.
அந்த புகைப்பட தொகுப்பு கலினா 19 வயதாக இருந்த போது எடுக்கத்துவங்கியது. தினமும் தன்னைதானே புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஒரே இடத்தில் ஒரு மாதிரியான சாயலில் எந்தவித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் தன்னைத்தானே படம் எடுத்தார். தினமும் அவர் அணியும் ஆடைகள் மாறுமே தவிர அவரது புகைப்படம் எடுத்துக்கொள்ளும் விதமும் மாறாது. புகைப்படம் எடுப்பதும் தவறாது. சும்மாயில்லை, புத்தாயிரமாண்டின் ஜனவரி 11 ந் தேதி புகப்படம் எடுக்கத்துவங்கினார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் தவறாமல் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொண்டார்.2006 ஜூலையில் 2,356 புகைப்படங்கள் சேர்ந்தவுடன், எல்லா புகைப்படங்களையும் டிஜிட்டல் முறையில் ஒவ்வொன்றாக கோர்த்து, 6 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவாக உருவாக்கினார். இந்த வீடியோ தொகுப்பை முதலில் விமியோ வீடியோ பகிர்வு தளத்திலும் பின்னர் யூடியூப்பிலும் வெளியிட்டார். ஒவ்வொரு நாளும் எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் அடுத்தடுத்து மாறிக்கொண்டிருப்பதை பார்க்கும் போது நிச்சயம் பிரமிப்பாக இருக்கும். அவரது முகத்திலும் , ஒரே மாதிரி தன்மையையும் பார்க்கலாம், மாற்றத்தையும் பார்க்கலாம். அப்படியே பின்னணியில், மாற்றங்களையும் பார்க்கலாம். முற்றிலும் புதுவித அனுபவமாக அது இருக்கும். ஒவ்வொரு நாளும் மாறும் காட்சியில் ஒருவரது வாழ்க்கையை நினைத்துப்பார்ப்பது காலத்தின் போக்கில் வயதின் மாற்றங்களையும் காலத்தின் ரேகையையும் உணர்த்துகிறது. ஆறு ஆண்டு முயற்சியை ஆறு நிமிட வீடியோவாக பார்ப்பது யூடியூப் ரசகர்களுக்கே கூட புது அனுபவமாக தான் இருந்திருக்க வேண்டும். அது தான் அந்த வீடியோ உடனடியாக பிரபலமானது. லட்சக்கணக்கானோர் அதை பார்த்து ரசித்ததுடன் மற்றவர்களுக்கு பரிந்துரைத்தனர்.பத்திரிகைகளும் அவரது புதுமையான முயற்சியை பாராட்டி எழுதின. விளைவு நோவா கிலின் இணைய நட்சத்திரமானார். இந்த வீடியோவுக்கு உயிரூட்டும் வகையில் அதன் பின்னணி இசை அமைந்திருந்தது. ( கலினின் மாஜி காதலியின் கைவண்ணம்). க்லினா முதலில் புகைப்பட திட்டமாக தான் இப்படி தினமும் புகைப்படம் எடுத்தார். ஆனால் இடையே அவரது நண்பர் இந்த படங்களை டைம்லேப்ஸ் தன்மை கொண்ட காலவரிசைப்படங்களாக தொகுக்கலாம் என்று கூறினார். மேலும் கலிபோர்னியாவை சேர்ந்த ஆஹ்ரி லீ எனும் கலைஞரும் இப்படி ஆயிரம் படங்களை காலவரிசைப்படங்களாக உருவாக்கியிருந்த்தை பார்த்து உந்துதல் பெற்று தன்னிடம் இருந்த ஆறாண்டு கால தொகுப்பை காலவரிசை தொகுப்பாக்கினார். இன்று சுயப்படங்களும், டைம்லேப்ஸ் என்று சொல்லப்படும் காலவரிசை படங்களும் இணையத்தில் மிகவும் பிரபலமாக்குகிறது. ஒருவருக்கு வயதாவதை புகைப்படங்களின் வீடியோ தொகுப்பாக காட்டுவதும் பிரபலமாக இருக்கிறது. இவற்றுக்கு எல்லாம் கலினா தான் முன்னோடி. கலினாவின் புதுமையான முயற்சி டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் சாத்தியங்களை உணர்த்துவதாகவும் இருப்பதாக பாராட்டப்படுகிறது. டிஜிட்டல் காமிரா மூலம் படம் எடுப்பது சுலபமாக இருப்பதுடன் புகைப்படங்களை சாப்ட்வேர் கொண்டு தொகுப்பதும் எளிதாக இருக்கிறது. அதன் அடையாளம் தான் கலினாவின் ஆறு நிமிட புகைப்பட வீடியோ தொகுப்பு. கலினா ஒவ்வொரு நாளும் படமெடுப்பதை இன்னும் தொடர்கிறார். அவரது இணைய தளத்தில் இந்த படங்களை பார்க்கலாம். மொத்த படங்களையும் சின்ன சின்ன படங்களின் பிக்சல் தொகுப்பாக உருவாக்கி வைத்திருக்கிறார். எந்த புள்ளியை கிளிக் செய்தாலும் ஒரு புகைப்படத்தை பார்க்கலாம்.
நோவோ கலினாவின் வீடியோ: https://www.youtube.com/watch?v=6B26asyGKDo
http://noahkalina.com/36/44#1
————-
நெட்சத்திரங்கள் புத்தகத்தின் இரண்டாம் பாகமான நெட்சத்திரங்கள் 2.0- தொகுப்பிற்காக எழுதிய கட்டுரைகளில் ஒன்று).