மாஜி காதலனுடன் உறவை முறித்துக்கொண்டு தன் வழியில் செல்ல தீர்மானித்த பெண் வேறு வழியில்லாமல் அந்த நபருடனேயே ஒரே வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டதை என்னவென சொல்வது?
இதை படிக்கும் போது, சுவாரஸ்யமான சிறுகதை போல இருக்கிறதா? ஆம் எனில், இது போன்ற கதைகளை படிப்பதற்கு என்றே ‘சோசியல் டிஸ்டன்சிங் பிராஜக்ட்” எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் விதவிதமான கதைகளை நீங்கள் படிக்கலாம். ஆனால் இவை எதுவுமே வெறும் கதை அல்ல, தனித்திருத்தல் கால அனுபவங்களை சொல்லும் வாழ்க்கை கதைகள்.
ஆம், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. வெளியே இருக்கும் போது சமூக தொலைவை கடைப்பிடிக்க வலியுறுத்தப்படும் நிலையில், வீட்டிலேயே தங்கியிருப்பது தான் பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது.
விளைவு பலரும் வீட்டிலேயே அடைந்து கிடக்கின்றனர். வெளியே சுற்றித்திர்ந்தவர்களுக்கு இப்படி 24 மணி நேரமும் வீட்டிலேயே இருப்பது என்பது சவாலானது தான். வீட்டிலே இருப்பதில் பலவிதமான பிரச்சனைகள் இருந்தாலும், குடும்பத்தினரே பிரச்சனையாக கூடும் என்று பலரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் அதுவும் தான் தனித்திருத்தலில் நிகழ்கிறது.
என்ன தான் அன்புக்குறியவர்களாகவும், நெருக்கமானவர்களாகவும் இருந்தாலும், ஒரே இடத்தில் அடைப்பட்டிருக்கும் சூழலில், உறவு சார்ந்த சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது அல்லவா! கணவரின் நச்சரிப்பு மனைவிக்கு எரிச்சலாக இருக்கலாம். மனைவியின் செயல் கணவருக்கு தாங்க முடியாததாக அமையலாம். இவை எல்லாமே பெரும் பிரச்சனை என்று சொல்லிவிட முடியாது. சில புன்னகைக்க வைக்கலாம். சில விநோதமாக தோன்றலாம். இன்னும் சில சுவாரஸ்யமாக அமையலாம்.
தனித்திருத்தல் சூழலில், இப்படி ஒவ்வொரு வீடுகளிலும் நிகழ்வும் உறவு சார்ந்த சிக்கல்களை, கதைகளாக ‘சோசியல் டிஸ்டன்சிங் பிராஜக்ட்” பதிவு செய்து வருகிறது. இந்த தளத்தில் இடம்பெற்றுள்ள கதைகளை படிக்கும் போது, தனித்திருக்கும் சூழலின் அழுத்தத்தை உணர்பவர்கள் அவற்றில் இருந்து மனதளவில் சற்றேனும் விடுபடலாம். அதே நேரத்தில், மனித உறவுகளின் விசித்தர தன்மையிலும் லயிக்கலாம்.
உதாரணத்திற்கு, இளம் பெண் ஒருவர் மதிய உணவுக்கும், இரவு உணவுக்கும் எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து கொண்டு வீட்டில் உள்ள அனைத்து எலுமிச்சை பழங்களையும் காலி செய்துவிட்டதால் அவரது காதலன் வெறுத்துப்போயிருக்கிறார்.
பள்ளி முதல்வராக இருக்கும் பெண்மணி ஒருவர், தன் மூலம் அம்மாவுக்கு கொரோனா ஒட்டுக்கொண்டுவிடப்போகிறதே எனும் அச்சத்தில் கணவர் தன்னை விட்டு விட்டு அம்மாவுடன் வேறு வீட்டிற்கு குடியேறிவிட்டதை வருத்ததுடன் பதிவிட்டுள்ளார். தான் டைட்டானிக் கப்பலில் தனித்து விடப்பட்டது போல உணர்வதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இன்னொரு பெண்மணியோ தன்னுடன் இருக்கும் கணவரால் ஏற்படும் சங்கடங்களை ஏழு பக்கங்களுக்கு கொட்டித்தீர்த்திருக்கிறார்.
இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த இளைஞர் ஒருவர் தனது காதலி அது பற்றி வேதனையுடன் பகிர்ந்து கொண்டிருந்ததை இந்த பதிவு வாயிலாக தெரிந்து கொண்டு அதன் பயனாக தங்கள் உறவு முறிவையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இப்படி தனித்திருத்தல் சூழல் ஏற்படுத்தியிருக்கும் வித்தியாசமான அனுபவங்களை இந்த தளத்தில் எதிர்கொள்ளலாம்.
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஆசுவாசம் அளிக்க கூடிய அருமையான முயற்சியாக இந்த இணையதளம் அமைந்திருப்பதாக தோன்றுகிறது அல்லவா?. சுவாரஸ்யமான இந்த தளம் உருவான பின்னணியிலும் ஒரு சுவையான கதை இருக்கிறது.
அமெரிக்க பத்திரிகையாளரான மேக் ஜுகின் என்பவர், கொரோனா ஊரடங்கு உத்தரவால் திடிரென தனது காதலனுடன் ஒரே வீட்டில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட போது, இந்த நெருக்கம் இனிமையாக இருந்தாலும், முட்டலும் மோதலும் ஏற்படக்கூடியதாக இருப்பதையும் உணர்ந்திருக்கிறார்.
இதனையடுத்து, தனித்திருத்தல் மற்ற குடும்பங்களிலும் இத்தகைய மென் நெருக்கடிகளை உருவாக்க வாய்ப்புள்ளதை உணர்ந்தவர், இது பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து மற்றவர்களிடம் இத்தகைய கதைகள் இருந்தால் தன்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டிருந்தார்.
எல்லோரும் டிவிட்டரில் இது போன்ற வேண்டுகோளை விடுக்கின்றனரனரோ தானும் கேட்டுப்பார்ப்போம் என்ற எண்ணத்தில் அவர் செயல்பட்டிருந்தாலும், அவரே எதிர்பாராத அளவுக்கு மற்றவர்கள் தங்கள் தனித்திருத்தல் கதைகளை இமெயிலில் பகிர்ந்து கொள்ளத்துவங்கினர்.
வீட்டிலேயே முடங்கி கிடந்த சூழலில், வெளியே சொல்ல முடியாத மனக்குமுறல்களை நீங்களாவது கேட்டீர்களே என்பது போல பலரும் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
இத்தகைய வரவேற்பை எதிர்பார்க்காத ஜுகின், இந்த கதைகளை பெயர் குறிப்பிடாமல் வெளியிடலாமா எனக்கேட்டு அதற்கான அனுமதியும் பெற்றார். அதோடு இந்த கதைகளை நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தும் உத்தேசத்துடன், இந்த தொகுப்புகளை படிக்க ஒரு டாலர் நன்கொடை அளிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.
அவர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், ஆயிரக்கணக்கானோர் நன்கொடை செலுத்தி இந்த கதைகளை படிக்க முன்வந்தனர். இதன் பயனாக, இந்த கதைகளை பகிர்ந்து கொள்வதற்காக என்று ஒரு இணையதளத்தையே துவக்கிவிட்டார். அந்த தளத்தில் தான் தொடர்ந்து பலரும் தங்கள் தனித்திருத்தல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்த கதைகளை இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமும் பகிர்ந்து கொண்டு வருகிறார். முக்கியமாக கொரோனா பாதிப்புக்கு நன்கொடை செலுத்தவும் வழி செய்திருக்கிறார்.
ஆக, விளையாட்டாக துவங்கிய ஒரு திட்டம் கொரோனா கால மனித உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் மாபெரும் சமூக இணையதளமாக உருவெடுத்திருக்கிறது.
இணையதள முகவரி: https://www.thesocialdistanceproject.org/