கொரோனாவால் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழலில், பிள்ளைகள் பலரது மனதில் எழும் கேள்விக்கு பதிலாக உருவாக்கப்பட்டிருக்கும் இணையதளம் ’டாட் ஐயம் சோ போர்ட்’ (https://dadimsobored.com/ ).
வீட்டிலேயே இருப்பதால், பொழுது போகாமல் அலுப்பாக இருக்கும் தானே. இது தொடர்பாக ஆங்கிலத்தில் பிள்ளைகள் அப்பாவிடம் முறையிடுவது போல இந்த தளத்தின் பெயர் அமைந்திருக்கிறது.- அப்பா, மிகவும் போரடிக்கிறது!.
இந்த கேள்விக்கு பதில் அளிக்கு வகையில் தான் தளத்தின் உள்ளடக்கம் அமைந்திருக்கிறது. அதாவது, அலுப்பை விரட்டி அடிக்கும் வகையில் பிள்ளைகள் இணையத்தில் செய்யக்கூடிய நடவடிக்கைகளை பட்டியலிடுகிறது.
அதிகம் இல்லை, மொத்தமே ஒரு பக்கத்தில் இந்த தகவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
கற்றுக்கொள்வதற்கான இணையதளங்கள், வாசிப்பதற்கான இணையதளங்கள், கண்டறிவதற்கான இணையதளங்கள், கலை சார்ந்த இணையதளங்கள், கோடிங் கற்கும் தளங்கள் என இந்த பட்டியல் அமைந்துள்ளது. இணையதள உருவாக்க வழிகாட்டியும் இதில் உள்ளது.
பொழுதுபோக்கு நோக்கிலான இணையதளங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் தளமே, இணைய கற்றலின் இருப்பிடங்களில் ஒன்றாக கருதப்படும் கான் அகாடமியாக அமைந்துள்ளது. அருமையான பட்டியல். இணையத்தின் பயனுள்ள இணையதளங்களையும் எல்லாம் கவனமாக தேர்வு செய்து தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.
எல்லா தளங்களும் சுவாரஸ்யம் தருவதாகவும் இருக்கும் என்பது சிறப்பு.
இணையதள முகவரி: https://dadimsobored.com/
—
சுவாரஸ்யமான, பயனுள்ள, புதிய இணையதளங்களின் அறிமுகம் செய்யும் நோக்கத்துடன் இணைய மலர் எனும் புதிய மின்மடலை துவக்கியுள்ளேன். அதில் பகிரப்பட்ட முதல் இணையதளம் இது. தொடர்ந்து புதிய இணையதளங்களை கண்டறிய, இந்த மின்மடலில் உங்கள் இமெயில் முகவரியை சமர்பித்து இணையவும்: https://tinyletter.com/cybersimman