புத்தகங்களில் ஆர்வம் உள்ளவர்கள், அதிலும் குறிப்பாக மின்னூல்களில் ஆர்வம் உள்ளவர்கள், புராஜெக்ட் குடென்ர்பர்க் இணையதளம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த தளம் மின்னூல்களை இலவசமாக வாசிக்க வழி செய்யும் இணையதளம்.
அப்படியா என கேட்டுவிட்டு, பிராஜெக்ட் குடென்பெர்க் தளத்திற்கு படையெடுப்பதற்கு முன், இலவசம் மின்னூல் என்றால் என்ன என்பது குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது.
இலவசம் என்று இங்கே குறிப்பிடுவது கட்டணம் இல்லா தன்மையை அல்ல. குடென்பெர்க் தளத்தில், கட்டணம் இல்லாமல் மின்னூல்களை படிக்கலாம் என்றாலும், விஷயம் அதுவல்ல. இலவசம் என்பது உண்மையில் இங்கே குறிப்பது சுதந்திரத்தை. அதாவது, புத்தகத்தை மின்னூல் வடிவில் அணுகு வாசிக்கும் வசதியை.
இது தொடர்பாக இந்த தளத்திலேயே, ’விலை இல்லாத தன்மையா அல்லது சுதந்திரமா?’ எனும் தலைப்பில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இலவசம் என்பதை குறிக்கும் ஆங்கில சொல்லுக்கு, விலையில்லா தன்மை அல்லது சுதந்திரம் என பொருள் எடுத்துக்கொள்ளலாம்.
விலையில்லாத தன்மை என்றால், கட்டணம் செலுத்தாமல் புத்தகத்தை பெறுவது என்பதாகும். ஆனால் சுதந்திரம் என எடுத்துக்கொண்டால், புத்தகத்தை நாம் விரும்பிய வகையில் பயன்படுத்துவதாகும். அதாவது, நாம் பெறும் புத்தகத்தை, எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நாம் விரும்பிய வகையில் கையாள்வது.
குடென்பெர்க் தளத்தை பொருத்தவரை, மின்னூல்களை இந்த வகையான சுதந்திரத்துடன் வழங்குகிறது. அதற்கேற்ப இந்த தளம், பொதுவெளியில் உள்ள காப்புரிமை விடுபட்ட நூல்களை மட்டுமே மின்னூலாக அளிக்கிறது. இந்த மின்னூலை வாசகர்கள் தங்கள் விரும்பிய வகையில் பயன்படுத்தலாம்.
இந்த சுதந்திர தன்மையே குடென்பெர்க் தளத்தின் தனிச்சிறப்பு. ( எதற்கெடுத்தாலும், இலவச பிடிஎப் நூல்கள் எதிர்பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியதும் இது தான்).
குடென்பெர்க் திட்டம் வழங்கும் மின்னூல்களின் சுதந்திர தன்மையை மற்றவர்கள் எந்த வகையில் பயன்படுத்துகின்றனர் என்பதற்கான உதாரணங்களும் இந்த தளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
இணையத்தை பயன்படுத்தும் அனைவரும், குடென்பெர்க் திட்டம் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கான காரணங்களை விளக்கி, குடென்பெர்க் திட்ட இணையதளத்தை, இணைய மலர் மின்மடல் அறிமுகம் செய்கிறது. நீங்களும் இந்த மின்மடலில் இணையும்படி வேண்ட்கிறேன். –