மே தின இணையதளம்

3c484c65a2d021a349aae5bdf03a26b7_Mஇன்று உழைப்பாளர் தினம். தொழிலாளர்கள் நலனுக்காக போராடி வரும் தொழிற்சங்க அமைப்புகளுக்கான மையமான சி.ஐ.டி.யூ. அமைப்பின் இணையதளத்தை பார்க்கலாம். http://citucentre.org/
கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கும் சவாலான சூழலில், வேலையிழப்பு எனும் வார்த்தையை அதன் எடை தெரியாமல் பலரும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், முன் எப்போதையும் விட இப்போது தான் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பின் தேவை உணரப்படும் சூழலில், இந்த இணையதளத்தை அறிமுகம் செய்து கொள்வது பொருத்தமாகவே இருக்கும்.
சி.ஐ.டி.யூ இணையதளம் எளிமையான வடிவமைப்பை கொண்டிருந்தாலும், ஈர்ப்புடையதாக அமைந்துள்ளது. தற்போது முகப்பு பக்கத்தில், மே தின வாழ்த்துகளுடன் வரவேற்கிறது. கொரோனா சூழலை முன்னிறுத்தி, பெரும் பணக்காரர்களுக்கு வரி விதியுங்கள், ஏழைகளை காபாற்றுங்கள் எனும் சுவரொட்டி வாசகம் முழங்குகிறது. 12 மணி நேர வேலையும் கூடாது, வேலையிழப்பும் கூடாது, சம்பள குறைப்பும் கூடாது எனும் வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.
அருகே, சி.ஐ.டி.யூ தொடர்பான செய்தி வெளியீடுகள் இடம்பெற்றுள்ளன. அமைப்பின் வரலாறு மற்றும் பொறுப்பாளர்கள் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். சி.ஐ.டி.யூ பேஸ்புக் பக்கத்தில் இடம்பெறும் தகவல்களுக்கான பகுதியும் அமைந்துள்ளது.
சி.ஐ.டி.யூ சார்பில் வெளியாகும் சஞ்சிகைகள், புத்தகங்களையும் அணுகலாம். இதன் சர்வதேச சகோதர அமைப்பான, உலக தொழிற்சங்க கூட்டமைப்புகளின் இணையதளத்திற்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது: http://www.wftucentral.org/

வீடியோ சந்திப்பிற்கான ஓபன் சோர்ஸ் இணையதளம்
லாக்டவுன் காலத்தில் பலரும் வீடியோ வழி உரையாடல்களை நாடி வரும் நிலையில், வீடியோ சந்திப்பு சேவையை வழங்கும் இணையதளங்களை தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது. வீடியோ சந்திப்பிற்காக முதன்மையான அறியப்படும் ஜும் சேவை சர்ச்சைக்குறியதாகவும் இருப்பதால் மாற்று சேவைகளை அறிந்து கொள்வது முக்கியமாகிறது.
இத்தகைய மாற்று வீடியோ சந்திப்பு சேவைகளில் ஜிட்சி (Jitsi Meet ) தனித்து நிற்பதை உணரலாம். ஏனெனில், இது பயனாளிகள் கையில் உரிமையை அளிக்கும் ஓபன் சோர்ஸ் தளமாக இருப்பது தான்.

EUTOCOAXgAAKaEl
ஜூம் சேவையுடன் ஒப்பிட்டு பார்த்தாலும், ஜிட்சி சிறப்பானதாக இருப்பதாகவே கருதப்படுகிறது. முதலில், ஜூம் சேவை போலவே இதுவும் பயன்படுத்த எளிமையானது. ஜிட்சி சேவையை பயன்படுத்த எந்த மென்பொருளையும் நிறுவ வேண்டியதில்லை. உறுப்பினராக பதிவு செய்யும் அவசியமும் இல்லை. ஜிட்சி மீட் தளத்தில் நுழைந்து, புதிய சந்திப்பை துவக்கும் வசதியை நமது பிரவுசரிலேயே உருவாக்கி கொள்ளலாம்.
அதன் பிறகு, இதற்கான இணைப்பை இமெயில் அல்லது சமூக ஊடகம் வழியே பகிர்ந்து கொண்டு, உரையாட விரும்புகிறவர்களை வீடியோ அறையில் இணைத்துக்கொள்ளலாம். இப்படி எத்தனை பேரை வேண்டுமானாலும் சந்திப்பில் இடம்பெறச்செய்யலாம்.
அழைப்புகளுக்கு பாஸ்வேர்டு பூட்டி போட்டு, அனுமதி இல்லாமல் யாரும் நுழைந்து வில்லங்கம் செய்வதை தடுக்கலாம்.
பின்னணியை மங்கச்செய்வது, திரையை பதிவு செய்வது பகிர்வது போன்ற வசதிகளும் உள்ளன. வீடியோ சந்திப்பை அப்படியே நேரலையாக்கி யூடியூப் வீடியோவாக மாற்றிக்கொள்லாம் அல்லது டிராப்பாக்சில் சேமித்துக்கொள்ளலாம். இதெல்லாம் ஜூமில் இல்லாத வசதிகள்.
வீடியோ சந்திப்பில் பங்கேற்பவர்கள், கையுர்த்தி கருத்து தெரிவித்து உரையாடலிலும் பங்கேற்கலாம்.
இன்னும் பலவிதங்களில் மேம்பட்டது என்றாலும், ஜிட்சியின் தனித்தன்மை அதன் ஓபன் சோர்ஸ் தன்மை. இதன் காரணமாகவே இது மிகவும் பாதுகாப்பானது. எப்படி எனில், பயனாளிகள் விரும்பினால், ஜிட்சி மெப்பொருளை தரவிறக்கம் செய்து தங்கள் கம்ப்யூட்டரிலேயே அதை இயக்கி கொள்ளலாம். வேறு யாரும் அதில் மூக்கை நுழைக்க முடியாது. விஷயம் தெரிந்தவர்கள், தங்கள் தேவைக்கேற்ப இந்த சேவையின் நிரலிலும் மாற்றம் செய்து கொள்ளலாம்.
மேலும் ஜிட்சி உரையாடல்கள் இரு முனையிலும் என்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றையும் விட, ஜிட்சிக்கு இன்னொரு பெருமையும் இருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில், அரசுகளின் கண்காணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து வரும் எட்வர்ட் ஸ்னோடன் பரிந்துரைக்கும் சேவையாக இது இருக்கிறது. அமெரிக்க அரசின் வலையில் சிக்காமல் தலைமறைவாக இருக்கும் ஸ்னோடன், ரஷ்யாவில் பதுங்கியிருந்த போது, பத்திரிகையாளர்களுக்கு வீடியோ பேட்டி அளிக்க ஜிட்சியை பயன்படுத்தியதாக அறிய முடிகிறது.
இணையதள முகவரி: https://meet.jit.si/

தாயகம் திரும்ப உதவும் தளம்
கொரோனா பாதிப்பு சூழலில், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் பலவித இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதே போல பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்களும், தமிழர்களும் லாக்டவுன் காலத்தில் தாயகம் திரும்ப முடியாமல் அங்கேயே தங்கி அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள், சர்வதேச விமான போக்குவரத்து துவங்கியதும் தமிழகம் திரும்பி வர வழி செய்யும் வகையில் அவர்கள் பதிவு செய்து கொள்வதற்கான இணையதளத்தை தமிழக அரசு அமைத்துள்ளது: https://www.nonresidenttamil.org/home

இணைய மலர் மின்மடலில் எழுதியதுhttps://tinyletter.com/cybersimman

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *