இணைய வதந்திகளை அடித்து நொறுக்கும் இணையதளம். உண்மை போல உலாவும் கட்டுக்கதைகள் குறித்து தெளிய வைக்கும் இணையதளம். பொய்த்தகவல்களையும், மோசடி செய்திகளையும் தோலுறித்துக்காட்டும் இணையதளம். உண்மை எது, பொய் எது என பிரித்துக்காட்டும் இணையதளம். இப்படி பலவிதங்களில் ஸ்னோப்ஸ் (Snopes.com) இணையதளத்தை வர்ணிக்கலாம்.
இந்த காரணங்களுக்காகவே இணையத்தின் முன்னோடி தளங்களில் ஒன்றாக ஸ்னோப்ஸ் விளங்குகிறது. இணையத்தில் உலாவும் தகவல்களின் நம்பகத்தன்மையில் ஏதேனும் சந்தேகம் என்றால், அதற்கான விடை காண நாடப்படும் இடமாகவும் அறியப்படுகிறது.
சமூக ஊடக யுகத்தில் பொய்ச்செய்திகளும், தவறான தகவல்களும் இறக்கை கட்டி பறப்பதால், தகவல்களை சரி பார்த்து சொல்லும் தளங்களின் தேவை பெரிதும் உணரப்படும் நிலையில், இந்த சேவையை வலையின் ஆரம்ப காலத்தில் இருந்து ஸ்னோப்ஸ் செய்து வருகிறது என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.
யூஸ்நெட் விவாத குழு ஒன்றில் இருந்து ஸ்னோப்ஸ் துவங்கியது எனும் தகவலில் இருந்தே இதை புரிந்து கொள்ளலாம். ஸ்னோப்ஸ் தளத்தின் நிறுவனர்களில் ஒருவரான டேவிட் மிக்கல்சன் (David Mikkelson), அப்போது (1994) alt.folklore.urban எனும் யூஸ்நெட் குழுவில் உறுப்பினராக இருந்தார். பொதுமக்கள் மத்தியில் உலா வந்த தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்து அவற்றை தெளிவுபடுத்தும் குழுவாக இது விளங்கியது.
டேவிட் மிக்கல்சனும் ஆர்வத்துடன் இதில் ஈடுபட்டிருந்தார். யார் சொன்னது, எப்படி பரவியது என்று தெரியாமலே, எல்லோராலும் பேசப்பட்டு வந்த விஷயங்களை மணிக்கணக்கில் ஆய்வு செய்து, மூல தரவுகளை தேடி, அந்த தகவல்கள் உண்மை தானா என்பதை தெளிவுபடுத்தும் வகையில் அவரது பணி அமைந்திருந்தது. பொதுவாக இந்த வகை தகவல்கள் நகர்புற கட்டுக்கதைகள் (அர்பன் லெஜண்ட்ஸ்) என குறிப்பிடப்படுகின்றன.
இதே கால கட்டத்தில், பார்பரா அறிமுகம் ஆனார். பார்பராவுக்கும் நகர்புற கட்டுக்கதைகளை தெளிவுபடுத்துவதில் ஆர்வம் இருந்தது. அதுவே இருவரையும் இணைத்து, திருமணம் செய்து கொள்ள வைத்தது. அதற்கு முன்னதாக, ஸ்னோப்ஸ் தளத்தை துவக்கினர்.
யூஸ்நெட் குழுவில் பங்களிப்பு செய்து வந்த தகவல்களை எல்லாம் ஒன்று திரட்டி ஓரிடத்தில் வழங்கும் நோக்கத்துடன் ஸ்னோப்ஸ் தளத்தை நடத்த துவங்கினர். கம்ப்யூட்டர் புரோகிராமராக இருந்த டேவிட், வேலையை பார்த்தபடி ஸ்னோப்ஸ் தளத்திற்கான தகவல் ஆய்வை வழங்கி வந்தார். பார்பராவும் தன் பங்கிற்கு முழு நேர ஆய்வில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது செயல்பட்டு வந்த இணையதளங்களில் ஸ்னோப்ஸ் தனித்து விளங்கியது. அந்த கால கட்டத்தில் துவங்கப்பட்ட பெரும்பாலான தளங்கள் தகவல்களை அளிப்பதிலும், சேவைகள் அளிப்பதிலும் கவனம் செலுத்தின. இவற்றுக்கு மத்தியில் ஸ்னோப்ஸ், பரபரப்பாக பேசப்படும் விஷயங்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்து தெளிவுபடுத்தியது.
உதாரணத்திற்கு ஒரு கதையை பார்க்கலாம். அமெரிக்காவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் தம்பதியினர் விடுமுறை பயணத்தை மேற்கொண்டிருந்தனர். அப்போது, சாலை ஓரமாக கார் ஒன்று பழுதாகி இருப்பதை பார்த்தனர். மழை வேறு பெய்து கொண்டிருந்த நிலையில், அவர்கள் காரை பழுது பார்க்க உதவினர். இந்த உதவியால் நெகிழ்ந்து போன கார் டிரைவர் அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வாங்கிச்சென்றார். அடுத்த சில வாரங்கள் கழித்து, அந்த தம்பதியின் வீட்டுக்கடன் அடைக்கப்பட்டு வங்கி கணக்கில் 10 ஆயிரம் டாலர் செலுத்தப்பட்டிருந்தது. பில்கேட்ஸ் என்பவர் அதை செலுத்தியிருந்தார். அப்போது தான், அவர்கள் உதவி செய்த காரில் இருந்த நபர் பில்கேட்ஸ் எனும் விவரம் அவர்களுக்கு தெரிய வந்தது.
இந்த கதை எப்படி இருக்கிறது. இப்படியும் ஒரு மனிதரா என பில் கேட்சை நினைத்து உருக வைக்கிறது அல்லவா? ஆனால் பிரச்சனை என்னவெனில், இது கதை தானே தவிர நிஜத்தில் நிகழ்ந்தது இல்லை. விஷயம் என்னவென்றால் இந்த கதை பல ஆண்டுகளாக பல வடிவங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. முதலில் ஆட்டோமொபைல் சக்ரவர்த்தி இந்த கதையின் நாயகனாக இருந்தார். அதன் பிறகு பில்கேட்ஸ் வந்தார். அவரை அடுத்து டொனால்டு டிரம்ப் வந்தார்.
இந்த கதை உண்மை தானா என்று கேட்பது கூட அவசியம் என்று நினைக்காமல் பலரும் இவற்றை படித்து வருகின்றனர். இமெயிலில் பகிர்ந்து வருகின்றனர். இப்போது தானே, வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக்கிலும் பகிர்வது பிரபலமாக இருக்கிறது. அந்த காலத்தில் இமெயில் வாயிலாக தான் இது போன்ற தகவல்கள் பகிரப்பட்டன.
இது போன்ற கதைகள், பேச்சு வழக்குகள், திடுக்கிடும் உண்மைகள், தட்டி கழிக்க முடியாத வதந்திகள் போன்ற விஷயங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு, அவை உண்மையா, பொய்யா அல்லது உறுதி செய்ய முடியாதவையா? எனும் தீர்ப்பை ஸ்னோப்ஸ் வழங்கியது. இதற்கு வலு சேர்க்கும் தகவல்களை ஆய்வு மூலம் ஆதாரமாக வழங்கியது.
ஆக, இணையத்தில் உலாவும் கட்டுக்கதைகள் உண்மையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் எனில், ஸ்னோப்ஸ் தளத்தில் நுழைந்து பார்த்தால் போதுமானது. சில நேரங்களில் பரபரப்பாக பேசப்படும் விஷயங்கள் குறித்து ஸ்னோப்ஸ் அளிக்கும் விளக்கத்தை அடிப்படையாக கொண்டும் செய்தி வெளியிடப்படுவதுண்டு.
இப்படி தான், இணையத்தின் தகவல் துப்பறிவாள தளமாக ஸ்னோப்ஸ் உருவானது.
2001 ம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட போது, இணையத்திலும், இமெயில்களிலும், இந்த தாக்குதல் தொடர்பான சரி பார்க்கப்படாத தகவல்களும், சதி கோட்பாடுகளும் தீவிரமாக உலா வந்தன. இவற்றில் பெரும்பாலான தகவல்களை ஆய்வு மூலம் சரி பார்த்து விளக்கம் அளிக்கும் பணியை ஸ்னோப்ஸ் மேற்கொண்டது. அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களில் இவை செய்தியாகி, ஸ்னோப்ஸ் உலக அளவில் அறியப்பட்டது.
தொடர்ந்து ஸ்னோப்ஸ் தனது தகவல் சரி பார்ப்பு பணியை செய்து வருகிறது. இதனிடையே, வேறு பல தகவல் சரி பார்ப்பு தளங்களும் உருவாயின. புத்தாயிரமாண்டுக்கு பிறகு சமூக ஊடகங்கள் பிரபலமான நிலையில், இணையத்தில் எதையும் பகிர்வதும், பரப்புவதும் எளிதாகி, பொய்ச்செய்திகளின் தாக்கம் அதிகரித்த நிலையில் ஸ்னோப்ஸ் போன்ற தளங்களின் தேவை முன் எப்போதையும் விட அதிகம் உணரப்பட்டது.
தற்போது, கொரோனா சூழலில், தவறான தகவல்களும், வைரஸ் கட்டுக்கதைகளும் வைரசை விட வேகமாக பரவி வரும் நிலையில், ஸ்னோப்ஸ் நிதானமாக அவற்றின் நம்பத்தன்மையை உறுதி படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இணையதள முகவரி: https://www.snopes.com/
–
பி.கு: ஸ்னோப்ஸ் தளத்தின் நிறுவனர்கள் மிக்கல்சன் தம்பதி இடையே மனக்கசப்பு ஏற்பட்டு, இருவரும் விவகாரத்து பெற்றுவிட்ட நிலையில், அவர்கள் இணைந்து உருவாக்கிய ஸ்னோப்ஸ் தளத்தின் உரிமை பிரச்னை நீதிமன்ற வழக்காகி, ஸ்னோப்ஸ் இடையே தள்ளாடும் நிலை ஏற்பட்டது தனி கிளைக்கதை.
–
ஸ்னோப்ஸ் தளம் தொடர்பான பதிவுகளை இணைய காப்பகத்தில் பார்க்க முடியவில்லை. ஆனால், ஸ்னோப்ஸ் வளர்ச்சி பற்றி விவரிக்கும் ரீடர்ஸ் டைஜஸ்ட் கட்டுரையை இணையத்தில் கண்டுபிடிக்க முடியாத நிலையில், இணைய காப்பகத்தில் அதன் நகல் இருக்கிறது: https://web.archive.org/web/20090318123647/http://www.rd.com/your-america-inspiring-people-and-stories/rumor-detectives-true-story-or-online-hoax/article122216.html