கொரோனா முடிந்த பிறகு என்ன செய்ய இருக்கிறீர்கள்? எனும் கேள்விக்கு உங்களை பதில் அளிக்க தூண்டும் வகையில் ’வென்கொரோனாஎண்ட்ஸ்’ (https://whencoronaends.com/) இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவெனில் , கொரோனாவுக்கு பின் நீங்கள் செய்யக்கூடிய ஐந்து விஷயங்களை பட்டியல் போட வேண்டும் என்பது தான்.
புத்தாண்டு உறுதி மொழி போல, இதை கொரோனா கால உறுதிமொழியாக கொள்ளலாம்.
நாம் எல்லோருமே வாழ்க்கையில் பல உறுதிமொழிகளை மேற்கொள்கிறோம். ஆனால், அதை நிறைவேற்ற முடியாமல் பிஸியாகி விடுகிறோம். இது பலருக்கும் உள்ள பழக்கம் தான். எனினும் கொரோனா பாதிப்பு வாழ்வின் புதிய நிதர்சனத்தை உணர்த்தியுள்ள நிலையில், நாம் செய்ய நினைத்ததை எல்லாம் தள்ளிப்போடாமல் செய்து முடித்தால் என்ன என்று புரிய வைத்திருக்கிறது அல்லவா?
ஆகவே, நீங்கள் செய்ய நினைத்து செய்யாமல் இருக்கும் விஷயங்களை செய்து முடிக்க உறுதி எடுத்துக்கொள்ளுங்கள் என ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தும் வகையில், கொரோனா முடிந்த பிறகு செய்ய நினைக்கும் ஐந்து விஷயங்களை பட்டியலிட்டு, அதை #whencoronaends எனும் ஹாஷ்டேகுடன் பகிர்ந்து கொள்ளுமாறு இந்த தளம் வேண்டுகோள் வைக்கிறது.
கொரோனா ஒவ்வொருவருக்கும் பல பாடங்களை கற்று கொடுத்திருக்கிறது. நீங்கள் செய்ய நினைத்ததை செய்யுங்கள் என்பது தான் அதில் மிகப்பெரிய பாடம்.
கொரோனாவுக்கு பின் நீங்கள் செய்ய நினைக்கும் ஐந்து விஷயங்கள் என்ன?
இணையதள முகவரி: https://whencoronaends.com/
–
இன்றைய மின்மடல் இணைய மலரில், ஸ்பாட்டிபை சேவை மூலம் சேர்ந்திசை கேட்கும் புதுமையான இணையதளம் பற்றிய அறிமுகம் இடம்பெற்றுள்ளது. மேலும் அறிய: https://tinyletter.com/cybersimman