லாக்டவுன் காலத்தில் கொண்டாடப்படும் பிபிசி தந்தை

kelly2பிபிசி தந்தையும், அதைவிட முக்கியமாக அவரது குடும்பமும் மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றி பேட்டி அளித்திருப்பது, லாக்டவுன் நெருக்கடிக்கு மத்தியில் பலருக்கும் உற்சாகம் அளித்துள்ளது. பெரும்பாலானோர் வீட்டுக்குளேயே முடங்கி கிடக்கும் சூழலில், இந்த குடும்பத்தை தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் எல்லாம், அட நம்ப குடும்பம் என்று குதூகலம் அடைந்துள்ளனர்.
கொரோனா உண்டாக்கியிருக்கும் மன உளைச்சலுக்கு மத்தியில், பிபிசி தந்தை குடும்பத்தின் தொலைக்காட்சி பிரவேசம், வீட்டிற்குள் இருப்பவர்கள் லேசாக கொண்டாடி மகிழ்வதற்கான தருணமாக அமைந்துள்ளது.
யார் இந்த பிபிசி தந்தை, அவர் குடும்பத்துடன் தொலைக்காட்சியில் தோன்றி பேட்டி அளிப்பது என்ன அத்தனை பெரிய விஷயமா? என புரியாமல் கேட்கும் நிலையில் இருப்பவர்களுக்காக, முதலில் பிபிசி தந்தை பற்றி ஒரு சிறு அறிமுகம்.
தென் கொரியாவின் அரசியல் விஞ்ஞான பேராசிரியரான, ராபர்ட் கெல்லி (Robert Kelly) தான், பிபிசி தந்தை என அழைக்கப்படுகிறார். சில ஆண்டுகளுக்கு முன் ( 2017) பிபிசி தொலைக்காட்சியில் பேட்டி அளித்த போது, உண்டான வைரல் புகழை அடுத்து கெல்லி இணையவாசிகளால் பிபிசி தந்தை என அன்போடு அழைக்கப்படுகிறார்.
அப்போது, தென்கொரிய அதிபருக்கு எதிராக கண்டனத்தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டின் அரசியல் சூழல் குறித்து கருத்துக்களை பகிர்வதற்காக தென் கொரியாவின் பூசான் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து பிபிசி தொலைக்காட்சிக்கு பேராசிரியர் கெல்லி பேட்டி அளித்தார்.
தென் கொரிய அரசியல் மற்றும் சர்வதேச அரசியலில் விற்பன்னர் என்ற போதிலும், கெல்லி அளித்த இந்த பேட்டி கொரிய அரசியலில் ஆர்வம் கொண்டவர்கள் தவிர மற்றவர்களை பெரிதாக கவர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இணைய விதி வேறு மாதிரி இருந்தது.
பேராசிரியர் கெல்லி வீட்டில் இருந்தே பேசினாலும், முழு கோட் சூட் அணிந்து தொழிமுறை தன்மையோடு மிடுக்காக அமர்ந்திருந்த நிலையில், பேட்டியின் இடையே அவரது மகள் உற்சாகமாக பாட்டுபாடியபடி, எதிர்பாராமல் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார். தொலைக்காட்சி காமிரா பார்த்துக்கொண்டிருப்பதை அறியாமல் அந்த சிறுமி, மேலும் முன்னேறி வர, பேராசிரியர் கெல்லி காமிரா முன் விரைப்பு காட்டியபடி, மகளை கையால் விலக்க முற்படுகிறார். இதற்குள், கதவை திறந்து கொண்டு, நடைவண்டியில் அவரது இளைய மகன் உள்ளே நுழைகிறார். கெல்லி செய்வதறியாமல் நிலைமைய சமாளித்தபடி, தனது பேச்சை தொடர, அவரது மனைவி பதறியபடி உள்ளே நுழந்து, இரண்டு வாண்டுகளையும் வெளியே அழைத்துச்செல்கிறார்.
தொலைக்காட்சி பேட்டியின் நடுவே, பிள்ளைகள் பேட்டி அளிக்கும் அறைக்குள் நுழைந்த இந்த காட்சி பேராசிரியர் கெல்லியை அப்போது லேசான தர்மசங்கடத்தில் ஆழ்த்தினாலும், இந்த காட்சியே அவரை இணையத்தில் வைரலாக்கியது.
பிபிசி ஸ்டூடியோவில் இருந்தவர்களை சிரிப்பலையில் ஆழ்த்திய இந்த காட்சி, இணையத்தில் பகிரப்பட்ட போது பலரும் இதை ரசித்தனர். வீட்டில் இருந்து பணியாற்றும் தந்தை ஒருவரின் சங்கடமாக இது உணரப்பட்டது. அதே நேரத்தில், தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சி நடுவே ஊடுருவிய குடும்ப தருணமாகவும் அமைந்தது.
இந்த காட்சி வெளியான பிறகு, அதை பார்த்து ரசித்தவர்கள் தங்கள் கருத்துக்களை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டனர். பெரும்பாலானோர் இந்த குடும்ப ஊடுருவலை ரசிக்கவே செய்தனர். அதிலும், வீட்டில் இருந்தே பணியாற்றும் அனுபவம் கொண்டவர்கள், பேராசிரியர் கெல்லி இடத்தில் தங்களை பொருத்திப்பார்த்துக்கொண்டனர்.
பொதுவாக, பணி வாழ்க்கைக்கும், குடும்பத்திற்கும் இடையிலான சமனை காண்பதற்கான வாழ்க்கை போராட்டத்தின் பிரதிபலிப்பாக இந்த காட்சி கருதப்பட்டது. இதனால் ஏற்பட்ட விவாதம் கெல்லியை பிரபலமாக்கியதோடு, அவரை பிபிசி தந்தை என கொண்டாட வைத்தது.
அதன் பிறகு, தென்கொரியாவில் எங்கு சென்றாலும் அறியப்படும் குடும்பமாக கெல்லியின் குடும்பம் மாறியது.
இந்த பின்னணியில் இருந்து பேராசிரியர் கெல்லியை கொரோனா சூழலில் பொருத்திப்பார்த்தால், அவர் மீண்டும் பிபிசி தொலைக்காட்சியில் தோன்றியதன் முக்கியத்துவம் புரிந்திருக்குமே!
ஆம், உலகின் பெரும்பாலான நாடுகளில் லாக்டவுன் அமலில் இருக்கும் நிலையில், வீட்டில் இருந்தே பணியாற்றும் அனுபவம், அதன் சாதக, பாதகங்கள் பற்றி பலரும் விவாதிக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த விவாதத்தில் பங்கேற்க அழைக்கப்பட பிபிசி தந்தை கெல்லியை விட பொருத்தமான நபர் வேறு யார்?
அது தான், அண்மையில், கெல்லி பிபிசி தொலைக்காட்சியில் தோன்றினார். இந்த முறை அவர் தனியே தோன்றவில்லை. திரைக்கதையின் படி அவரது முழு குடும்பமும் தொலைக்காட்சியில் தோன்றியது. மனைவி மற்றும், பிள்ளைகளோடு கெல்லி, கொரோனா சூழலில் வீட்டில் இருந்து பணியாற்றும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். பேட்டியின் நடுவே, கெல்லியின் மகன் பொறுமையிழந்து நடந்து கொண்ட போது, கெல்லி அதற்கான மென்மையாக மன்னிப்பு கோரினார். ஆனால் பேட்டி கண்டவரோ, நீங்கள் மன்னிப்பே கேட்க வேண்டாம், எங்களுக்கு தேவை இது தான் என்று கூறியிருக்கிறார்.
இந்த பேட்டி தொடர்பான வீடியோ டிவிட்டரில் வெளியாகி, பலரும், அட நம்ப குடும்பம் என்று கொண்டாடி மகிழ்ந்தனர். லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருந்தே பணியாற்றும் அனுபவத்தை கெல்லி தன் குடும்பத்துடன் விவரித்தை பலரும் ரசித்தனர். கடந்த முறையை விட, இந்த முறை எண்ணற்றவர்களால் அவரது சங்கடத்தை புரிந்து கொள்ள முடிந்தது.
அதற்கேற்ப, வீட்டில் இருந்து பணியாற்றுவது மிகவும் கஷ்டமானது எனக்கூறிய கெல்லி, பின்னர் டிவிட்டரில் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்கள் மீது கருணை காட்டுமாறு நிறுவனங்களை கேட்டுக்கொண்டிருந்தார்.
தோளுக்கு மேல் பையன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இப்படி தான் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டியிருக்கிறது என அவர் கூறியிருந்தார். கொரோனா சூழலில், அனைவராலும் இந்த சங்கடத்தை புரிந்து கொள்ள முடிந்திருப்பதோடு, தங்களில் ஒருவராக கெல்லியை கருத வைத்துள்ளது. அதனால் தான் அவர் பிபிசி தந்தையாக கொண்டாடப்படுகிறார்.

பேராசிரியர் கெல்லி, தனது வைரல் புகழ் அனுபவம் பற்றியும் ஏற்கனவே விரிவாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பிபிசி பேட்டி ஊடுருவல் ஒரு திட்டமிட்ட செயல் என கூறப்படுவது உள்ளிட்டவற்றை திட்டவட்டமாக மறுத்துள்ள கெல்லி, இணைய புகழ் எல்லா இடங்களிலும் தங்களை அறியச்செய்திருப்பது உள்ளிட்ட அனுபவங்களை அழகாக எழுதியுள்ளார். வைரல் நாயகர்களில் பேராசிரியர் கெல்லி வித்தியாசமானவர் தான்.

கெல்லியின் கட்டுரை: https://www.lowyinstitute.org/the-interpreter/year-internet-stardom–bbc-dad-reflects
பிபிசி வீடியோ; https://youtu.be/VrDVU9l5XhM
பிபிசி புதிய வீடியோ; https://twitter.com/i/status/1243092328446902277

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *