மனிதர்களுக்கு போட்டியாக மீம்களை உருவாக்கும் ஏ.ஐ!

mஇன்றைய மின்மடலை ஒரு ஹைக்கூ கவிதையுடன் துவக்குவோம்.

அந்த அளவு பெரிதான ஒரு கோப்பு,

அது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்,

ஆனால், இப்போது காணாமல் போய்விட்டதே!

இது என்ன கவிதை, இதன் பொருள் என்ன என்று பார்ப்பதற்கு முன், ’மீம்’கள் (memes  ) தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான இணையதளத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

மீம்களை நீங்கள் நன்றாக அறிந்திருக்கலாம். வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக் டைம்லைனிலும் அவை தானே நிறைந்திருக்கின்றன. மீம்களை உருவாக்குவதற்கு என்றே இணையதளங்களும் இருக்கின்றன. ஆனால், இப்போது நாம் பார்க்கப்போகும், மீம் உருவாக்கும் இணையதளம் மிகவும் வித்தியாசமானது. ஏனெனில் இந்த தளத்தில் மீம்களை நீங்கள் உருவாக்க வேண்டாம். மீம்கள் தானாக உருவாகி கொள்ளும்.

அதெப்படி, மீம்கள் தானாக உருவாகும் என ஆச்சர்யத்துடன் நீங்கள் கேட்பதாக இருந்தால், எல்லாம் ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவு உபயத்தால் என்பது தான் பதில்.

ஆம், மீம்களை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படும் இம்ஜ்பிளிப், இணையதளம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள துணை தளம் ’ஏ.ஐ மீம்’ (https://imgflip.com/ai-meme)  செயற்கை நுண்ணறிவு உதவியுடன் புதிய மீம்கள் உருவாக்கி அளிக்கிறது.

இந்த தளத்தில் உள்ள புகைப்படங்களில் இருந்து ஏதாவது ஒன்றை தேர்வு செய்தால், அந்த படம் தொடர்பான மீம் வாசகம் தானாக உருவாக்கப்படுகிறது. அது பொருத்தமாக இருப்பதாக தோன்றினால், அதை சேமித்துக்கொள்ளலாம்.

ஆர்டிபிஷியல் நியூரால் நெட்வொர்க் என சொல்லப்படும் ஆழ்கற்றல் வகை நுட்பம் மூலம், செயற்கை நுண்ணறிவு புரோகிராம், இப்படி புகைப்படத்திற்கு பொருத்தமான மீம் வாசகங்களை தேர்வு செய்து அளிக்கிறது. இதற்காக என்றே, 48 வகைகளில் லட்சக்கணக்கான மீம் வாசகங்கள் கொண்டு, இந்த புரோகிராமுக்கு பயிற்சி அளிகப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி அடிப்படையிலேயே ஏ.ஐ புரோகிராம் மீம்களாக உருவாக்கித்தள்ளுகிறது.

இந்த மீம் இல்லை என பொருள்படும் வகையில், திஸ் மீம் டஸ் நாட் எக்சிஸ்ட் (“This Meme Does Not Exist”) எனும் தலைப்பில் இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு உலகில், திஸ் டஸ் நான் எக்சிஸ்ட் … எனும் பதம் மிகவும் பிரபலமானது. எதிர்கால தன்மை மிக்க இந்த பதம் தொடர்பான மேலும் சில முக்கிய இணையதளங்கள் தொடர்ந்து பார்க்கலாம்!

மேலே குறிப்பிடப்பட்ட சேவையின் மூல இணையதளம் இம்ஜிபிளிப் (https://imgflip.com/ ) வாயிலாக நீங்கள் மீம்கள், ஜிப்கள், சார்ட்கள் போன்றவற்றை எளிதாக உருவாக்கி கொள்ளலாம். இவற்றை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம்.

முதலில் இடம்பெறும் ஹைக்கூ கவிதைக்கு வருவோம். இது உண்மையில் கேலியான கவிதை. இணையம் சார்ந்த கேலி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

இணைய உலகில் 404 பிழை வாசகங்கள் மிகவும் பிரபலமானவை. குறிப்பிட்ட ஒரு இணையதளத்தில் நீங்கள் தேவைய இணைய பக்கம் அல்லது கட்டுரை தற்போது அதில் இல்லை எனில், இது போன்ற பிழை வாசகம் தோன்றும். நீங்கள் தேடியது இல்லை என்பது தான் இதன் பொருள்.

இத்தகைய பிழை வாசகங்கள், வழக்கமான வகையில் அமையாமல் ஹைக்கூ கவிதைகளாக இருந்தால் எப்படி இருக்கும் என யாரோ ஒரு மென்பொருளாலர் யோசித்ததன் விளைவு தான், மேலே பார்த்த ஹைக்கூ கவிதை.

நீங்கள் தேடி வந்த பெரிய கோப்பு, இருந்தால் நன்றாக இருக்கும், ஆனால் இல்லை என பிழை வாசகம் கவிதையாக அமைவது போல இந்த கவிதை அமைந்துள்ளது.

இதே போல இன்னும் நிறைய ஹக்கூ கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. ஹைக்கூ கவிதைகள் மட்டுமா, கம்ப்யூட்டர் மற்றும் புரோகிராமிங் சார்ந்த இதே போன்ற உயர் தொழில்நுட்ப நகைச்சுவைகளை, சுதந்திர மென்பொருள் இயக்கத்திற்கான ஜி.என்.யூ.ஆர்க் (https://www.gnu.org/fun/jokes/error-haiku.en.html ) இணையதளத்தில் காணலாம்.

ஆனால், ஒன்று உங்களுக்கு கொஞ்சமேனும் புரோகிராமிங் புரிதல் இருந்தால் தான் சிரிக்க முடியும்!

வால்: அமெரிக்க தேர்தல் களத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தல் மறுபிரச்சாரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள இணையதளத்தில், எதிர்கட்சி வேட்பாளரான ஜோ பிடெனை கிண்டல் செய்ய, 404 பிழை பக்க உத்தி தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிடெனை போலவே நானும் தடுமாறுகிறேன் என பிழை பக்கம் சொல்வது போல அமைந்துள்ள அந்த பக்கம், (https://thepostmillennial.com/trumps-error-page-on-his-website-features-joe-biden-looking-lost ) அடிப்படையில் பிடெனின் வயோதீகம் மற்றும் தனிப்பட்ட குறைப்பாட்டை கிண்டல் செய்வதால் ரசிக்கத்தக்கல்ல.

அரசியல் எல்லா நாடுகளிலும் அரசியல் தானே!

 இன்றைய இணைய மலர் மின்மடலில் எழுதியது!

தினம் புதிய இணையதளங்கள், இணைய சேவைகளை உங்கள் இன்பாக்சிலேயே அறிமுகம் செய்து கொள்ள இணைய மலர் மின்மடலில் இணையுங்கள்;

https://tinyletter.com/cybersimman

இணைய மலரை இப்போது டெலிகிராம் சானலிலும் பின் தொடரலாம்:
https://t.me/valaiputhithu

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *