குழந்தைகள் படத்தை சமூக ஊடகங்களில் பகிரும் உரிமை; சில முக்கிய கேள்விகள்

tim-bennett-OwvRB-M3GwE-unsplash-800x420நெதர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் அளிக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக பிபிசியில் செய்தி வெளியாகி, அந்த செய்தியை ஆதாரமாக கொண்டு, புகைப்பட துறை சார்ந்த இரண்டு முக்கிய தளங்களில் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது.
எங்கோ வெளிநாட்டு நீதிமன்ற வழக்கு என்றாலும், இதில் வழங்கப்பட்ட தீர்ப்பு நிச்சயம் எல்லோரையும் திரும்பி பார்க்க வைப்பதாகவே இருக்கிறது. சமூக ஊடகத்தில் பாட்டி ஒருவர் பகிர்ந்த பேரக்குழந்தைகள் படத்தை நீக்க வேண்டும் என்பது தான் இந்த தீர்ப்பின் சாரம். குழந்தைகளின் அம்மா, அதாவது பாட்டியின் மகள் தன் அம்மாவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் தான் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அம்மாவுக்கு எதிராக மகள் வழக்கு தொடுத்திருப்பதும், அதில் ஒரு அம்மாவுக்கு சாதகமாகவும், இன்னொரு அம்மாவுக்கு பாதகமாகவும் தீர்ப்பு வந்திருப்பதும் விநோதமாக தோன்றலாம்.
இதன் விநோத தன்மையை மீறி இந்த வழக்கு சில முக்கிய அம்சங்களை கொண்டிருக்கிறது. குழந்தையின் புகைப்படம் மீதான உரிமை தொடர்பான நம் காலத்து கேள்வியையும் எழுப்புகிறது.
காதுகுத்து வைபவங்கள் முதல், குழந்தைகளின் சகலவிதமான படங்களையும் பேஸ்புக்கிலும், வாட்ஸ் அப்பிலும் வெகு இயல்பாக பகிர்ந்து கொள்ளும் நம் தமிழ்/ இந்திய மனங்களுக்கு இந்த தீர்ப்பு அநியாயமானதாக, குடும்ப வாழ்க்கை மீதான அத்துமீறலாக கூட தெரியலாம்.
பேரப்பிள்ளைகள் படத்தை பகிரும் உரிமை பாட்டிக்கு கிடையாதா? என ஆவேசமாக இல்லாவிட்டாலும் ஆதங்கமாகவேனும் கேட்க தோன்றலாம். இது எந்த சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பு என்றும் கேட்கலாம்.
கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களை நடுங்கச்செய்திருக்கும், ஜிடிபிஆர் சட்டத்தின் கீழ் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜிடிபிஆர் (GDPR) எனப்படும், ஐரோப்பிய ஒன்றியத்தில் அமலில் இருக்கும், பொது தரவுகள் பாதுகாப்பு கட்டுப்பாடு சட்டம், தனிமனிதர்களின் தரவுகளுக்கும், அவர்களின் அந்தரங்க உரிமைக்கும் பாதுகாப்பு அளிப்பதாகும்.
இந்த சட்டத்தின் படி, இணைய நிறுவனங்கள், பயனாளிகளின் தரவுகளை இஷ்டம் போல பயன்படுத்த முடியாது. தனி மனிதர்கள் தொடர்பான தரவுகளில், அவர்களுக்கே உரிமை அதிகம். இந்த உரிமை மீறப்படாமல் பாதுகாப்பது தான் சட்டத்தின் நோக்கம்.
ஆக, தனிமனிதர்கள் தொடர்பான தரவுகளை திரட்டி பயன்படுத்த வேண்டும் எனில், நிறுவனங்கள் அவர்களிடம் அனுமதி பெறுவதும், தரவுகள் திரட்டுவது தொடர்பாக வெளிப்படையாக தகவல் தெரிவிப்பதும் அவசியம்.
இந்த சட்டம் தந்த உரிமையால் தான், நெதர்லாந்து பெண்மணி, தனது குழந்தைகளின் படங்களை சமூக ஊடகங்களில் பாட்டி பகிரக்கூடாது என வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
இந்த தீர்ப்பில் நீங்கள் யார் பக்கம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த செய்தியை வெளியிட்ட டிபிரீவ்யூ மற்றும் பெட்டாபிக்சல் இணையதளங்களில், இது தொடர்பான பின்னூட்டங்களை கொஞ்சம் கவனித்தால், நம் புரிதலுக்கு உதவும்.
அம்மா புகைப்படங்களை நீக்க விரும்பினால், நீக்க வேண்டியது தான் என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்னொருவரும், அம்மா நீக்க சொன்னால், நீக்கி விடுங்கள். விஷயம் முடிந்தது, என்று கூறியுள்ளார். என்ன ஒரு அர்த்தமுள்ள தீர்ப்பு என்று வேறு ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துகள் மூலம், பிள்ளைகளின் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடக்கூடாது என சொல்ல அம்மாவுக்கு உரிமை உள்ளது என்பதை பலரும் ஒப்புக்கொள்வதை உணரலாம்.
எதிர் கருத்துகள் இல்லாமல் இல்லை. இதென்ன அபத்தம் என்பது போல ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். ஆம், அமெரிக்கர்களுக்கு அப்படி தான் இருக்கும். அது தான் காமூகர்கள் உங்கள் பிள்ளைகளுக்கு வலை விரித்துக்கொண்டிருக்கின்றனர் என்று ஒருவர் பதில் அளித்துள்ளார்.
இன்னும் சிலர் சமூக ஊடகங்களில் உள்ள மிகை பகிர்வு பழக்கத்தையும் குறை கூறியுள்ளனர். பின் விளைவுகள் பற்றி புரியாமல் புகைப்படங்களை பகிர்வது பற்றியும் கண்டித்துள்ளனர்.
பெட்டாபிக்சல் (https://petapixel.com/) தளத்தில் இடம்பெற்றுள்ள பின்னூட்டங்களில், ஒருவரை அடையாளப்படுத்துவது என்பதால் புகைப்படம் என்பது தனிப்பட்ட தரவு தான் என கூறியுள்ளார். இன்னொருவரே, அடையாளப்படும் நோக்கத்துடன் எடுக்கப்படும் படத்திற்கு மட்டுமே இது பொருந்தும் என்று கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில், பிள்ளைகளின் படங்களை பகிர்வதில் உள்ள சிக்கல்களையும், ஆபத்துகளையும் உணர்த்தகூடியதாக இந்த வழக்கு அமைந்துள்ளது.
பேரக்குழந்தைகளின் படங்களை பகிர பாட்டிக்கு உரிமை உள்ளதா என்பது மட்டும் அல்ல கேள்வி, பெற்றோர்களுக்கு அந்த உரிமை இருக்கிறதா என்பதும் நம் காலத்து கேள்வி தான்.
செய்தி இணைப்பு:
1. https://www.dpreview.com/news/9772343179/dutch-court-rules-grandmother-must-remove-photos-of-grandchildren-from-social-media-under-gdpr
2. https://petapixel.com/2020/05/21/dutch-court-orders-woman-to-delete-photos-of-her-grandchildren-from-social-media/#disqus_thread

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

2 Comments on “குழந்தைகள் படத்தை சமூக ஊடகங்களில் பகிரும் உரிமை; சில முக்கிய கேள்விகள்

  1. ரவிச்சந்திரன் ஆர்

    சரியான விவாதப் பொருளாகும் தீர்ப்பு! பொது வெளியில் இது போல் படங்களை பகிர்வது குழந்தைகள் மட்டுமல்ல ..எவருக்கும் சற்று ….பாதுகாப்பில்லைதான் …அது எப்பொழுது வேண்டுமானாலும் …தவறாக பயன்படுத்தப்படலாம் என்கிற நிலையில்தான் இருக்கிறது என்கிறபோது …பதிவிடுபவர்கள் …ஒருமுறைக்கு பலமுறை யோசித்தே பதிவேட வேண்டும்….இவ்வாறு வழக்கு பதிவிடுகையில் …அது இன்னும் …பார்க்காத பலரும்…அது என்ன என்று ..பார்க்க தூண்டுவதால் …இன்னும் அதிகம் ..பகிரப்பட்டு ..வைரல் ஆகிறது….இதை தவிர்க்க தனிப்பட்டமுறையில் …இடுகைகளை …நீக்கும்படி செய்யலாம் என்பது என் கருத்து!

    Reply
    1. CyberSimman

      சரி தான். இணையத்தில் படங்களை பகிர்வதற்கு முன் பல முறை யோசிப்பது நல்லது. இந்த வழக்கை பொருத்தவரை, வழக்கால் குறிப்பிட்ட அந்த படம் அதிகம் முறை பார்க்கப்பட்டதாக தெரியவில்லை. செய்தியிலேயே கூட பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரம் அதிகம் கிடையாது. ஐரோப்பாவில் தனியுரிமை விதிகள் வலுவாக உள்ளன. விஷயம் என்னவெனில், குழந்தைகள் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்பது தான். இது குழந்தைகளின் உரிமையும் அல்லவா. மேலும் பிள்ளைகள் இணையத்தை பயன்படுத்தும் போது அவர்களுக்கு இணைய பயன்பாடு பற்றி கற்றிக்கொடுக்க வேண்டும். இது டிஜிட்டல் கல்வியறிவு எனப்படுகிறது.

      அன்புடன் சிம்மன்

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *