சுவாரஸ்யமான இணையதளம் கொண்டிருக்கும் ஐஐடி பேராசிரியர் யார்?
இந்த கேள்வியில் ஐஐடி என்பது ஒரு அடையாளம் தான். ஜே.என்.யூ அல்லது அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அல்லது அண்ணமாலை பல்கலைக்கழகம் என்று எந்த ஒரு முன்னணி இந்திய உயர்கல்வி நிலையத்தையும் சேர்த்துக்கொண்டு இந்த கேள்வியை கேட்கலாம்.
அதாவது, சுவாரஸ்யமான இணையதளம் கொண்டிருக்கும் ஜே.என்.யூ பேராசிரியர் யார்? என கேட்கலாம்.
கேள்வி பதில் தளமான, குவோராவில், குறிப்பிட்டு சொல்லக்கூடிய சுவாரஸ்யமான பேராசிரியர்களின் இணைய பக்கங்கள் எவை? எனும் கேள்வியை பார்க்க நேர்ந்தது. இந்த கேள்விக்கு பதிலாக பட்டியலிடப்பட்டுள்ள பேராசிரியர்களின் இணையதள் பட்டியலை பார்வையிட்டுக்கொண்டிருக்கும் போதே அருகே கேட்கப்பட்டிருந்த சுவாரஸ்யமான துணை கேள்விகள் கவனத்தை ஈர்த்தன.
எந்த எம்.ஐ.டி. பேராசிரியர் மிகவும் சுவாரஸ்யமான இணையதளம் கொண்டிருக்கிறார்? என்பது முதல் துணைக்கேள்வி. அதற்கு கீழ் பார்த்தால், அதே கேள்வி ஹார்வர்டு பேராசிரியர்கள் கொண்டு கேட்கப்பட்டுள்ளது.
இந்த கேள்விகளை படித்த போது தான் நம்மூர் பேராசிரியர்கள் தொடர்பாகவும் இதே கேள்வியை கேட்கலாமே என்று தோன்றியது. ஆனால் ஆச்சர்யம் என்னவெனில், குவோராவில் ஐஐடி பேராசியர்கள் தொடர்பாகவோ, ஜேஎன்யூ பேராசிரியர் தொடர்பாகவோ இந்த கேள்வியை யாரும் கேட்கவில்லை.
எந்த பட்டதாரி மாணவர் சுவாரஸ்யமான இணைய பக்கம் வைத்திருக்கிறார்? என்ற கேள்வி கூட இருக்கிறது. ஆனால், ஐஐடி பேராசிரியர்கள் பற்றிய கேள்வி இல்லை.
இது யோசிக்க வைக்கிறது.
பேராசிரியர்களை அறிந்து கொள்ள அவர்களின் இணையதளம் நல்ல வழி. எனவே, பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இணைய இருப்பை கொண்டிருப்பது அவசியம். மேல்நாடுகளில் இது மிகவும் பரவலாக இருக்கிறது. பெரும்பாலான பேராசிரியர்கள் தங்களுக்கான இணையதளம் கொண்டிருக்கின்றனர். இவற்றில் சிறந்த தளங்கள், பேராசிரியர்களின் ஆளுமையை பிரிதிபலிக்கும் வகையிலும் அமைந்திருக்கின்றன.
பேராசிரியர்கள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதற்கான வழியாக அமைவதோடு, அவர்கள் சார்ந்த துறை தொடர்பான விஷயங்களை மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் உண்டாக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. பேராசிரியர்கள் தொடர்பான ஆர்வமே, அவர்கள் இணையதளம் தொடர்பாக குவோராவில் கேள்வி கேட்க வைத்திருக்கிறது.
நம்மூரில் மகத்தான பேராசிரியர்கள் இல்லாமல் இல்லை: ஆனால் அவர்களில் பலருக்கு சரியான இணையதளம் இல்லை. அதற்கு முக்கிய காரணம் நாம் பேராசிரியர்களின் இணையதளங்களை எதிர்பார்ப்பது இல்லை. அவற்றை குறிப்பிட்டு விவாதிப்பதும் இல்லை என்பது தான். இந்த நிலை மாற வேண்டும். ( பேராசிரியர் ரோமிலா தாப்பருக்கு இணையதளம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் ராமசந்திர குஹாவுக்கு இணையதளம் இருக்கிறது.)
இந்த எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்த, எம்.ஐ.டி பேராசிரியரின் சுவாரஸ்யமான இணையதளம் தொடர்பான அறிமுகம், இணைய மலர் மின்மடலில் இடம்பெற்றுள்ளது: https://cybersimman.substack.com/p/–0fb