ரசிகர்களின் கைத்தட்டல் ஒலி கேட்க வைக்கும் செயலி

sகொரோனா பாதிப்பு புதிய இயல்பை உண்டாக்கியிருக்கும் சூழலில், விளையாட்டு பிரியர்களுக்கு பழைய இயல்பு மனநிலையை ஓரளவு மீட்டுத்தரும் புதிய செயலி ஒன்று அறிமுகம் ஆகியுள்ளது.

கிரவுட்சவுண்ட் (https://crowdsound.coloursoftware.com/ ) எனும் அந்த செயலி, மைதானங்களில் கேட்க கூடிய ரசிகர்களின் கைத்தட்டல், ஆர்வாரம் உள்ளிட்ட ஒலிகளை கேட்க வழி செய்கிறது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் முயற்சியாக, ஐரோப்பிய நாடுகளில் கால்பந்தாட்ட போட்டிகளை நடத்த துவங்கியுள்ளனர். ஆனால், போட்டி நடைபெறும் மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. வீரர்கள் காலி அரங்கை பார்த்தபடி தான் விளையாட வேண்டும். அதே போல ரசிகர்கள், டிவியில் போட்டியை பார்த்தாலும், வழக்கமான உற்சாக கூச்சல்கள் கேட்க முடியாது.

இந்த பின்னணியில் அறிமுகம் ஆகியிருக்கும் கிரவுட்சவுண்ட் செயலி, விரும்பிய மைதான சூழலில் ரசிகர்களின் குரலை கேட்க வழி செய்கிறது. ஆக, இந்த செயலியை இயக்கி பின்னணியில் மைதானத்தை உயிர்பெற வைத்து, தொலைக்காட்சியில் போட்டியை காணலாம்.

ஐபோன் மற்றும் ஐபேடுகளில் செயல்படும் வகையில் இந்த செயலி அறிமுகம் ஆகியுள்ளது. நம்மூரில் கிரிக்கெட் போட்டிகள் துவங்கும் போது ஆண்ட்ராய்டு போன்களில், கிரிக்கெட் மைதான ஒலியை கேட்பதற்கான செயலியை யாரேனும், உருவாக்குகின்றனரா என்று பார்க்கலாம்.

புதிய இணையதளங்கள், இணைய சேவைகளை அறிமுகம் செய்து கொள்ள, இணைய மலர் மின்மடலில் இணையுங்கள்: https://cybersimman.substack.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *