கொரோனா கால கல்வெட்டுகள் என்று சில இணையதளங்களை வர்ணிக்கலாம். அதாவது, கொரோனாவால் நாம் எதிர்கொள்ளும் அனுபவங்களை பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இணையதளங்கள்.
கொரோனா கன்பெஷன்ஸ்.மீ (https://covidconfessions.me/ ) தளமும் இத்தகைய கல்வெட்டு தளம் தான்.
இந்த தளம், கொரோனா கால தனிமை படுத்தலில் பலரும் செய்த சின்ன சின்ன தவறுகளை அனாமேதயமாக பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது.
கொரோனா காலத்தில் எல்லோருமே கடினமான சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில், நாம் எல்லோருமே சின்ன சின்னதாக பாவங்களை செய்திருக்கிறோம், அவற்றை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் என அழைப்பு விடுக்கிறது இந்த தளம்.
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, பலரும் தாங்கள் செய்த தவறுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
” என்னில் ஒரு பகுதி மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில், நான் சமூக உறவுகளில் ஈடுபட வேண்டாம்” என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்னொருவர், ‘ நான் படுக்கையில் இருந்தபடி பணி செய்கிறேன்” என்று கூறியுள்ளார். ” ஆன்லைன் வகுப்பில் பங்கேற்காமல் ஆசிரியரை ஏமாற்றினேன்’ என்று ஒருவர் தெரிவித்துள்ளார். நான் வெட்டியாக இருக்கும் போதே, பிஸியாக இருக்கிறேன்’ என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.
இப்படி பலரும், கொரோனா உண்டாக்கிய தனிமை சூழலில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
கொரோனா மனநிலையை புரிந்து கொள்ள உதவும் இந்த தளத்தில் பகிரப்படும் கருத்துகள் உங்களை புன்னகைக்கவும் வைக்கலாம், சோர்வையும் உண்டாக்கலாம்.
இந்த தளத்தின் துணை தளமாக, ஆப்டர்லாக்டவுன்.மீ (https://afterlockdown.me/) எனும் இணையதளமும் அமைக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் கட்டுப்பாடுகள் முடிந்த பிறகு செய்ய விரும்புவதை பலரும் இந்த தளத்தில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
—
புதிய இணையதளங்கள், இணைய சேவைகளை அறிமுகம் செய்து கொள்ள, இணைய மலர் மின்மடலில் இணையுங்கள்: https://cybersimman.substack.com/