மார்க் ஜக்கர்பர்கிற்கு 11 வயது தான் ஆகியிருந்த போது கிளாஸ்மேட்ஸ்.காம் இணையதளம் அறிமுகமானது. இந்த ஒற்றை வரி சமூக வலைப்பின்னல் வரலாற்றை ரத்தினச்சுருக்கமாக சொல்லி விடுகிறது.
1995 ம் ஆண்டு அறிமுகமான கிளாஸ்மேட்ஸ் தான் ஒருவிதத்தில் சமூக வலைப்பின்னல் தளங்களின் துவக்கப்புள்ளி. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 1997 ல் சிக்ஸ்டிகிரிஸ்.காம் அறிமுகமானது. பின்னர் பிரண்ட்ஸ்டர், மைஸ்பேஸ் ஆகிய சமூக வலைப்பின்னல் தளங்கள் அறிமுகமாயின.
இவற்றுக்கு எல்லாம் பின்னர் தான், ஜக்கர்பர்கின் பேஸ்புக் அறிமுகமானது. தொடர்ந்து எண்ணற்ற சமூக வலைப்பின்னல் சேவைகள் அறிமுகமாகிவிட்டன என்றாலும், இணையத்தில் நட்பு வலை விரிக்க வழி செய்த முதல் இணையதளம் கிளாஸ்மேட்ஸ்.
பசுமை நிறைந்த நினைவுகளே என பாடியபடி, பள்ளியில் ஒன்றாக படித்த பழைய நண்பர்களை கண்டறிந்து மீண்டும் நட்பு கொள்ள வைப்பதற்காக இந்த தளம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கரான ரேண்டி கோனார்டு (Randy Conrad ) இந்த தளத்தை நிறுவினார்.
கொனார்டு அப்போது போயிங் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். வலையும் அப்போது தான் பிரபலமாகத் துவங்கியிருந்தது. வலையால் ஈர்க்கப்பட்ட கொனார்டு, அதன் தொடர்பு ஆற்றலை கொண்டு பயனுள்ள சேவை ஒன்றை உருவாக்குவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தார்.
அந்த கால கட்டத்தில் அவர் மனது அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என பாடிக்கொண்டிருந்தது. அதாவது, பள்ளிப்பருவத்தில் தன்னுடன் படித்த நண்பர்களை மீண்டும் சந்திக்க வழி தேடிக்கொண்டிருந்தார். இதற்கு ஏற்ற சேவை எதுவும் இணையத்தில் இல்லை என்பதை உணர்ந்தவர், தானே அதை உருவாக்க தீர்மானித்தார்.
இப்படி உருவானது தான் கிளாஸ்மேட்ஸ்.காம். அடிப்படையில் இந்த தளம் மிகவும் எளிமையாக இருந்தது. பள்ளிப்பருவ நண்பர்களை சந்திக்க விரும்புகிறவர்கள் இந்த தளத்தில் இமெயில் முகவரியை சமர்பித்து, தங்களைப்பற்றிய விவரங்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதனடிப்படையில், அவர்கள் தளத்தின் மற்ற உறுப்பினர்களை அணுகலாம். இதன் மூலம், தங்களுடன் படித்த பழைய மாணவர்களை கண்டறிந்து தொடர்பு கொள்ளலாம்.
பதிவு செய்து கொள்பவர்கள் தாங்கள் படித்த பள்ளி பெயரை குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும் என்பதால், பழைய நண்பர்களை தேடி கண்டுபிடிப்பது எளிதாக இருந்தது.
புதுப்புது இணையதளங்கள் அறிமுகமாகி கொண்டிருந்த காலத்தில், பழைய நண்பர்களை கண்டு பிடித்து நட்பை புதுப்பித்துக்கொள்ள வழி செய்த கிளாஸ்மேட்ஸ் தளம் அமெரிக்காவில் பெரும் வரவேற்பை பெற்றது.
பள்ளி பருவத்தில் வெள்ளி விழா சந்திப்புகளுக்கு திட்டமிட்டிருந்தவர்கள் எல்லாம் எளிதாக தங்கள் பழைய நண்பர்களை தேடி கண்டுபிடிக்க இந்த தளம் உதவியது. இதன் காரணமாகவே பிரபலமானது.
பழைய நண்பர்கள் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்வதற்கான வேறு பல உபசேவைகளையும் இந்த தளம் வழங்கியது. ஒரு கட்டத்தில் இவற்றை கட்டணச்சேவையாகவும் அறிமுகம் செய்தது. அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் விரிவாக இந்த தளம் பெரிய வரவேற்பை பெற்றது. அண்டை நாடான கனடாவிலும் இதன் சேவை விரிவானது.
ஆனால் பின்னர் கல்லூரி மாணவர்களுக்கான வலைப்பின்னலாக முதலில் அறிமுகமாகி, தேசிய அளவிலும், தொடர்ந்து அகில உலக அளவில் விரிவாகி மாபெரும் இணைய சாம்ப்ராஜ்யமாக உருவெடுத்த பேஸ்புக் போல, இந்த தளம் அமெரிக்காவை தாண்டி விரிவாகவே இல்லை!
இணையதள முகவரி: Classmates.com
–