வழக்கமான சேவைகளை டிஜிட்டல் வடிவில் பெறுவதை விட, இணையத்தில் இருந்து கூடுதலாக சிலவற்றை எதிர்பார்க்கலாம் எனும் எண்ணத்தை நுகர்வோர் மத்தியில் ஏற்படுத்திய புதுமை சேவையாக பிரைஸ்லைன் அறிமுகமானது. அப்போது இந்த தளம் உண்டாக்கிய பரபரப்பும், எதிர்பார்ப்பும் நிகரில்லாததாக இருந்ததோடு, இது போன்ற புதுமைகளை எல்லாம் சாத்தியமாக்க கூடியதே இணையம் எனும் எண்ணம் வலுப்பெறவும் காரணமாக அமைந்தது.
இணையம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த காலத்தில், அதன் வீச்சை இன்னும் அதிகமாக்க, பிரைஸ்லைன் போன்ற இணைய தளங்கள் தேவைப்பட்டன.
பிரைஸ்லைன் அப்படி என்ன செய்தது என்றால், விமான டிக்கெட் முன்பதிவில் ஒரு புரட்சியை கொண்டு வந்தது.
அமெரிக்காவைச்சேர்ந்த தொடர் தொழில்முனைவோரான ஜே வாக்கர் என்பவர் 1997 ம் ஆண்டு பிரைஸ்லைன் நிறுவனத்தை நிறுவினார். 1998 ம் ஆண்டு இதன் இணையதளம் விமான டிக்கெட் சேவையை வழங்கத்துவங்கியது.
பயண ஏற்பாட்டிற்கு இணையத்தை பயன்படுத்தும் வழியை ஏற்கனவே எக்ஸ்பீடியா காண்பித்திருந்ததை அடுத்து, பல வகையான இணையதளங்கள் இந்த பரப்பில் தோன்றியிருந்தன. எனவே, இணையம் மூலம் விமான டிக்கெட் வாங்கலாம் என்பது 1998 ல் எவ்விதத்திலும் புதுமையாக கருதப்பட வாயில்லை.
எனினும், பிரைஸ்லைன் அறிமுகமான போது, இதெல்லாம் சாத்தியமா? எனும் வியப்பை அந்த இணையதளத்தால் மக்கள் மத்தியில் உண்டாக்க முடிந்தது. இதற்கு காரணம், விமான டிக்கெட் முன்பதிவு செய்வதில் பிரைஸ்லைன் கொண்டு வந்திருந்த புதுமையான உத்தியே.
விமான டிக்கெட் வாங்கும் போது, தள்ளுபடி போன்ற சலுகளைகள் ஏதேனும் இருக்குமா என எதிர்பார்த்து நிற்பதற்கு பதிலாக, டிக்கெட்டிற்கு தாங்கள் கொடுக்க தயாராக இருந்த விலையை குறிப்பிட இந்த தளம் வழி செய்தது.
உங்கள் விலையை சொல்லுங்கள் ( நேம் யுவர் பிரைஸ்) எனும் வாசகத்துடன் இந்த வசதியை அறிமுகம் செய்தது. தொடர் தொழில்முனைவோரான ஜே வாக்கர், காப்புரிமை பெற்று வைத்திருந்த வர்த்தக எண்ணத்தின் அடிப்படையில் இந்த வசதியை அறிமுகம் செய்தார்.
விமான பயணத்தை நாடும் நுகர்வோர் தங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ப, மலிவு விலை சேவையை நாடலாம் அல்லது விலை உயர்ந்த சேவையை நாடலாம். ஆனால், விமான டிக்கெட் கட்டணத்தில் அவர்கள் வேறு எந்த தேர்வையும் மேற்கொள்ள வழியில்லை.
அதே நேரத்தில், விமான நிறுவனங்கள் பல நேரங்களில் இருக்கைகள் முழுவதும் நிரம்பாத நிலையிலும் விமானங்களை இயக்கும் நிலை உள்ளது. சில நேரங்களில் பாதிக்கு மேற்பட்ட இருக்கைகள் கூட நிரம்பாமல் இருக்கலாம். ஆனால், இருக்கைகள் தொடர்பான புள்ளி விபரங்கள் விமான நிறுவனங்களின் வர்த்தக ரகசியமாகும்.
இந்த வர்த்தக யதார்தத்தை, நுகர்வோருக்கு சாதகமாக மாற்றும் வகையில் பிரைஸ்லைன் உத்தி அமைந்திருந்தது.
விமான பயணம் செய்ய திட்டமிட்டுள்ள நுகர்வோர், பிரைஸ்லைன் மூலம் பயணத்திற்கான டிக்கெட்டை பதிவு செய்யலாம். அப்போது, அந்த பயணத்திற்காக தான் செலுத்த தயாராக உள்ள கட்டணத்தை அவர் குறிப்பிடலாம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடவும் குறைவாக குறிப்பிடலாம்.
இதன் பிறகு, பிரைஸ்லைன் இந்த கட்டணத்துடன், விமான சேவை நிறுவனங்களில் எந்த நிறுவனம் இந்த விலையை ஏற்க தயாராக உள்ளது என்பதை கண்டறிந்து அந்நிறுவனத்தில் டிக்கெட் பதிவு செய்யும். பயணத்திற்கான இருக்கைகள் நிரப்ப படாமல் இருக்கும் நிறுவனங்கள் அந்த இருக்கைகள் காலியாக இருப்பதைவிட, குறைந்த கட்டணத்திற்கேனும் அதில் பயணியை அமர்த்திக்கொள்ளலாம் எனும் அடிப்படையில், பிரைஸ்லைன் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்பது இந்த உத்தியின் கருத்தாக்கம்.
ஆக, பயணிகளுக்கு அவர்கள் குறிப்பிடும் விலையில் டிக்கெட் கிடைக்கிறது. விமான சேவை நிறுவனங்களுக்கும் இதனால் இழப்பு இல்லை, லாபம் தான்.
ஆனால் ஒன்று, நுகர்வோர் தங்கள் விரும்பும் கட்டணத்தை மட்டுமே குறிப்பிட முடியும். எந்த விமானம் என்பதையோ அல்லது பயண தேதியையோ அவர்களால் தேர்வு செய்ய முடியாது. அந்த கட்டணத்தை அளிக்க முன்வரும் நிறுவனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் முதலிலேயே கட்டணத்தை செலுத்திவிட வேண்டும். பின்னர் டிக்கெட்டை ரத்து செய்ய வாய்பில்லை.
இந்த நிபந்தனைகளை மீறி, குறைந்த கட்டணத்தில் விமான பயணங்களை நாடுபவர்களுக்கு பிரைஸ்லைன் முன்வைத்த வழி ஈர்ப்புடையதாக இருந்தது. அதோடு, இணையத்தின் ஆற்றலை உணர்த்துவதாகவும் அமைந்தது.
இந்த உத்தியை செயல்படுத்தக்கூடிய மென்பொருள் உதவியுடன் பிரைஸ்லைன் தனது சேவையை அறிமுகம் செய்தது. விமான பயணிகள், தங்கள் விரும்பிய விலையை குறிப்பிட்டு டிக்கெட் பதிவு செய்யலாம் எனும் கருத்தாக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்த பரபரப்பும், எதிர்பார்ப்பும் பிரைஸ்லைன் தளத்திற்கு பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது.
ஆனால், துவக்கத்தில் பிரைஸ்லைன் திட்டத்தை இரண்டு விமான நிறுவனங்கள் மட்டுமே ஏற்க முன்வந்தன. மற்ற நிறுவனங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. பிரைஸ்லைன் இந்த ஆரம்ப சவாலை வெற்றிகரமாக சமாளித்து, மற்ற நிறுவனங்களை சம்மதிக்க வைதத்துடன், ஹோட்டல் அறைகள் போன்றவற்றையும் இதே முறையில் பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்தது.
பிரைஸ்லைன் அறிமுக உத்தியாக, பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஷாண்டரை தன் விளம்பர தூதராக நியமித்துக்கொண்டது. இவருக்கான விளம்பர கட்டணத்தை கொடுக்க வசதியில்லாத நிலையில் நிறுவன பங்குகளாக அவருக்கு கட்டணம் செலுத்த ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த உத்தியும் பெரிதாக பேசப்பட்டு கவனத்தை ஈர்த்தது.
பிரைஸ்லைன் அதன் பிறகு ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், தாக்குப்பிடித்து நின்று பின்னர் புக்கிங்ஸ் பயண நிறுவன வசமானது. எனினும், அது அறிமுகம் செய்த புதிய உத்தி காரணமாக இணைய வரலாற்றில் மைல் கல் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.
–
பிரைஸ்லைன் பிளேஷ்பேக்கை பார்க்க: https://web.archive.org/web/19990125092334/http://tickets.priceline.com/
–
டிவிட்டர் சார்ந்த புதுமையான துணை சேவை தொடர்பான அறிமுகம் இணைய மலர் மின்மடலில் இடம்பெற்றுள்ளது: https://cybersimman.substack.com/p/–2df
இணையமலர் மின்மடலை பின் தொடருங்கள்: https://cybersimman.substack.com/