கேம்ஸ்கேனருக்கு மாற்றான இந்திய செயலி எப்படி இருக்கிறது?

cஇந்திய செயலியை களமிறக்க இது சரியான நேரம் தான். சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்கான மாற்றாக இந்திய செயலிகளை எளிதாக முன்னிறுத்தலாம்.

இந்த வகையில் கேம்ஸ்கேனருக்கு மாற்றாக, காகஸ் (https://kaagaz.sortedai.com/) எனும் இந்திய செயலி அறிமுகமாகியிருக்கிறது. சந்தையின் தேவை உணர்ந்து, மின்னல் வேகத்தில் இந்த செயலியை உருவாக்கி வெளியிட்டிருக்கின்றனர். சார்டட் ஏ.ஐ எனும் நிறுவனம் இந்த செயலியின் பின்னே உள்ளது.

கேம்ஸ்கேனர் போலவே, ஆவணங்களை மொபைல் போனில் ஸ்கேன் செய்ய இந்த செயலியை பயன்படுத்தலாம்.

மூன்று விதமான ஸ்கேன் செய்யலாம், முனைகளை தானாக உணரும் தன்மை, ஸ்கேன் செய்வதற்றை எளிதாக பகிரலாம் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம் உள்ளிட்ட வசதிகளை இந்த செயலி கொண்டிருப்பதாக அதன் இணையதளம் தெரிவிக்கிறது. தவிர, வாட்டர்மார்க், விளம்பர ஊடுருவல் இல்லாமல் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் சரி, இந்த செயலி எப்படி இருக்கிறது?

தரவிறக்கம் செய்யும் முன், கூகுள் பிளேஸ்டோரில் இந்த செயலி தொடர்பாக பயனாளிகள் தெரிவித்துள்ள கருத்துகளை படித்தால், மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதோடு ஒரு செயலியில் என்ன எல்லாம் எதிர்பார்க்கின்றனர் என்பதை தெளிவாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

கருத்து தெரிவித்துள்ள பலரும், இந்திய செயலி என்பதை மனதார வரவேற்றுள்ளனர். ஆனால், இந்திய செயலி என்பதற்காகவே அதன் குறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளனர்.

உண்மையில் இது ஸ்கேனர் தானா? அதாவது, இந்த செயலி என் போனின் காமிராவை திறந்து, ஆவணங்களை படமெடுக்கிறது. ஸ்கேனருக்கும், காமிராவுக்கும் கொஞ்சமேனும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? இல்லை எனில் நான் இந்த செயலிக்கு பதில், என் காமிராவையே பயன்படுத்தியிருப்பேனே என ஒருவர் கூறியிருக்கிறார்.

இதே கருத்தை இன்னொருவர், ஏற்கனவே போனில் உள்ள ‘பில்ட்இன்’ காமிராவை பயன்படுத்துவதற்கு பதில் செயலியில் உங்கள் சொந்த காமிராவை பயன்படுத்தி, அதன் மூலம் பிராசஸிங் செய்யலாமே என்று கூறியிருக்கிறார்.

இதை ஸ்கேனர் என்று நினைக்கவில்லை. இது என் காமிராவை திறந்து படமெடுக்கிறது. ஸ்கேனரும், காமிராவும் வேறு வேறு என்று நினைக்கிறேன் என ஒருவர் கூறியிருக்கிறார்.

மேலும் பலர், இந்திய செயல் என்ற அளவில் வரவேற்க தக்கது என்று தெரிவித்துவிட்டு, தாங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் இதில் இல்லை என்று கூறியுள்ளனர்.

படங்களை திருத்துவது, தானாக அதில் உள்ள குறைகளை நீக்குவது, பிடிஎப் கோப்பு உருவாக்கம் என பல அம்சங்களை கேம்ஸ்கேனருக்கு நிகராக எதிர்பார்ப்பதை பயனர் கருத்துகள் உணர்த்துகின்றன.

இந்த விமர்சனங்களை எல்லாம் படித்தால், கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருக்கும். ஆனால் அதையும் மீறி, செயலியை உருவாக்கியவர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் பெரும்பாலான விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளனர். இப்போது தான் செயலி அறிமுகம் ஆகியுள்ளதால் குறைகளை பொருத்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளவர்கள், சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகள் விரைவில் நீக்கப்பட்டு செயலி மேம்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

ஒரு சில விமர்சனங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகள் சரி செய்யப்பட்டவிட்டதையும் தெரிவித்துள்ளனர்.

செயலிகளை பொருத்தவரை பயனர் விமர்சனம் அவற்றின் செயல்பாட்டிற்கான முக்கிய அளவுகோள். அதை காது கொடுத்து கேட்க வேண்டும் என நினைத்துள்ள நிறுவனத்தினரை நிச்சயம் பாராட்ட வேண்டும். அது மட்டும் அல்ல, பதில் அளிப்பதில் இவர்கள் காட்டியுள்ள நேர்மையையும் பாராட்ட வேண்டும். இதே வேகத்தில், குறைகளை களைவதிலும் காண்பித்தால் கேம்ஸ்கேனரை மிஞ்சக்கூடியதாக இந்த செயலி உருவாகலாம் எனும் நம்பிக்கை உள்ளது. பார்க்கலாம்!

பிளே ஸ்டோர் விமர்சனம்: https://play.google.com/store/apps/details?id=kaagaz.scanner.docs.pdf&hl=en_US&showAllReviews=true

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *