கொரோனா காலத்தில், முககவசம் தயாரிப்பாளர்களையும், முககவச நுகர்வோரையும் இணைத்து வைக்கும் வகையில், மாஸ்க்மேக்கர்ஸ்கிளப் (https://maskmakers.club/ ) இணையதளம் செயல்பட்டு வருகிறது.
முககவச தயாரிப்பாளர்களுக்கான சர்வதேச கையேடாக உருவாக்கப்பட்ட இந்த தளம், உலகம் முழுவதும், மருத்துவ ரகம் அல்லாத முககவசம் தயாரித்து தரும் தனிநபர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களை பட்டியலிடுகிறது. முககவசம் தேவைப்படுபவர்கள், இவர்களை தொடர்பு கொள்ளலாம்.
கொரோனா கோரத்தாண்டவம் ஆடத்துவங்கிய நாட்களில், முககவசம் தொடர்பாக பெரும் குழப்பம் நிலவியதோடு, முககவசம் வாங்குவதிலும், கொள்முதல் செய்வதிலும் பெரும் சிக்கல் நிலவியது. முககவசம் எங்கு கிடைக்கும் எனத்தெரியாமல் பலரும் அல்லாடிய நிலையில், இகாமர்ஸ் தளங்களில் எல்லாம் முககவசத்திற்கு கிராக்கி உண்டாகி, தட்டுப்பாடும் உண்டானது.
ஆனால், பின்னர் முககவசம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்ட நிலையில், முககவச தயாரிப்பும் சீரானது. தொடர்ந்து முககவசம் அணிவது அவசியம் எனும் நிலையில், முககவசத்தை தயாரித்து தரக்கூடியவர்களை எளிதாக கண்டறியம் வகையில், இந்த தளம் அமைக்கப்பட்டது.
இதில் உள்ள முககவச தயாரிப்பாளர்களை தொடர்பு கொள்வதன் மூலம், உள்ளூர் சிறுதொழில்களை ஆதரிக்கலாம் என்பதோடு, மருத்துவ நோக்கிலான முககவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.
முககவச தயாரிப்பு தொடர்பான பரந்து விரிந்த கையேடு என்று சொல்ல முடியாது. ஆனால், முககவச தயாரிப்பாளர்களை, இதற்கான தேவை உள்ளவர்களுடன் இணைக்க வேண்டும் எனும் இந்த தளத்தின் நோக்கம் பாராட்டத்தக்கது.
இதில் குறைந்த நிறுவனங்களே பட்டியலிடப்பட்டிருந்தாலும், அவை உலகலாவிய அளவில் உள்ளது. பட்டியலில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்தால், தொடர்புடைய நிறுவன இணையதளம், இன்ஸ்டாகிராம் பக்கம் போன்றவை தோன்றுகிறது.