இகோஷியா தேடியந்திரம் புதிய மைல்கல்லை தொட்டிருக்கிறது. மாற்று தேடியந்திரங்கள் பற்றி அறிந்தவர்கள், இதென்ன கேள்விபட்டிராத புதிய தேடியந்திரமாக இருக்கிறதே என குழப்பம் அடைய மாட்டார்கள். மற்றவர்களுக்காக இகோஷியா பற்றி சுருக்கமான அறிமுகம்: இது சுற்றுச்சூழல் நலனில் அக்கரை கொண்ட மரம் வளர்க்கும் தேடியந்திரம்.
கூகுள் உள்ளிட்ட தேடியந்திரங்கள் தேடல் சேவையை வழங்குவதன் கோடிக்கணக்கில் வருவாயை குவிக்கின்றன. தேடல் முடிவுகள் தொடர்பான விளம்பரங்கள் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. பசுமை நோக்கம் கொண்ட இகோஷியா தேடியந்திரம் விளம்பரங்கள் மூலம் அள்ளிக்குவிக்காமல், அதில் வரும் வருவாயின் பெரும் பகுதியை உலகில் மிகவும் தேவைப்படும் இடங்களில் மரம் வளர்ப்பதற்கு பயன்படுத்திக்கொள்கிறது.
ஆக, கூகுளில் தேடுவதற்கு பதில் இகோஷியாவில் தேடினால், அதன் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாய் உலகின் எங்கோ ஒரு மூளையில் மரம் நட பயன்படும்.
இப்படி மரம் நடுவதில் தான், இகோஷியா மைல்கல்லை அடைந்திருக்கிறது. இதுவரை உலகின் 31க்கும் மேற்பட்ட நாடுகளில் நடப்பட்ட மரக்கன்றுகளின் எண்ணிக்கை 100 மில்லியனை கடந்திருப்பதாக அண்மையில் இகோஷியா பெருமையுடன் தெரிவித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இகோஷியாவின் செயல்பாட்டில் நிச்சயம் இது சாதனை தான்.
மாற்று தேடியந்திரங்களில் இகோஷியா பசுமை தேடியந்திரங்கள் கீழ் வருகிறது. இந்த பிரிவில் தோன்றிய அநேக தேடியந்திரங்கள் காணாமல் போய்விட்டாலும், இகோஷியா வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அது மட்டும் அல்ல, பசுமை நோக்கத்துடன், பயனாளிகள் தனியுரிமையை மதிக்கும் அம்சத்தையும் இந்த தேடியந்திரம் தனது செயல்பாட்டில் இணைத்துக்கொண்டுள்ளது. மற்ற தேடியந்திரங்கள் போல, இணையவாசிகளின் தேடல் சுவட்டை பின் தொடர்வதில்லை மற்றும் தனிப்பட்ட தகவல்களை அதிகம் திரட்டுவதில்லை என்றும் இது கூறுகிறது.
மேம்பட்ட தேடல் முடிவுகளை அளிப்பதற்காக பயனாளிகளிடம் இருந்து திரட்டப்படும் குறைந்த பட்ச தகவல்களும் ஒரு வார காலத்தில் நீக்கப்பட்டுவிடுவதாக தெரிவிக்கிறது. தனியுரிமை நாடுபவர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள் இவை.
மேலும், கால மாற்றத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில், இகோஷியா செயலி வடிவமும் எடுத்துள்ளது. மொபைல் போன்களில், இகோஷியா செயலியை பயன்படுத்தி தேடலாம். இந்த செயலியை பிரவுசராகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது இன்னும் சிறப்பு.
இகோஷியா தொடர்பான மற்றொரு தகவல், லாப நோக்கம் இல்லாத தன்மையை பாதுகாப்பதற்காக, இதன் பங்குகளை மூன்றாம் நிறுவனத்திற்கு விற்க முடியாத அளவுக்கு நிறுவன அமைப்பை அதன் நிறுவனர் மாற்றியிருக்கிறார்.
இகோஷியாவை பயன்படுத்திப்பாருங்கள்: https://www.ecosia.org/?c=en
இகோஷியா பற்றி மேலும் அறிய விரும்பினால்:https://www.hindutamil.in/news/blogs/74677-18.html