ஜஸ்ட்பேஸ்.இட் (https://justpaste.it/ ) என்றொரு இணையதளம் இருக்கிறது. பயன் மிகு தளங்களில் ஒன்று என இதை வர்ணிக்கலாம். இணையத்தில் மிக எளிதாக உள்ளடக்கத்தை உருவாக்கி பகிர்ந்து கொள்ள இந்த தளம் வழி செய்கிறது. இதன் பயன்பாட்டு தன்மையை இன்னும் பலவிதங்களில் வர்ணிக்கலாம்.
வலைப்பதிவுகள் இருக்கின்றன, சமூக ஊடகங்கள் இருக்கின்றன என்பதை எல்லாம் மீறி, நினைத்தவுடன் ஒரு சில விஷயங்களை எழுதி, அதை உடனடியாக இணையத்தில் பகிர்ந்து கொள்ள விரும்பினால், ஜஸ்ட்பேஸ்ட்.இட் தளம் அதற்கு சரியாக இருக்கும்.
அடிப்படையில் இந்த தளம் ஒரு இணைய எழுதி தான் ( டெக்ஸ்ட் எடிட்டர்). இந்த தளத்தில் நுழைந்ததுமே, வலைப்பதிவில் இருப்பது போன்ற எழுதியை பார்க்கலாம். அதில் தலைப்பை டைப் செய்து, எழுத விரும்பும் மற்ற விஷயங்களை டைப் செய்ய வேண்டும். அதன் பிறகு, இந்த தகவலுக்கான இணைய முகவரி உருவாக்கி தரப்படும். அந்த முகவரியை யாருடன் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் அந்த தகவலுக்கான பக்கத்தை எளிதாக பார்க்க முடியும்.
ஒரு முறை வலைப்பதிவு போன்றது இது. உருவாக்கி பகிர்ந்து விட்டு மறந்து விடலாம். வரி வடிவ தகவல்கள் மட்டும் அல்ல, அதன் நடுவே புகைப்படங்களையும் சேர்க்கலாம். வீடியோவையும் இணைக்கலாம். புரோகிராமிங் தெரியும் என்றால், எச்.டி.எம்.எல் குறிப்புகளையும் பயன்படுத்தி இந்த பக்கத்தை அமைத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது.
இதில் என்ன விஷேசம் என்றால், இணைய பக்கத்தை உருவாக்கி கொள்ள பதிவு செய்து கொள்ள வேண்டாம். உருவாக்கிய பக்கத்தை பொதுவில் பகிரலாம் அல்லது தனிப்பட்ட இணைப்பை மட்டும் உருவாக்கி கொள்ளலாம். இதன் மற்றொரு முக்கிய அம்சம், மற்றவர்கள் இதை எளிதாக அணுகலாம் என்பது தான். தளத்தில் விளம்பரங்கள் போன்ற எந்த அம்சங்களும் இல்லாததால், இணைய வேகம் குறைவாக இருந்தால் கூட, இதன் பக்கம் உடனடியாக அணுக கூடியதாக இருக்கும்.
இணையத்தில் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான எளிய வழியாக இந்த சேவை அமைகிறது.
இந்த சேவையை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ’ஜூம்’ சந்திப்பிற்கான அழைப்பிதழை உருவாக்க வேண்டியிருந்தால், இந்த தளத்தில் நுழைந்து வாசகங்களை டைப் செய்து, புகைப்படங்களை சேர்த்து, இணைய முகவரியை உருவாக்கி கொண்டு அதை வேண்டியவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
பயனுள்ள சேவை தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், இந்த தளம் தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான தகவல் இருக்கிறது. இந்த தளம், ஐ.எஸ் தீவிரவாதிகளால் பயன்படுத்தப்பட்டு சர்ச்சைக்குள்ளானது என்பது தான் அது.
ஆம், 2014 ம் ஆண்டுவாக்கில், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச்சேர்ந்தவர்கள், தங்கள் இயக்கம் தொடர்பான தகவல்களையும், படுகொலை காட்சிகளையும் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தை பயன்படுத்துவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பு உண்டானது.
யார் வேண்டுமானாலும் அனாமேதயமாக இந்த சேவையை பயன்படுத்தலாம் எனும் அசம்த்தையும், எளிய பயன்பாட்டையும் சாதகமாக்கி கொண்டு ஐஎஸ் அமைப்பினர் இந்த சேவையை பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாயின. இந்த அமைப்பின் டிவிட்டர் முகவரிகளும் இதில் பகிரப்பட்டு சர்ச்சை உண்டானது.
அதற்காக இந்த சேவையை பழி சொல்ல முடியாது. அதை ஒரு அமைப்பினர் தங்கள் நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்திக்கொண்டதற்கு அந்த தளம் பொறுப்பாக முடியாது. எளிதான பகிர்வு என்பது தான் இந்த தளத்தின் ஆதார அம்சம். அதற்காக தான் இந்த தளம் உருவாக்கப்பட்டது.
இது ஒரு தகவல் தான். இந்த தளத்தை ஒருவர் பயன்படுத்துவதை தீர்மானிக்க கூடிய தகவலாக இதை சொல்ல முடியாது. ஆனால், இதை அறிந்திருப்பது நல்லது. ஏனெனில், இணையத்தில் நாம் பயன்படுத்தும் சேவைகளின் தன்மையை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஜஸ்ட்பேஸ்ட்.இட் சேவையை பொருத்தவரை, அது இணையத்தில் எதையும் எளிதாக பகிர்வதற்கான சேவை. அந்த சுதந்திரம் தான் இதன் பலம்.
நிற்க, ’மேக்யூஸ்ஆப்’ இணையதளம், இதை இணையத்தின் 100 மிகச்சிறந்த தளங்களில் ஒன்றாக பட்டியலிடுகிறது. ’இணையத்தில், பிரத்யேக முகவரியுடன், வரி வடிவத்தை எளிதாக பகிர்ந்து கொள்வதற்கான எளிமையான ஹோஸ்டிங் சேவை. லேசானது, பயன் மிக்கது, தூய்மையானது’ என இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிமுகம் சரியாகவே இருக்கிறது. ஆனால், இந்த தளம் தீவிரவாத பயன்பாட்டுற்கு உள்ளான சர்ச்சை தொடர்பான குறிப்பே இந்த அறிமுகத்தில் இல்லை. இந்த குறிப்பு தேவை இல்லை என நினைத்திருக்கலாம். அல்லது இந்த சர்ச்சையை அறியாமலே இருந்திருக்கலாம்.
ஆனால், இந்த தளம் குறித்து மேற்கொண்டு தகவல்கள் அறியலாம் எனும் ஆர்வத்தில் இணையத்தில் தேடினால் கிடைக்கும் விக்கிபீடியா கட்டுரை, இந்த தளத்தை சரியாக அறிமுகம் செய்துள்ளதோடு, தீவிரவாத பயன்பாடு தொடர்பான சர்ச்சையையும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக விரிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
விஷயம் இது தான். இணையத்தில் எப்போதும் கூடுதல் தகவல்களை தேடுங்கள். அது உங்களது புரிதலுக்கு உதவும். மேக்யூஸ்ஆப், பயன்பாட்டு நோக்கில் இணையத்தை அறிமுகம் செய்வதில் மிகவும் பிரபலமான மற்றும் நம்பகமான இணையதளம். அதன் அறிமுகத்திலேயே போதாமை இருக்கிறது அல்லது பயன்பாட்டு நோக்கிலான அறிமுகம் என்பதால்,சர்ச்சை தகவல் விடுபட்டிருக்கலாம். ஆனால், இந்த தகவல்களை அறிந்து கொள்வதற்கான பொறுப்பு இணையவாசிகளிடமே இருக்கிறது.
ஜஸ்ட்பேஸ்ட்.இட் சேவை தொடர்பாக நீங்கள் ஒரு கருத்தை உருவாக்கி கொள்வதற்கு முன் மேலும் சில முக்கிய தகவல்கள்:
இந்த தளத்தை போலந்து நாட்டைச்சேர்ந்த மரியஸ் ஜுராவெக் ( Mariusz Żurawek) எனும் இளைஞர் உருவாக்கினார்.
இந்த தளம் தீவிரவாத பயன்பாட்டிற்கு உள்ளான போது, மரியஸ் அதை எதிர்கொண்ட விதம் குறிப்பிடத்தகதாக இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக கூறியவர் “ ஐ.எஸ் தீவிரவாதிகள் என் தளத்தை தேர்வு செய்தது என்னுடய விருப்பம் அல்ல… நான் விசாரணையில் காவல்துறையுடன் ஒத்துழைக்கும் வரை, ஐ எஸ் பிரச்சார பயன்பாட்டிற்கு அனுமதிக்காத வரை, இதன் மூலம் இன்னும் அதிகமானோர் இந்த தளம் பற்றி அறிந்து கொள்வது நல்லது தான் என்று கூறியிருந்தார். ஏதேனும் சட்டவிரோத தகவலுக்கு பயன்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்தால், அவை நீக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்த தெளிவும், துணிவும் வியக்க வைக்கிறது.
–
இணைப்புகள்:
https://www.makeuseof.com/tag/best-websites-internet/