இந்திய தேடியந்திரம்- தவறாக வழிகாட்டும் கூகுள்

Screenshot_2020-11-22 which is the first indian search engine - Google Searchமுதல் இந்திய தேடியந்திரம் எது? எனும் கேள்விக்கு சரியான பதில் எது எனத் தெரியவில்லை. ஆனால், இந்த கேள்விக்கான பதிலை கூகுளில்  தேடக்கூடாது என்று மட்டும் தெரிகிறது. ஏனெனில், கூகுளில் இந்த கேள்விக்கான பதிலை தேடிய போது, குழப்பிவிட்டது.

இது தான் இந்தியாவின் முதல் தேடியந்திரம் என உணரக்கூடிய தெளிவான எந்த பதிலையும் கூகுள் தேடல் பட்டியலில் காண முடியவில்லை.

கூகுள் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்கும் கேள்வி பதில் தளம் இல்லை. தேடப்படும் குறிச்சொல்லுக்கு பொருத்தமான முடிவுகளை பட்டியலிடும் பொதுவான தேடியந்திரம் என்பதால், முதல் தேடியந்திரம் எது? என்பது போன்ற கேள்விக்கு கூகுளிடம் நேரடி பதிலை எதிர்பார்ப்பது சரியல்ல தான். அதனடிப்படையில் கூகுளை மதிப்பிடவும் கூடாது தான்.

ஆனால், இந்த பதிவின் நோக்கம், கூகுள் தேடல் தரத்தை மதிப்பிடுவது அல்ல, அதில் உள்ள போதாமைகளை சுட்டிக்காட்டுவது தான்.

முதல் இந்திய தேடியந்திரம் (first indian search engine.)  என கூகுளில் தேடினால், இப்போது வழக்கத்தில் இல்லாத ஜூல்லே எனும் தேடிய்ந்திரம் தொடர்பான யுவர்ஸ்டோரி தளத்தின் 2015 ம் ஆண்டு கட்டுரை முதலில் வந்து நிற்கிறது.

இது தேடல் பட்டியலின் முதல் முடிவு மட்டும் அல்ல. குறிச்சொல்லுக்கு மிகவும் பொருத்தமான முடிவு என கூகுளால் முதலில் முன்னிறுத்தப்படும் முடிவு இது என்பதை கவனிக்க வேண்டும். அதற்கேற்ப, தொடர்புடைய வரிகள் கட்டுரையில் மஞ்சள் வண்ணத்தில் அடையாளம் காட்டப்படுகிறது.

123 கோஜ் எனும் தேடியந்திரம் தான் இந்தியாவில் தோன்றிய முதல் பெரிய தேடியந்திரங்களில் ஒன்று என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது முதல் இந்திய தேடியந்திரமாக இருக்கலாம் என பொருள் கொள்ளலாம். ஆனால் தீர்மானம் இல்லை.

இதே கட்டுரையில், குருஜி.காம், இந்தியாவில் உருவான முதல் வலை சிலந்தி அடிப்படையிலான தேடியந்திரம் என்கிறது. நல்ல தகவல் தான். ஆனால் முழுமையானது இல்லை.

தேடல் பட்டியலில், இரண்டாவது முடிவாக, முதல் இந்திய தேடியந்திரம் எது எனும் கேள்விக்கான குவோரா தள முடிவு அமைந்துள்ளது. இந்த இணைப்புக்குள் சென்று பார்த்தால், மேலே பார்த்த கட்டுரையில் இடம்பெறும் வரிகள்  ஒரு பதிலாக அளிக்கப்பட்டு, பின் இணைப்பாக 123 கோஜ் தளத்தின் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி பார்த்தால், 123 கோஜ் தளத்தை முதல் இந்திய தேடியந்திரமாக கொள்ளலாம்.

இந்த தகவலை வைத்துக்கொண்டு, ஒரு கட்டுரை கூட எழுதிவிடலாம். ஆனால் பிரச்சனை என்னவெனில், ஓரளவு இணைய வரலாறு தெரிந்தவர்களுக்கு இது முதல் தேடியந்திரம் அல்ல என்பது தெரியும்.

அநேகமாக கோஜ்.காம் முதல் இந்திய தேடியந்திரமாக இருக்கலாம். 1990 களின் இறுதியில், இந்தியாவேர்ல்டு உள்ளிட்ட முன்னோடி இந்திய தளங்களை உருவாக்கிய ராஜேஷ் ஜெயின் உருவாக்கிய தளம் பத்துக்கும் மேற்பட்ட தளங்களில் கோஜ்.காம் ஒன்று. கோஜ் உள்ளிட்ட தளங்களை ஜெயின் 1999 ல் சத்யம் ( சிஃபி) நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். இப்போது கோஜ்.காம் முகவரி சிஃபி தளத்திற்கு தான் அழைத்துச்செல்கிறது.

எனில், இந்த 123 கோஜ்.காம் எந்த தளம் எனத்தெரியவில்லை. கோஜ்.காம் முகவரியின் பிரபலத்தை அறுவடை செய்யும் நோக்கில் அமைக்கப்பட்ட டம்மி தளமாக இருக்கலாம். இந்தியாவேர்ல்டு காலத்திலேயே அந்த டொமைன் பெயர் போலவே வேறு ஒரு தளமும் செயல்பட்டது. அந்த சர்ச்சைக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா எனத்தெரியவில்லை.

நிற்க, குவோரா தளத்தில், இந்த கேள்வி தொடர்பான பல்வேறு பதில்களில் குருஜி.காம் பல இடங்களில் குறிப்பிடப்படும் நிலையில், ஒரு பதில் ரீடிப் தளம் தான் இந்தியாவின் முதல் தேடியந்திரம் என்கிறது. ரீடிப் 199 6 துவக்கப்பட்ட தளம் என்பதாலும், தேடல் வசதியை கொண்டிருந்தது என்பதாலும், இதை கூட முதல் தேடியந்திரமாக கருதலாம் தான்.

ஆனால் தேடியந்திர இலக்கணப்படி, ரீடிப் தனித்தேடியந்திரம் அல்ல என்பதால் விட்டுவிடலாம்.

ஆக, முதல் தேடியந்திரம் எது என்பதற்கான தெளிவான பதில் இல்லை. இதற்கான தீர்மானமான பதில் கொண்ட, கட்டுரையை கூகுள் தனது தேடல் பக்கத்தின் முதல் பக்கத்தில் பட்டியலிடவில்லை. இந்திய இணைய வரலாறு தொடர்பான தகவல் பஞ்சம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றாலும், கூகுள் இந்த குழப்பத்தை தீர்க்க பெரிதாக உதவவில்லை என்பதே விஷயம்.

நிலைமை இப்படி இருக்க கூகுளை எப்படி சிறந்த தேடியந்திரம் என கருத முடியும்?

இணையத்தில் கிடைக்க கூடிய முடிவுகளில் பொருத்தமானவற்றை கூகுள் பட்டியலிடுகிறது, அதில் நாம் எதிர்பாக்கும் தீர்மானமான பதில் இல்லை எனில் கூகுளை எப்படி பழி சொல்லலாம் என கேட்கலாம். சரி தான்.

ஆனால், முதல் இந்திய தேடியந்திரம் தொடர்பான குறிச்சொற்களுக்கு கூகுள் பட்டியலிடும் முடிவுகளை மேலோட்டமாக கடந்து செல்லாமல் கொஞ்சம் உற்று கவனித்தால் அதிர்ச்சியே ஏற்படும்.

ஏனெனில், இந்த பட்டியலில் இந்தியாவின் முதல் தேடியந்திரம் எனும் வாசகத்துடன் லிங்க்டுஇன் கட்டுரை இணைப்பு ஒன்று இடம்பெறுகிறது. இந்த கட்டுரையை பார்த்ததுமே, அட நமக்கு தெரியாத முதல் இந்திய தேடியந்திரம் இதே இருக்கிறதே எனும் எண்ணத்துடன் உள்ளே சென்று பார்த்தால், GISASS எனும் தேடியந்திரத்தை சுட்டிக்காட்டுகிறது.

இந்த பதிவின் வாசகங்களை படித்தாலே , இது விளம்பர நோக்கில் சேர்க்கப்பட்ட வாசகமேத் தவிர, முதல் இந்திய தேடியந்திரம் எனும் அடைமொழிக்கும் இந்த தேடியந்திரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என புரிந்து விடுகிறது. GISASS தேடியந்திரத்திற்கு சென்று பார்த்தால் இது இன்னும் உறுதியாகிறது.

இந்தியாவின் முதல் தேடியந்திரம் என்பதை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொண்டு, தேடலில் முன்னிலை பெறும் உத்தி மூலம் கூகுளில் முன்னிலை பெற்றிருக்கிறது.

விளம்பர நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு தளம் கூகுளில் முன்னிலை பெறுவது எல்லாம் ஒரு விஷயமே அல்ல. ஆனால், அத்தகைய தளம், முதல் இந்திய தேடியந்திரம் எனும் வாசகத்தை பயன்படுத்துவதன் மூலம், முதல் இந்திய தேடியந்திரமாக கருதப்படும் அபாயம் இருக்கிறதே என்ன செய்ய.

இப்படி ஒரு தளத்தை கூகுள் தனது தேடல் பட்டியலில் முன்னிலை பெற வைப்பதை என்ன என்று சொல்வது.

( கூகுள் மட்டும்  அல்ல, பிங் மற்றும் டக்டக்கோ தேடியந்திரங்களிலும் இதே தேடலில், மேலே சொன்ன தளமும் இடம்பெறுகிறது.)

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், இணைய வரலாறு பற்றி அதிகம அறியாதவர்கள் முதல் இந்திய தேடியந்திரம் என தேடிப்பார்த்தால், கூகுள் முடிவுகளை வைத்து, 123 கோஜ் அல்லது GISASS தளத்தை தானே முதல் இந்திய தேடியந்திரம் என நினைத்து விடும் வாய்ப்பிருக்கிறது.

இது எத்தனை பிழையானது.

நிற்க, இதற்காக கூகுளை முழுவதும் குறை சொல்ல முடியாது. முடிவுகளின் நம்பகத்தமையை சீர் தூக்கிப்பார்ப்பது தேடுபவரின் கடமை. இதை தான் தகவல் கல்வியறிவு என்கின்றனர்.

உண்மை தான். கூகுள் முடிவுகளை அப்படியே நம்பாதீர்கள். அது வெறும் தேடல் சாதனம் தான். அதை சீர் தூக்கி பார்ப்பது உங்கள் கைகளில் தான் இருக்கிறது. அதோடு, கூகுள் தான் இணையம் என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்க வேண்டாம்.

கூகுள் தேடல் முடிவு: https://www.google.com/search?rlz=1C1CHBD_enIN917IN917&ei=nCu6X6yMH_zdz7sPyteWkAE&q=which+is+the+first+indian+search+engine&oq=which+is+the+first+indian+search+engine&gs_lcp=CgZwc3ktYWIQAzIHCAAQRxCwAzIHCAAQRxCwAzIHCAAQRxCwAzIHCAAQRxCwAzIHCAAQRxCwAzIHCAAQRxCwAzIHCAAQRxCwAzIHCAAQRxCwA0oFCAcSATFKBQgJEgExSgcIChIDMzA1SgUIOhIBMlDBpYcBWMGlhwFgmsKHAWgAcAB4AIABzw-IAfwckgEJNC0xLjctMS4xmAEAoAEBqgEHZ3dzLXdpesgBCMABAQ&sclient=psy-ab&ved=0ahUKEwisytPf55XtAhX87nMBHcqrBRIQ4dUDCA0&uact=5

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *