சொல் என்றால் என்ன? ஒரு வார்த்தை ஆராய்ச்சி

qஎன்னைப்பொருத்தவரை ஒரு தேடியந்திரம் அசடு வழியக்கூடாது. கூகுள் பெரும்பாலான நேரங்களில் இதை தான் செய்கிறது. அதவது, ஒரு தகவலை கேள்வி பதில் வடிவில் தேடும் போது, ஒன்று அதற்கான பதிலை கச்சிதமாக முன்வைக்க வேண்டும். அல்லது அதற்கான பதில் இல்லை எனில் தெரியாது என வெளிப்படையாக சொல்லிவிட வேண்டும். மாறாக, சும்மா பொருத்தமானதாக தோன்றும் முடிவுகளை எல்லாம் பட்டியலிட்டு சுற்றவிடக்கூடாது.

இதை ஏற்காமல் விவாதத்திற்கு வருபவர்கள், உலகின் முதல் இணைய அகராதி எது என தேடிப்பார்த்து சரியான பதிலை சொல்லவும்!

இது போன்ற இன்னும் பல விஷங்களை பட்டியலிட முடியும். இப்போதைக்கு, ஸ்டார்ட் கேள்வி பதில் அமைப்பு பற்றி பார்க்கலாம்.

என்னைக் கேட்டால் உலகின் சிறந்த தேடியந்திரங்களில் ஒன்று என இந்த தளத்தை சொல்வேன். இதற்கு அடிப்படையாக சில காரணங்கள் இருக்கின்றன.

முதல் விஷயம், ஸ்டார்ட் வழக்கமான தேடியந்திரம் அல்ல. இது ஒரு கேள்வி பதில் இணையதளம். இயற்கை மொழியிலான கேள்வி பதில் அமைப்பு ( ) என்றே இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேள்வி பதில் வடிவில், தகவல்களை அளிக்கும் இந்த சேவை அந்த வரம்புக்கு உட்பட்டு துல்லியமாக செயல்படுகிறது.

கேட்கும் கேள்விக்கு தன்னிடம் பதில் இருந்தால், அந்த பதிலை அளிக்கிறது. கூட, குறைய என்றெல்லாம் இல்லாமல், தேவையான தகவல்களை மட்டும் பதிலாக அளித்து, அதற்கான மூல ஆதாரத்தையும் சுட்டிக்காட்டுகிறது.

அதே நேரத்தில், கேள்விக்கு பதில் இல்லை எனில், அதை வெளிப்படையாக தெரிவித்துவிடுகிறது. உதாரணமாக, முதல் இந்திய தேடியந்திரம் எது எனும் கேள்விக்கு. மன்னிக்கவும் இந்த தகவல் என்னிடம் இல்லை என்கிறது.- http://start.csail.mit.edu/answer.php?query=first+indian+search+engine

இப்படி பதில் அளிக்காமல், கூகுள் இணையத்தில் அல்லாட விடுவது பற்றி தனியே எழுதியிருக்கிறேன்.

நிற்க, ஸ்டார்ட் கேள்வி பதில் பற்றி இன்னொரு விஷயம். வேர்டு என்றால் என்ன எனும் கேள்வியை இதனிடம் கேட்டால், மொழியியல் நோக்கில், பேசு மொழியின் வார்த்தை என்பது, தனித்தனியே உச்சரிக்க கூடிய ஒலியன்களின் (phonemes ) சிறிய அளவிலான வரிசைத்தொடர் என பதில் அளிக்கிறது. இது விக்கிபீடியா அளிக்கும் தகவல் என சுட்டிக்காப்பட்டுகிறது.

அதே நேரத்தில், நான் அறிந்த 41 வேர்டுகள் இருக்கின்றன, அவற்றை பட்டியலிட்டட்டுமா என்றும் கம்பீரமாக கேட்கிறது. அந்த பட்டியலை கிளிக் செய்தால், பல்வேறு பொருள்களில் வேர்டு எனும் சொல்லுக்கான பொருளை அறியலாம்.  ( விக்கிபீடியா பட்டியல் தான் என்றாலும் நச் என்று இருக்கிறது).

ஆனால், கூகுளில் வேர்டு என ஒற்றை சொல்லைத்தேடினால், மைக்ரோசாப்ட் வேர்டை முதலில் காட்டுகிறது. மைக்ரோசாப்ட் பிங்கும் இதை தான் செய்கிறது.

நிற்க, இந்த பதிவின் நோக்கம், கம்ப்யூட்டர் நோக்கில் வேர்டு எனும் வார்த்தைக்கான விளக்கம் பற்றி விவரிப்பது. அடுத்த பதிவில் அதை பார்க்கலாம். இப்போதைக்கு ஸ்டார்ட் தேடியந்திர அமைப்பை பயன்படுத்திப்பாருங்கள்.- http://start.csail.mit.edu/index.php

ஸ்டார்ட் கேள்வி பதில் சேவை பற்றி இணைய மலர் மின்மடலில் எழுதிய அறிமுகம் இது: புதிய, பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்யும் இணைய மலர் மின்மடல் சேவையில் இணையுங்கள்:: https://cybersimman.substack.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *