வேர்டு என்பதற்கு தமிழில், வார்த்தை அல்லது சொல் என பொருள் கொள்ளலாம். ஆனால், கம்ப்யூட்டர் உலகை பொருத்தவரை வேர்டு என்பது வேறு விஷயங்களையும் குறிக்கும். பரவலாக அறியப்பட்ட மைக்ரோசாப்டின் வேர்டு மென்பொருள் தவிர, முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய வேறு சில விஷயங்களும் இருக்கின்றன.
ஆனால், இந்த இடத்தில் குறிப்பிடுவது, கம்ப்யூட்டர் கட்டுமானத்தில் வேர்டு என்பது எந்த பொருளில் பயன்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுவதற்கு தான்.
கணிணியியலில் (computing ) வேர்டு என்றால், குறிப்பிட்ட செயல்தொகுப்பு முறையில் பயன்படுத்தப்படும் இயற்கையான அடிப்படை அலகு என்று விக்கிபீடியா இதற்கு விளக்கம் தருகிறது. அதாவது, ஒரு அலகாக கம்ப்யூட்டர் கையாளக்கூடிய குறைந்த பட்ச தரவின் அளவை இது குறிக்கிறது. எனவே தரவலகு என வைத்துக்கொள்ளலாம்.
இதற்கான விளக்கத்தை மேற்கொண்டு பார்ப்பதற்கு முன், கணிணியியலுக்கான அடிப்படை அலகுகளான பிட் பற்றி தெரிந்து கொள்வோம். பிட் என்றால் எண்மத்துகள் என பொருள். பைனரி டிஜிட் என ஆங்கிலத்தில் சொல்கின்றனர்.
கம்ப்யூட்டரை எண்ணற்ற விதங்களில் பயன்படுத்தலாம் என்றாலும் அதனுடன் பூஜ்ஜியம் ( 0) அல்லது ஒன்று (1 ) எனும் இரிலக்க மொழியில் தான் பேசியாக வேண்டும். இந்த குறியீடுகளை தான் பைனரி டிஜிட் என்கின்றனர்.
கம்ப்யூட்டர் நிகழ்த்தும் எல்லா மாயங்களும், இந்த இரிலக்கங்களால் தான் நிகழ்கின்றன.
பூஜ்ஜியம் மற்றும் ஒன்று கணிணியலுக்கான அடிப்படை அலகு என்றால், அவற்றின் தொகுப்பு பைட் எனப்படுகிறது. பைட் என்றால், எட்டு பைனரி இலக்கங்களை குறிக்கும் . இவற்றின் பெருக்கல்களே மெகாபைட்களாகவும், ஜிபிக்களாகவும் அறியப்படுகின்றன.
நிற்க, கம்ப்யூட்டரில் உள்ள பிராசஸர் எனப்படும் சிலிக்கான சிப், நாம் ஆணத்தொடர்களாக இடும் கட்டளைகளை எல்லாம் பைனரி இலக்கங்களாக தான், ஆனால் அதிவேகமாக கையாள்கிறது.
இப்படி ஒரே நேரத்தில் கம்ப்யூட்டரின் பிரசாஸர் கையாளக்கூடிய அடிப்படை அலகை தான் வேர்டு என்கின்றனர். இது எட்டு இலக்கமாக ( பைட்) இருக்கலாம் அல்லது 16 இலக்கமாக இருக்கலாம். இதனடைப்படியில் குறிப்பிட்ட அந்த கட்டுமானம் அமைகிறது. அதாவது, குறிப்பிட்ட அந்த கம்புயூட்டர் தனக்கான தகவல்களை, எட்டு எட்டு இலக்கங்களாக அல்லது பதினாறு இலக்கங்களாக கையாள்வது என பொருள்.
இப்படி ஒரு நேரத்தில் ஒரு இலக்கம் மட்டுமே கையாளும் திறன் கொண்ட கம்ப்யூட்டர் கட்டுமானமும் இருக்கிறது. சிங்கில் பிட் பிராசஸர் என இது குறிப்பிடப்படுகிறது.
–
பி.கு: சுஜாதா எழுதியுள்ள ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள் புத்தகத்தில், வேர்டு என்பதற்கான பொருள் பற்றி எழுதி, சிங்கில் பிட் கம்ப்யூட்டர் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். என்னது, சிங்கில் பிட் கம்ப்யூட்டரா? எனும் வியப்புடன் தேடிப்பார்த்த போது, தான் கம்ப்யூட்டர் கட்டுமானத்தின் அடிப்படையில் இது பொருள் கொள்ளப்படுகிறது என புரிந்தது.
–
பி.கு: இணையதள அறிமுகத்தில் ஆய்வின் முக்கியத்துவத்தை விளக்கும் பதிவு இன்றைய இணைய மலர் மின்மடலில் இடம்பெறுகிறது. புதிய தளங்களை அறிய இணைய மலர் மின்மடலில் இணையுங்கள்: