கோவையின் கியர் மனிதர் எனும் மாமனிதர்

sசிம்ப்ளிசிட்டி இணையதளம் பற்றி எப்போதாவது எழுத வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். அண்மையில் மறைந்த சாந்தி கியர்ஸ் நிறுவனர் பி.சுப்பிரமணியம் பற்றி அருமையான விதத்தில் செய்தி வெளியிட்டிருந்ததை அடுத்து, இப்போது சிம்ப்ளிசிட்டி பற்றி அறிமுகம் செய்துவது பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்.

சிம்ப்ளிசிட்டி இணையதளம் தொடர்பான அறிமுகத்தை, இணைய மலர் மின்மடலில் வாசிக்கலாம். இப்போதைக்கு, பி.சுப்பிரமணியம் பற்றி பார்க்கலாம். சுப்பிரமணியம் கோவையின் கியர் மனிதர் என அழைக்கபப்டுகிறார். அதைவிட முக்கியமாக, இவர் மாமனிதர் என அழைக்கப்பட வேண்டியவர்.

ஆனால், இப்படி சொல்வதை அவர் விரும்பியிருப்பாரா எனத்தெரியவில்லை. உண்மையில், அவர் தன்னைப்பற்றி செய்தியோ, தகவல்களோ வெளியிடப்படுவதை விரும்பியதேயில்லை. ஆனால், அதிக ஆரவாரம் இல்லாமல் மற்றவர்களால் போற்றபட வேண்டிய செயல்களை, மற்றவர்களுக்காக செய்து கொண்டிருந்தார்.

சாந்தி கியர்ஸ் என்பது கோவையின் புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களில் ஒன்று. தரமான தயாரிப்பு மற்றும் செயல்பாட்டிற்காக அறியப்படுவது. பின்னர் அந்நிறுவனம் முருகப்பா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டது.

சாந்தி கியர்ஸ் நிறுவனத்தை உருவாக்கியதற்காக தான், சுப்பிரமணியன் கியர் மனிதர் என அழைக்கப்படுகிறார். ஆனால், அவர் சாந்தி கியர்ஸில் காட்டிய ஊக்கத்தைவிட, பன்மடங்கு ஊக்கத்தை அதன் பிறகு அவர் துவக்கிய சாந்தி சமூக சேவை அறக்கட்டளை செயல்பாடுகளில் காண்பித்திருக்கிறார்.

மனைவி மறைவுக்கு பின், அவரது பெயரில் இந்த அறக்கட்டளையை துவக்கி சுப்பிரமணியன் தன்னை சமூக சேவையில் மூழ்கடித்துக்கொண்டதாக தெரிகிறது. மருத்துவமனை அமைத்து மிக குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வழி செய்திருக்கிறார். அங்கு நடத்தப்பட்ட கேண்டீனில் 5 ரூபாய்க்கு காலை உணவும், 10 ரூபாய்க்கு மதிய உணவும் தரமான முறையில் கிடைக்க வழி செய்திருக்கிறார்.

லாபம், லாபம் என ஓடாமல், தொழிலில் தான் ஈட்டிய செல்வத்தை எல்லாம் சமூக நலனுக்காக பயன்படுத்தியிருக்கிறார்.

இவை எல்லாம் இணையத்தில் செய்திகளாக கிடைக்கின்றன. ஆனால்,அதிகம் தெரியாத தகவல், சுப்பிரமணியம் தன்னைப்பற்றிய தகவல்கள், குறிப்பாக சமூக நலப்பணிகளில் தன் பங்கு பற்றி பிரபலம் செய்யப்படுவதை அறவே விரும்பாமல் இருந்திருக்கிறார் என்பது தான்.

இந்த தகவலை சிம்ப்ளிசிட்டி தளம் அழகாக படம் பிடித்துக்காட்டியிருக்கிறது. எளிமையான மனிதராக வாழ்ந்து மறைந்தவர், தனது மரணத்தின் போதும் அதே எளிமையை கடைப்படித்ததாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

ஆம், சுப்பிரமணியன் தான் இறந்த செய்தி கூட, ஊழியர்களுக்கு சொல்லப்படாமல் இறுதிச்சடங்கு செய்யப்பட வேண்டும் என விரும்பியிருக்கிறார். அதன் படியே அவரது இறுதிச்சடங்கு நடந்துள்ளது. எறியூட்டப்பட்டது அவரது உடல் தான் என்பதை கூட அறியாமலேயே அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது.

இந்த தகவல்களை எல்லாம் எல்லாம் சிம்ப்ளிசிட்டி செய்தியில் படிக்கும் போது, இப்படி ஒரு மானமனிதரா என வியக்கமால் இருக்க முடியவில்லை.  அந்த கியர் மனிதர் இந்த செய்தியை விரும்பா மட்டார் என்றாலும் கூட, இதை பதிவு செய்யத்தோன்றுகிறது. – https://simplicity.in/coimbatore/english/news/74788/The-simplicity-of-SSS-Trustee-during-his-demise-a-heart-melting-story

மன்னியுங்கள் சுப்பிரமணியன், உங்களைப்பற்றி சிறு குறிப்பேனும் எழுத தான் வேண்டும் என்பதால் இந்த பதிவு,

இந்த செய்தியை பதிவு செய்து, உள்ளூர் செய்தி தளத்தின் அருமையை உணர்த்தியதற்காக சிம்ப்ளிசிட்டி பற்றிய அறிமுகம் இணையமலர் மின்மடலில் இடம்பெறுகிறது!.

கியர்மனிதர் பற்றி நாம் பேசாவிட்டாலும், அவரது சமூக சேவைகள் பற்றி பேசுவோம்: http://shanthisocialservices.org/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *