கழுத்தை நெறிக்கும் டிஜிட்டல் கடன் வலை !

இந்தியாவில் இப்போது பணபரிவர்த்தனையை டிஜிட்டல் முறையில் மேற்கொள்வது எளிதாகி இருக்கிறது. மொபைல் செயலிகள், டிஜிட்டல் வாலெட்கள், யுபிஐ சார்ந்த சேவைகள் வாயிலாக, டிஜிட்டல் முறையில் பணம் அனுப்பவும், பெறவும் முடிகிறது.

இப்படி டிஜிட்டல்மயமாகி இருப்பது பண பரிவர்த்தனை மட்டும் அல்ல, கடன் வசதியும் தாம். ஆம், இப்போது டிஜிட்டல் கடன் பெறுவது எளிதாகி இருக்கிறது. பல்வேறு இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் டிஜிட்டல் கடன் வழங்குகின்றன.

அடிப்படையில் பார்த்தால், டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் கடன்கள் டிஜிட்டல் கடன்கள் என குறிப்பிடப்படுகின்றன. இந்த வசதியை அளிக்கும் முன் மேற்கொள்ளப்படும் கடன் தகுதி ஆய்வும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுவதாக புரிந்து கொள்ளலாம்.

இந்த வகை கடன்கள், உடனடி கடன்கள், சாஷே கடன்கள் என பலவகையாக வர்ணிக்கப்படுகின்றன. பாரம்பரிய வங்கிகள் போல அதிக கெடுபிடி இல்லாமல், மிக எளிதாக வழங்கப்படுவது டிஜிட்டல் கடன் வசதியின் சாதகமான அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இருண்ட பக்கம்

ஆனால், டிஜிட்டல் கடன் வசதிக்கு இன்னொரு பக்கம் இருப்பதும், அந்த பக்கமும் இருண்ட பக்கமாக இருப்பது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கின்றன.

டிஜிட்டல் கடன் செயலிகள் எளிதாக கடன் கொடுத்து ஈர்த்தாலும், அதன் பிறகு கடன் வலையில் சிக்க வைப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல், கொடுத்த கடனை வசூலிக்க, இந்த செயலிகள் டிஜிட்டல் மிரட்டல் உள்ளிட்ட வழிகளில் ஈடுபடுவதாகவும் புகார்கள் குவிந்து வருகின்றன.

டிஜிட்டல் கடன் செயலிகளில் சில, கொடுத்த கடனை வசூலிக்க பின்பற்றுவதாக சொல்லப்படும் வழிமுறைகள் திகைக்க வைக்கின்றன.  அதிக கேள்விகள் இல்லாமல் கடன் வழங்கும் செயலிகள், விண்ணப்பிக்கும் போது பயனாளிகளின் போன் தொடர்புகள் மற்றும் மேசேஜ் வசதியை அணுகுவதற்கான அனுமதி கேட்டு பெறுகின்றன.

கடன் தொகையை செலுத்த தவறும் போது அல்லது தாமதமாகும் போது, கடன் வசூலிப்பு பிரதிநிதிகள், கடன் பெற்றவர்களை தொடர்பு கொண்டு மிரட்டத்துவங்குகின்றனர்.

அடுத்த கட்டமாக, போன் தொடர்பில் உள்ள நெருக்கமானவர்களை தொடர்பு கொண்டு கடன் விவரத்தை கூறி மோசமாக பேசுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கடன் பெற்றவரை அவமானத்திற்குள் உள்ளாக்கி கடனை திரும்பிச்செலுத்த வைப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து குவியும் புகார்கள் தெரிவிக்கின்றன.

குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் சொல்லிவிடுவோம் என மிரட்டுவதும் வாடிக்கையாக இருப்பதாக அறிய முடிகிறது. அதோடு, வாட்ஸ் அப் அல்லது குறுஞ்செய்தி வாயிலாகவும் ஏஜெண்ட்கள் மிரட்டலில் ஈடுபட்டு அவமானப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது. பொய்யான நோட்டீஸ் போன்றவற்றையும் அனுப்பி வைத்து மிரட்டுகின்றனர்.

தற்கொலை சோகம்

குறுஞ்செய்தி மூலம் போனை முடக்கும் வைரசை அனுப்பி வைப்போம் என்றும் மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மும்பையைச்சேர்ந்த கடன்தாரர் ஒருவர் இப்படி தன் போனுக்கு, வைரஸ் மிரட்டல் வந்த பிறகு நூற்றுக்கணக்கான குப்பை செய்திகள் வந்து குவிந்ததால் மிரண்டு போய் போனை மாற்றி கடன் வாங்கி கடனை அடைத்ததாக கூறியிருக்கிறார்.

பெண்கள் மற்றும் இளைஞர்கள் இந்த வகை மிரட்டல்களால் எளிதாக நிலைய குலைய வைக்கப்படுகின்றனர்.

மேலும், கொடுத்த கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதமும் கந்து வட்டி போலவே எகிர்கிறது என்கின்றனர். குறிப்பிட்ட காலத்தில் பணத்தை செலுத்தாத போது, வார அடிப்படையிலும், நாள் அடிப்படையிலும் வட்டி வட்டி மேல் போடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவைத்தவிர, செயல்முறை கட்டணம், அதன் மீதான ஜிஎஸ்டி என்றும் பணத்தை பிடித்துக்கொள்கின்றனர்.

இதில் கொடுமை என்னவென்றால், இந்த டிஜிட்டல் கடனை அடைக்க பலரும், வேறு ஒரு டிஜிட்டல் செயலியில் இருந்து கடன் பெறுவது தான். இப்படி மாறி மாறி கடன் வாங்கி கடனை அடைத்துக்கொண்டிருக்கும் அப்பாவிகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் கடன் வலையில் சிக்கித்தவிப்பவர்கள், மிரட்டல், அவமானம் உள்ளிட்ட டிஜிட்டல் துன்புறுத்தலுக்கு இலக்காகி மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்பவதும் நிகழ்கின்றன.

அண்மை மாதங்களில் மட்டும் தெலுங்கானாவிலும், ஆந்திராவில் ஒரு சிலர் இப்படி தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். வட மாநிலங்கள் மற்றும் தமிழகத்திலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டிஜிட்டல் கடன் வலை

டிஜிட்டல் கடன் வழங்கும் செயலிகள் நூற்றுக்கணக்கில் பெருகியிருப்பதும், இவற்றில் பல டிஜிட்டல் கடன் வலை விரித்து, கடன்தாரர்களை பலவிதமாக மிரட்டி பணத்தை செலுத்த வைப்பதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை செயலிகள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக விளம்பரங்கள் மூலமாக பயனாளிகளை தங்கள் வலையில் விழ வைக்கின்றன.

டிஜிட்டல் கடன் செயலிகள் திடிரென பெருகியது எப்படி? இந்த வகை செயலிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது ஏன்? போன்ற கேள்விகள் எழுந்தாலும், இவற்றுக்கான பதில்கள் சிக்கலானவை. டிஜிட்டல் கடன் எனும் நவீன கடன் வசதி அடிப்படையில் சாதகமானதே.

பொதுவாக, உரிய உரிமம் பெற்றிருக்கும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மட்டுமே டிஜிட்டல் கடன் வசதியை வழங்கலாம். வங்கி அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்களின் விநியோகிஸ்தராக ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்களும் இந்த வசதியை வழங்கலாம். இந்த வகையில் பல நிறுவனங்கள் முறையாகவே செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் சில நிறுவனங்கள் தவறான வழிகளை பின்பற்றுவதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான புகார்கள் எழுந்ததை அடுத்து, கடந்த ஜூன் மாதம், டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. கடன் ஒப்பந்தங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் அனைத்து டிஜிட்டல் கடன் வசதி நிறுவனங்கள் பெயர்களையும் குறிப்பிட வேண்டும் என்பது உள்பட பல் நெறிமுறைகள் வலியுறுத்தப்பட்டன.

போலி செயலிகள்

ஆனால், கூகுள் பிளேஸ்டோரில் காணக்கிடைக்கும் டிஜிட்டல் கடன் செயலிகளில் பல வங்கி அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்கள் எவற்றுடனும் எந்தவித தொடர்பில்லாதவை, டிஜிட்டல் கடன் வசதி மோகத்தை பயன்படுத்தி எளிதாக பணத்தை சுருட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றன.  இந்த செயலிகள் பலவற்றில் அவற்றின் இணையதளம் அல்லது தொடர்பு முகவரி கூட இல்லாமல் இருப்பதாக டிஜிட்டல் செயல்பட்டாளர்கள் கூறுகின்றனர்.

இந்த போலி செயலிகளிடம் தான் ஏமாறுபவர்களும் அதிகம் இருக்கின்றனர். போலி செயலிகளில் பல சீனத்தொடர்பு கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செயலிகள் தரவுகளை சேகரிப்பது தொடர்பாகவும் புகார்கள் இருக்கின்றன.

முறையாக அனுமதி பெற்ற செயலிகள், கடன் வசூலிப்பில் தவறாக நடந்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வது ரிசர்வ் வங்கியின் பொறுப்பு என்றாலும், போலி செயலிகளை எப்படி கட்டுப்படுத்துவது என்பது பிரச்சனையாக இருக்கிறது.

யார் பொறுப்பு?

போலி டிஜிட்டல் கடன் செயலிகள் தொடர்பான புகார்களை அடுத்து, பிளேஸ்டோரில் இருந்து கூகுள் அண்மையில் கூட ஐந்து மோசடி செயலிகளை நீக்கியுள்ளது. எனினும் இந்த நடவடிக்கை போதாது என்று டிஜிட்டல் செயல்பாட்டாளர்கள் கருதுகின்றனர். ரிசர்வ் வங்கியும் தன் பங்கிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

அதே நேரத்தில், போலி செயலிகள் தொடர்பான விழிப்புணர்வும் அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ஒரு செயலியை தரவிறக்கம் செய்யும் முன், அந்த செயலியின் உண்மையான தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்கின்றனர். செயலியின் அலுவலக தொடர்பு முகவரி, சக பயனாளிகளின் கருத்து உள்ளிட்ட அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர்.

வால்; டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதியை பொருத்தவரை ஆப்பிரிக்க நாடான கென்யா தான், உலகிற்கே முன்னோடி என கருதப்படுகிறது. அந்நாட்டில் அறிமுகமான எம்-பெசா சேவை தான் மொபைல் பணத்தின் மூலமாக கருதப்படுகிறது. டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு முன்னோடியான கென்யாவில், டிஜிட்டல் கடன் வசதி சேவைகளும் பிரபலமாக இருக்கின்றன. ஆனால், கென்யாவிலும் கூட, டிஜிட்டல் கடன் செயலிகளில் பல, கடன் தாரர்களிடம் இருந்து பணம் வசூலிக்க டிஜிட்டல் அவமானத்தை ஒரு வழியாக பயன்படுத்துவது பெரும் சர்ச்சைக்குறியதாக இருப்பதை அறிய முடிகிறது. உண்மையில் டிஜிட்டல் கடன் வசதி என்பது, பாரம்பரிய வங்கிச்சேவை பெற முடியாதவர்களுக்கும் நிதிச்சேவை மற்றும் கடன் வசதி அளிக்கும் நோக்கத்தின் ஒரு அங்கமாக உருவானது என்பதை மனதில் கொண்டு பார்த்தால், இந்த திசை மாற்றம் வேதனையை அளிப்பதை உணரலாம். ஆக, டிஜிட்டல் கடனால் பாதிக்கப்பட்டவர்களை மட்டும் அல்ல, டிஜிட்டல் கடனையும் மோசடியாளர்களிடம் இருந்து மீட்பது முக்கியம்!

தமிழ் இந்து நாளிதழில் வெளியான கட்டுரையும் முழு வடிவம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *